#AUSvsIND டெஸ்ட்: மிகச்சிறந்த வீரருக்கே இந்திய அணியில் இடமில்லை..!
First Published Dec 14, 2020, 8:15 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பதால், தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்துவருகிறது. மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவது உறுதி. அவருடன் இறங்கப்போவது யார் என்பதுதான் கேள்வி.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?