MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Purattasi Pournami: பெருமாள் முதல் சிவன் வரை..புரட்டாசி பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய ஆன்மிக வழிபாடுகள்!

Purattasi Pournami: பெருமாள் முதல் சிவன் வரை..புரட்டாசி பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய ஆன்மிக வழிபாடுகள்!

Pournami: புரட்டாசி பௌர்ணமி செப்டம்பர் 26 ஆம் தேதி வருகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. பெருமாள், சிவன், அம்மன், சந்திர வழிபாடு முதல் விரதம், தானம் வரை பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகளை பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 24 2026, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புரட்டாசி மாதத்திலேயே பௌர்ணமி..அதுவும் சனிக்கிழமையில்!
Image Credit : Pinterest + Gimini ai

புரட்டாசி மாதத்திலேயே பௌர்ணமி..அதுவும் சனிக்கிழமையில்!

மாதம் ஒருமுறை வானில் பால் நிலவாக ஜொலிக்கும் பௌர்ணமி நாளுக்கு ஆன்மிகத்தில் தனிச்சிறப்பு உண்டு. ஆனால் இந்த முறை வரும் புரட்டாசி பௌர்ணமி பக்தர்களின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்த்துள்ளது. காரணம், பெருமாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில், அதுவும் சனிக்கிழமையில் பௌர்ணமி அமைந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் புரட்டாசி பௌர்ணமி செப்டம்பர் 26 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. பஞ்சாங்கக் கணக்கின்படி, பௌர்ணமி திதி செப்டம்பர் 25 இரவு சுமார் 11:06 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 26 இரவு சுமார் 10:18 மணிக்கு நிறைவடைகிறது.

புரட்டாசி சனிக்கிழமையும் பௌர்ணமியும் ஒரே நாளில் வருவதால், அன்றைய தினம் பெருமாள் வழிபாடு, பௌர்ணமி பூஜை, சந்திர தரிசனம், விளக்கேற்றுதல், தானம் போன்ற ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்ள நல்ல நாளாகும்.

இந்த புரட்டாசி பௌர்ணமியில் வீட்டில் எப்படி வழிபட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கலாம்? என்னென்ன செய்யலாம்? அதன் ஆன்மிக முக்கியத்துவம் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பௌர்ணமியின் ஜோதிட முக்கியத்துவம் என்ன?
Image Credit : Pinterest

பௌர்ணமியின் ஜோதிட முக்கியத்துவம் என்ன?

ஜோதிடத்தில் சந்திரன் மனதின் காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். ஒருவரின் மனநிலை, உணர்வுகள், கற்பனைத் திறன், மன அமைதி, தாயுடனான உறவு போன்ற அம்சங்களுடன் சந்திரன் தொடர்புபடுத்தப்படுகிறார்.

அமாவாசைக்குப் பிறகு நாளுக்கு நாள் வளர்பிறையாக அதிகரிக்கும் சந்திரன், பௌர்ணமி நாளில் முழு ஒளியுடன் காட்சியளிக்கிறார். இதனால் பௌர்ணமி என்பது நிறைவு மற்றும் ஆன்மிக ஆற்றலுடன் தொடர்புடைய நாளாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.

குறிப்பாக இந்த நாளில் இறை வழிபாடு, தியானம், மந்திர ஜபம், சந்திர தரிசனம், கோவில் வழிபாடு மற்றும் தானம் போன்றவற்றை மேற்கொள்வது மன அமைதியையும், நேர்மறையான எண்ணங்களையும் அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

35
புரட்டாசி பௌர்ணமி 2026 ஏன் சிறப்பு?
Image Credit : Pinterest

புரட்டாசி பௌர்ணமி 2026 ஏன் சிறப்பு?

வருகிற சனிக்கிழமை பௌர்ணமி மட்டுமின்றி, புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையும் ஆகும். எனவே, பௌர்ணமி வழிபாட்டுடன் திருமால் அல்லது வெங்கடேசப் பெருமாளையும் வழிபட்டு துளசி அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபடலாம்.

பௌர்ணமி அன்று எந்த தெய்வத்தை வழிபடலாம்?

பௌர்ணமி அன்று ஒரே தெய்வத்தை மட்டும்தான் வழிபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குடும்ப வழக்கம் மற்றும் சம்பிரதாயத்திற்கு ஏற்ப சிவபெருமான், அம்பாள், மகாவிஷ்ணு, சத்யநாராயணர், முருகப்பெருமான் அல்லது குலதெய்வத்தை மனதார வழிபடலாம்.

தமிழகத்தில் பௌர்ணமி நாளில் சிவன், அம்மன் கோயில்களுக்குச் செல்வதும், திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வதும் முக்கிய ஆன்மிக வழக்கங்களாக உள்ளன. இந்த முறை புரட்டாசி பௌர்ணமி என்பதால், வழக்கமான பௌர்ணமி வழிபாட்டுடன் பெருமாள் வழிபாட்டுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கலாம்.

45
வீட்டில் பௌர்ணமி வழிபாடு செய்வது எப்படி?
Image Credit : Pinterest

வீட்டில் பௌர்ணமி வழிபாடு செய்வது எப்படி?

பௌர்ணமி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜை அறையைச் சுத்தம் செய்து வழிபாட்டைத் தொடங்கலாம். காலையில் அல்லது மாலையில் விளக்கேற்றி, குடும்ப வழக்கப்படி இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்.

பெருமாள் பக்தர்கள் துளசி சமர்ப்பித்து “ஓம் நமோ நாராயணாய”, "கோவிந்தா" என நாமஜபம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். சிவ பக்தர்கள் வில்வம் சமர்ப்பித்து “ஓம் நமசிவாய” என ஜபிக்கலாம். அம்மன் வழிபாடு செய்பவர்கள் மலர்கள் சமர்ப்பித்து லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட துதிகளைப் பாராயணம் செய்யலாம்.

55
சந்திர வழிபாடு எப்படி செய்வது?
Image Credit : Pinterest

சந்திர வழிபாடு எப்படி செய்வது?

பௌர்ணமி மாலையில் முழு நிலவு உதித்ததும் சந்திரனை தரிசித்து வணங்குவது பாரம்பரிய வழக்கமாகும். அப்போது சந்திர பகவானை நினைத்து “ஓம் சோம் சோமாய நம” என்ற மந்திரத்தை ஜபித்து வழிபடுவது மன அமைதியை அளிக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை.

பௌர்ணமி விரதம் எப்படி இருக்கலாம்?

பௌர்ணமி விரதம் குடும்ப சம்பிரதாயத்திற்கு ஏற்ப மாறுபடும். சிலர் முழு உபவாசம் இருப்பார்கள். சிலர் பால், பழம் அல்லது எளிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். உடல்நிலை காரணமாக உணவு, மருந்துகளைத் தவிர்க்க முடியாதவர்கள் கடுமையான விரதம் இருக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக பிரார்த்தனை, நாமஜபம் மற்றும் தானம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

என்ன நைவேத்தியம் படைக்கலாம்?

பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பாயாசம், சுண்டல் போன்ற எளிய சைவ உணவுகளை நைவேத்தியமாகப் படைக்கலாம். புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்டவற்றைப் பெருமாளுக்குப் படைக்கலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆன்மீகம்
 
6th T10 • ABDT10
Live
ARACARAC
-
RDCRDC
(8.3 ov)95/5
ARAC chose to bowl.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளி இரவில் கணக்கு புத்தகங்களுக்கு ஏன் பூஜை செய்கிறார்கள்? வணிகர்களின் பாரம்பரியம்!
Recommended image2
Diwali 2026: லட்சுமி தேவி அருளைப் பெற... தீபாவளி பூஜையில் தப்பி தவறி கூட இந்த பொருட்களை பயன்படுத்தாதீங்க!
Recommended image3
தீபாவளி + அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை.. வீட்டில் பணம் கொட்டணுமா..? இதை மிஸ் பண்ணாதீங்க..
Related Stories
Recommended image1
Uma Maheshwara viratham: சிவன் - பார்வதியை ஒன்றாக வழிபடும் உமா மகேஸ்வர விரதம்..இதன் பின்னால் இப்படி ஒரு புராணக் கதையா?
Recommended image2
Anantha Viratham: அனந்த விரதம் எப்போது? 14 முடிச்சு கயிற்றின் ரகசியம் என்ன? புராணக் கதை முதல் பலன்கள் வரை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved