MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Anantha Viratham: அனந்த விரதம் எப்போது? 14 முடிச்சு கயிற்றின் ரகசியம் என்ன? புராணக் கதை முதல் பலன்கள் வரை!

Anantha Viratham: அனந்த விரதம் எப்போது? 14 முடிச்சு கயிற்றின் ரகசியம் என்ன? புராணக் கதை முதல் பலன்கள் வரை!

Anantha Viratham: அனந்த விரதம் என்றால் என்ன? அதன் வரலாறு, சுசீலை - கௌண்டின்யர் புராணக் கதை, 14 முடிச்சுகள் கொண்ட அனந்த சூத்திரத்தின் சிறப்பு, பூஜை முறை மற்றும் விரத பலன்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 22 2026, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
அனந்த விரதம் என்றால் என்ன?
Image Credit : pinterest

அனந்த விரதம் என்றால் என்ன?

பெருமாளுக்குரிய முக்கிய விரதங்களுள் ஒன்று அனந்த விரதம். இது அனந்த சதுர்த்தசி விரதம் அல்லது ஆனந்த பத்மநாப விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் அனந்த பத்மநாபராக மகாவிஷ்ணு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனந்தா என்றால் முடிவில்லாத என்று பொருள். முடிவில்லாத அல்லது எல்லையற்ற நன்மைகளையும், ஆனந்தத்தையும் தரக் கூடிய விரதமாகும். இந்த விரதத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கை கொண்டதாகவே இருக்கும்.

அனந்த பத்மநாப விரதத்தை தொடர்ந்து 14 ஆண்டுகள் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் அனுஷ்டித்து வந்தால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், துன்பங்கள், தடைகள் மற்றும் பல்வேறு சிக்கல்கள் படிப்படியாக நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகும் என்பது ஐதீக நம்பிக்கையாகும். குறிப்பாக 14 முடிச்சுகளைக் கொண்ட ‘அனந்த சூத்திரம்’ கட்டிக்கொள்வது இந்த வழிபாட்டின் முக்கிய அடையாளமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
அனந்த சதுர்த்தசி என்றால் என்ன?
Image Credit : pinterest

அனந்த சதுர்த்தசி என்றால் என்ன?

பெருமாள் சயன கோலத்தில் பார்க்கடலில் சயனித்தபோது, அவரது நாபிக் கமலத்தில் இருந்து தாமரை தோன்றி அதிலிருந்து பிரம்ம தேவர் அவதரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற நாளே அனந்த சதுர்த்தசி எனப்படுகிறது.

அனந்த விரதம் எப்போது?

2026 ஆம் ஆண்டு அனந்த சதுர்த்தசி வருகிற செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை வருகிறது. சதுர்த்தசி திதி செப்டம்பர் 24 இரவு 11:18 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 25 இரவு 11:07 மணி வரை நீடிக்கிறது.

37
அனந்த விரதத்தின் பின்னால் சொல்லப்படும் முக்கிய புராணக் கதை
Image Credit : Gimini Ai

அனந்த விரதத்தின் பின்னால் சொல்லப்படும் முக்கிய புராணக் கதை

இந்த விரதத்தின் புகழ்பெற்ற கதை சுசீலை மற்றும் கௌண்டின்ய முனிவரை மையமாகக் கொண்டது. சுமந்தர் மற்றும் தீக்ஷா தம்படிக்கு மகளாகப் பிறந்தவள் சுசீலை. இவர் கௌண்டின்ய முனிவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் ஆசிரமத்திற்குச் செல்லும்போது அவர்கள் ஒரு ஆற்றங்கரையில் தங்கினர்.

அங்கு சில பெண்கள் ஒரு விசேஷமான வழிபாட்டைச் செய்துகொண்டிருந்ததை சுசீலை பார்த்தார். அவர்களிடம் அதுகுறித்து கேட்டபோது, இது மகாவிஷ்ணுவின் அனந்த வடிவத்திற்காக மேற்கொள்ளப்படும் அனந்த விரதம் என்று அவர்கள் விளக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை அறிந்த சுசீலையும் அனந்த விரதத்தை மேற்கொண்டார். வழிபாட்டின் முடிவில் 14 முடிச்சுகள் கொண்ட அனந்த சூத்திரத்தை (கயிறு) தனது கையில் கட்டிக்கொண்டார்.

47
சுசீலையின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்
Image Credit : Gimini Ai

சுசீலையின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்

விரதத்திற்குப் பிறகு சுசீலை கௌண்டின்ய தம்பதியரின் வாழ்க்கையில் செல்வமும் செழிப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருநாள் சுசீலையின் கையில் கட்டப்பட்டிருந்த நூலைப் பார்த்த கௌண்டின்யர், அது என்ன என்று கேட்டார். அனந்த விரதத்தைப் பற்றியும், அதன் அடையாளமாக நூலைக் கட்டியிருப்பதையும் சுசீலை விளக்கினார்.

ஆனால், அதனை ஏற்காத கௌண்டின்யர் கோபத்தில் அனந்த சூத்திரத்தை அறுத்து நெருப்பில் வீசியதாக புராணக் கதை கூறுகிறது. அதன் பின்னர் அவர்களின் செல்வமும் வளமும் குறைந்து, பல துன்பங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அனந்தனைத் தேடிச் சென்ற கௌண்டின்யர்

தான் செய்த தவறை உணர்ந்த கௌண்டின்யர், அனந்தனை தேடி காடுகளுக்குச் சென்றார். நீண்ட தேடலுக்குப் பின்னர் அனந்த பகவான் வயதான பிராமணர் வடிவில் அவருக்கு காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கௌண்டின்யர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டபோது, அனந்த விரதத்தை பக்தியுடன் அனுஷ்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

57
14 என்ற எண்ணின் சிறப்பு என்ன?
Image Credit : pinterest

14 என்ற எண்ணின் சிறப்பு என்ன?

அனந்த பத்மநாப விரதத்தில் 14 என்ற எண்ணுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும் சதுர்த்தசி திதி, சந்திர மாதத்தின் 14-வது திதியாகும். இதன் காரணமாகவே இந்த விரதத்தில் 14 என்ற எண் முக்கியத்துவம் பெறுகிறது.

அனந்த விரதத்தின்போது கட்டப்படும் புனிதக் கயிற்றிலும் 14 முடிச்சுகள் இடப்படுவது வழக்கம். விரத வழிபாட்டு மரபில் சிவப்பு அல்லது குங்கும நிற நூலில் 14 முடிச்சுகள் இடப்பட்டு, அதனை பூஜையில் வைத்து வழிபட்ட பிறகு கையில் கட்டிக்கொள்கிறார்கள்.

அதேபோல், இந்த விரதத்தை தொடர்ந்து 14 ஆண்டுகள் அனுஷ்டிக்கும் மரபும் காணப்படுகிறது. இவ்வாறு சதுர்த்தசி திதி, 14 முடிச்சுகள், 14 ஆண்டுகள் என அனந்த பத்மநாப விரதத்தின் பல்வேறு வழிபாட்டு மரபுகளிலும் 14 என்ற எண் முக்கியப் பங்கு வகிக்கிறது.

67
பாண்டவர்களுக்கும் அனந்த விரதத்திற்கும் என்ன தொடர்பு?
Image Credit : pinterest

பாண்டவர்களுக்கும் அனந்த விரதத்திற்கும் என்ன தொடர்பு?

மகாபாரதத்தில் பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து 14 ஆண்டுகள் துன்பத்தை அனுபவித்த காலத்தில், கிருஷ்ணர் அருளிய விரதம் இந்த அனந்த விரதமாகும். இந்த விரதத்தை கடைபிடித்தே பாண்டவர்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், செல்வத்தையும் அடைந்ததாக கூறப்படுகிறது.

77
அனந்த விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது?
Image Credit : pinterest

அனந்த விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது?

  • விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடை அணிந்து, பூஜையறையை சுத்தம் செய்து மகாவிஷ்ணுவின் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
  • விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, அதோடு மஞ்சள் அல்லது சிவப்பு நிற கயிற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
  • சதுர்த்தசி திதி, சந்திர மாதத்தின் 14-வது திதி என்பதால் 14 வகை நைவேத்தியங்கள் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
  • பூஜை முடிந்ததும் அந்த கயிற்றை 14 முடிச்சுகள் இட்டு கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

அனந்த விரதத்தால் என்ன பலன் கிடைக்கும்?

மத நம்பிக்கையின்படி, அனந்த விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பதால் குடும்ப நலம், செல்வச் செழிப்பு, மனநிம்மதி, துன்பங்களிலிருந்து விடுபடுதல், விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பு: அனந்த விரதத்தின் பூஜை முறை, அனந்த சூத்திரம் கட்டும் கை, நைவேத்தியம், விரத உணவு உள்ளிட்ட சம்பிரதாயங்கள் குடும்பம் மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடலாம். உங்கள் குடும்ப வழக்கம் அல்லது உள்ளூர் கோவில் மரபை பின்பற்றுவது பொருத்தமானது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆன்மீகம்
 
6th T10 • ABDT10
Live
ARACARAC
-
RDCRDC
(8.3 ov)95/5
ARAC chose to bowl.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளி இரவில் கணக்கு புத்தகங்களுக்கு ஏன் பூஜை செய்கிறார்கள்? வணிகர்களின் பாரம்பரியம்!
Recommended image2
Diwali 2026: லட்சுமி தேவி அருளைப் பெற... தீபாவளி பூஜையில் தப்பி தவறி கூட இந்த பொருட்களை பயன்படுத்தாதீங்க!
Recommended image3
தீபாவளி + அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை.. வீட்டில் பணம் கொட்டணுமா..? இதை மிஸ் பண்ணாதீங்க..
Related Stories
Recommended image1
Perumal Holy Names: "கோவிந்தா..நாராயணா"..புரட்டாசியில் சொல்ல வேண்டிய பெருமாள் திருநாமங்கள்!
Recommended image2
Purattasi fasting: புரட்டாசி விரதம் தொடங்கியாச்சா? தினமும் சாப்பிட ஏற்ற காய்கறிகள், கீரைகள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved