#AUSvsIND 2வது டெஸ்ட்: அவரைத்தான் ஓபனிங்ல இறக்கணும்; ஆனால் இந்திய அணி இவரைத்தான் இறக்கும்..!
First Published Dec 24, 2020, 4:57 PM IST
ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரர் குறித்து முன்னாள் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் படுமோசமாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.

குறிப்பாக தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறிவிட்டனர். மயன்க் அகர்வாலாவது பரவாயில்லை; பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான விதம் அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் பிரச்னையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?