MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Tirupati Venkateswara: ஏழுமலையான் தாடையில் ஏன் கற்பூரம் பூசப்படுகிறது? கோயில் சுவரில் இரும்புக் கடப்பாரை! இரண்டிற்கும் என்ன தொடர்பு ?

Tirupati Venkateswara: ஏழுமலையான் தாடையில் ஏன் கற்பூரம் பூசப்படுகிறது? கோயில் சுவரில் இரும்புக் கடப்பாரை! இரண்டிற்கும் என்ன தொடர்பு ?

Tirupati Venkateswara: திருமலை ஏழுமலையானின் தாடையில் ஏன் பச்சைக் கற்பூரம் பூசப்படுகிறது? கோவில் சுவரில் அனந்தாழ்வாரின் இரும்புக் கடப்பாரை ஏன் உள்ளது? பெருமாளே சிறுவனாக வந்ததாகக் கூறப்படும் சுவாரஸ்யமான வரலாற்றையும், பின்னணியையும் தெரிந்துகொள்ளலாம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 24 2026, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
ஏழுமலையான் தாடையில் ஏன் கற்பூரம் பூசப்படுகிறது?
Image Credit : pinterest

ஏழுமலையான் தாடையில் ஏன் கற்பூரம் பூசப்படுகிறது?

திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும்போது பக்தர்களின் பார்வையை ஈர்க்கும் ஒரு விஷயம், அவரது தாடைப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற பச்சைக் கற்பூரம். அதேபோல் திருக்கோயிலின் மகாத்வாரப் பகுதியில் பழமையான இரும்புக் கடப்பாரை ஒன்றும் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சாதாரணமாகத் தோன்றும் இந்த இரண்டு விஷயங்களையும் இணைத்து, ஸ்ரீ ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வாரின் பக்தியை எடுத்துரைக்கும் சுவாரஸ்யமான கதை திருமலையில் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வருகிறது.

ஏழுமலையானின் தாடையில் ஏன் கற்பூரம் பூசப்படுகிறது? அந்தக் கடப்பாரைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் பக்தி, சேவை, கோபம், இறுதியில் இறைவனை உணர்ந்த நெகிழ்ச்சி என ஒரு சுவாரஸ்யமான ஆன்மிகக் கதை மறைந்திருக்கிறது. அந்தத் தல மரபுக் கதையை இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
யார் இந்த அனந்தாழ்வார்?
Image Credit : Gimini Ai

யார் இந்த அனந்தாழ்வார்?

ஸ்ரீவைஷ்ணவ மரபில் முக்கியமான பக்தராகப் போற்றப்படும் அனந்தாழ்வார் ஸ்ரீ ராமானுஜரின் சீடர்களில் ஒருவர். திருமலையில் பெருமாளுக்குப் பூக்களால் சேவை செய்யும் ‘புஷ்ப கைங்கரியம்’ செய்தவர் என்ற பெருமை அனந்தாழ்வாருக்கு உண்டு.

தல மரபின்படி, ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தனது சீடர்களிடம், பெருமாள் அலங்காரப் பிரியர் என்பதால், திருமலையில் ஏழுமலையானுக்காக நந்தவனம் அமைத்து தினமும் மலர் கைங்கரியம் செய்ய யார் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அனந்தாழ்வார், தனது மனைவியுடன் திருமலைக்குச் சென்று அங்கேயே தங்கி, பெருமாளுக்காக மலர்கள் வளர்க்க நந்தவனம் அமைக்கும் பணியைத் தொடங்கினார்.

39
நந்தவனத்திற்கு தண்ணீர் வேண்டும்..குளம் வெட்டிய அனந்தாழ்வார்!
Image Credit : Gimini Ai

நந்தவனத்திற்கு தண்ணீர் வேண்டும்..குளம் வெட்டிய அனந்தாழ்வார்!

செடிகளையும், மலர்களையும் வளர்க்க வேண்டுமென்றால் தண்ணீர் அவசியம் என்பதை உணர்ந்த அனந்தாழ்வார், ஒரு குளத்தைத் தோண்ட முடிவு செய்தார். இது தனது குரு கொடுத்த வேலை என்பதால், அந்தப் பணியை தானும் தனது மனைவியும் மட்டுமே செய்து முடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அனந்தாழ்வார் மண்ணைத் தோண்ட, அவரது மனைவி தோண்டப்பட்ட மண்ணை எடுத்துச் சென்று கொட்டும் பணியைச் செய்தார். அப்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.

49
பக்தனுக்கு உதவ 12 வயது சிறுவனாக வந்த ஏழுமலையான்
Image Credit : Gimini Ai

பக்தனுக்கு உதவ 12 வயது சிறுவனாக வந்த ஏழுமலையான்

அனந்தாழ்வாரும் அவரது மனைவியும் நந்தவனம் அமைக்க கடுமையாக உழைப்பதைப் பார்த்த ஏழுமலையான், அவர்களுக்கு உதவ 12 வயது சிறுவன் உருவில் முன்வந்தாராம். ஆனால், இது என் ஆசார்யர் எனக்கு அளித்த வேலை, இதை நாங்களே செய்து முடிப்போம் என்று அனந்தாழ்வார் சிறுவனின் உதவியை மறுத்துவிட்டார்.

ஆனாலும் அந்தச் சிறுவன் விடவில்லை. அனந்தாழ்வார் பார்க்காத நேரத்தில், மண்ணைச் சுமக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது மனைவிக்கு உதவத் தொடங்கினான். தனது பக்தனுக்கே தெரியாமல், பக்தனின் பணியில் பங்கெடுக்க பெருமாளே சிறுவனாக வந்ததாகக் கூறப்படும் இந்த நிகழ்வில்தான் அடுத்து எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

59
கோபத்தில் கடப்பாரையை வீசிய அனந்தாழ்வார்
Image Credit : Gimini Ai

கோபத்தில் கடப்பாரையை வீசிய அனந்தாழ்வார்

ஒரு கட்டத்தில் அந்தச் சிறுவன் தனது மனைவிக்கு உதவுவதை அனந்தாழ்வார் பார்த்துவிட்டார். தான் மறுத்தும் தொடர்ந்து உதவுகிறானே என்ற கோபத்தில், கையில் இருந்த கடப்பாரையை சிறுவனை நோக்கி வீசியதாக தல மரபு கூறுகிறது. அது சிறுவனின் தாடையில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில், அவன் திடீரென அங்கிருந்து மறைந்ததாக ஐதீகம் கூறுகிறது.

69
கோயிலுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி
Image Credit : Gimini Ai

கோயிலுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி

அதன்பிறகு ஏழுமலையானை தரிசிப்பதற்காக அனந்தாழ்வார் கோயிலுக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூலவர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் தாடையில் இருந்து ரத்தம் வழிந்தது. அப்போதுதான் அனந்தாழ்வாருக்கு உண்மை புரிந்தது.

தனக்கும் தனது மனைவிக்கும் உதவி செய்ய வந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, சாட்சாத் ஏழுமலையான்தான் என்பதை அனந்தாழ்வார் உணர்ந்தார். தான் அறியாமல் பெருமாளையே கடப்பாரையால் தாக்கிவிட்டதை உணர்ந்த அனந்தாழ்வார் மிகுந்த வருத்தமடைந்து மன்னிப்பு வேண்டியதாக மரபு கூறுகிறது.

79
பெருமாளின் தாடையில் ஏன் பச்சைக் கற்பூரம்?
Image Credit : pinterest

பெருமாளின் தாடையில் ஏன் பச்சைக் கற்பூரம்?

காயமடைந்த பெருமாளின் தாடைப் பகுதியில் அனந்தாழ்வார் பச்சைக் கற்பூரத்தைப் பூசி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அனந்தாழ்வாரின் ஆழ்ந்த பக்தியையும் , உணர்வையும் ஏற்றுக்கொண்ட பெருமாள், அந்த நிகழ்வின் நினைவாக தனது தாடையில் கற்பூரம் பூசும் மரபு தொடர அருளியதாக நம்பப்படுகிறது.

அதன் அடையாளமாகவே இன்றும் திருமலை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் தாடைப் பகுதியில் பச்சைக் கற்பூரம் பூசப்படுவதாக தல மரபு கூறுகிறது. ஏழுமலையானின் தாடையில் காணப்படும் அந்த வெள்ளை அடையாளம் வெறும் அலங்காரம் மட்டுமல்ல. பக்தனுக்கும் பெருமாளுக்கும் இடையிலான உறவை நினைவுபடுத்தும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

89
அந்தக் கடப்பாரை இன்றும் திருப்பதி கோயிலில் இருக்கிறதா?
Image Credit : Gimini Ai

அந்தக் கடப்பாரை இன்றும் திருப்பதி கோயிலில் இருக்கிறதா?

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அனந்தாழ்வாரின் இரும்புக் கடப்பாரை இன்றும் திருமலை ஸ்ரீவாரி கோயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக TTD குறிப்பிடுகிறது. கோயில் வரலாற்றுப் பதிவின்படி, இந்தக் கடப்பாரை பிரதான நுழைவாயிலின் வடக்குச் சுவரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஏழுமலையானின் தாடையில் காணப்படும் பச்சைக் கற்பூரமும், கோயில் சுவரில் இருக்கும் இரும்புக் கடப்பாரையும் அனந்தாழ்வாரின் பக்தி மற்றும் கைங்கரியத்தை நினைவூட்டும் அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன.

99
பக்தர்களுக்கு இந்தக் கதை சொல்லும் செய்தி
Image Credit : pinterest

பக்தர்களுக்கு இந்தக் கதை சொல்லும் செய்தி

அனந்தாழ்வாரின் கதை, குரு கொடுத்த வேலையை எந்தச் சிரமம் வந்தாலும் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதி, இறைவனுக்குச் செய்யும் சேவையில் கொண்ட ஈடுபாடு, தவறு புரிந்தவுடன் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் பணிவு ஆகியவற்றை எடுத்துரைக்கும் தல மரபாக இது பார்க்கப்படுகிறது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆன்மீகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Purattasi Pournami: பெருமாள் முதல் சிவன் வரை..புரட்டாசி பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய ஆன்மிக வழிபாடுகள்!
Recommended image2
Uma Maheshwara viratham: சிவன் - பார்வதியை ஒன்றாக வழிபடும் உமா மகேஸ்வர விரதம்..இதன் பின்னால் இப்படி ஒரு புராணக் கதையா?
Recommended image3
Temple Bell: கோயிலுக்கு போனதும் ஏன் மணி அடிக்கிறோம்? 99% பேருக்கு இந்த உண்மை தெரியாது!
Related Stories
Recommended image1
Uma Maheshwara viratham: சிவன் - பார்வதியை ஒன்றாக வழிபடும் உமா மகேஸ்வர விரதம்..இதன் பின்னால் இப்படி ஒரு புராணக் கதையா?
Recommended image2
Purattasi Pournami: பெருமாள் முதல் சிவன் வரை..புரட்டாசி பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய ஆன்மிக வழிபாடுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved