MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Uma Maheshwara viratham: சிவன் - பார்வதியை ஒன்றாக வழிபடும் உமா மகேஸ்வர விரதம்..இதன் பின்னால் இப்படி ஒரு புராணக் கதையா?

Uma Maheshwara viratham: சிவன் - பார்வதியை ஒன்றாக வழிபடும் உமா மகேஸ்வர விரதம்..இதன் பின்னால் இப்படி ஒரு புராணக் கதையா?

Uma Maheshwara viratham: சிவன் - பார்வதியை தம்பதி சமேதராக வழிபடும் உமா மகேஸ்வர விரதத்தின் சிறப்பு என்ன? இதன் புராணக் கதை, விரத முறை, வழிபாடு மற்றும் நம்பிக்கைப்படி கிடைக்கும் பலன்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 23 2026, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
உமா மகேஸ்வர விரதம் என்றால் என்ன?
Image Credit : Pinterest

உமா மகேஸ்வர விரதம் என்றால் என்ன?

சிவனையும் பார்வதி தேவியையும் தம்பதி சமேதராக வழிபடும் முக்கியமான சிவ விரதங்களில் ஒன்றாக ‘உமா மகேஸ்வர விரதம்’ போற்றப்படுகிறது. சிவன் - பார்வதி இணைந்த உமா மகேஸ்வர திருவடிவமே சிவம் - சக்தியின் பிரிக்க முடியாத தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனால் திருமண உறவில் அன்பு, புரிதல், பொறுமை மற்றும் ஒற்றுமை நிலைக்க வேண்டி இந்தத் விரதத்தை வழிபடும் மரபு உருவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
உமா மகேஸ்வரர் என்றால் யார்?
Image Credit : Pinterest

உமா மகேஸ்வரர் என்றால் யார்?

‘உமா’ என்பது பார்வதி தேவியையும், ‘மகேஸ்வரர்’ என்பது சிவபெருமானையும் குறிக்கும் பெயர்களாகும். சிவபெருமானும் பார்வதி தேவியும் தம்பதி சமேதராக ஒன்றாகக் காட்சி தரும் திருவடிவமே ‘உமா மகேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது.

சிவன் - சக்தி இருவரும் பிரிக்க முடியாதவர்கள் என்பதையும், ஆண்- பெண் சக்திகளின் ஒற்றுமையையும் இந்தத் திருவடிவம் உணர்த்துவதாக சைவ மரபில் கருதப்படுகிறது. சிவபெருமான் அருளின் வடிவமாகவும், பார்வதி தேவி சக்தியின் வடிவமாகவும் போற்றப்படுகின்றனர்.

இருவரையும் ஒன்றாக வழிபடுவது குடும்ப ஒற்றுமை, தம்பதியரிடையே அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலைக்க உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு உமையம்மையுடன் மகேஸ்வரரை ஒன்றாக நினைத்து வழிபட்டு மேற்கொள்ளப்படும் விரதமே ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.

39
உமா மகேஸ்வர விரதம் எப்போது?
Image Credit : Pinterest

உமா மகேஸ்வர விரதம் எப்போது?

இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி (செப்டம்பர் 26 - சனிக்கிழமை) நாளில் கடைப்பிடிக்கப்படும். இந்த விரதத்தை கடைப்பிடித்தால் திருமண பந்தம் வலுப்பெறும், குடும்பத்தில் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.

49
உமா மகேஸ்வர விரதத்தின் புராணக் கதை
Image Credit : Gemini Ai

உமா மகேஸ்வர விரதத்தின் புராணக் கதை

உமா மகேஸ்வர விரதத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. ஒருமுறை துர்வாச முனிவர் கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு தரிசனம் செய்தார். அவரது பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான வில்வ மாலையை துர்வாச முனிவருக்குப் பிரசாதமாக வழங்கினார்.

59
மாலையை  கருடன் மீது வைத்த மகாவிஷ்ணு
Image Credit : Gemini Ai

மாலையை கருடன் மீது வைத்த மகாவிஷ்ணு

சிவபெருமானிடம் இருந்து பெற்ற அந்த வில்வ மாலையுடன் துர்வாச முனிவர் வைகுண்டத்திற்குச் சென்று மகாவிஷ்ணுவை தரிசித்தார்.

அப்போது சிவபெருமான் வழங்கிய புனிதமான மாலை என்று கூறி, அதனை மகாவிஷ்ணுவிடம் மிகுந்த மரியாதையுடன் வழங்கினார். ஆனால் அந்த மாலையின் மகத்துவத்தை உணராமல் மகாவிஷ்ணு அதனைத் தனது வாகனமான கருடன் மீது வைத்ததாகக் கதை கூறுகிறது.

69
மகாவிஷ்ணுவுக்கு சாபமிட்ட துர்வாச முனிவர்
Image Credit : Gemini Ai

மகாவிஷ்ணுவுக்கு சாபமிட்ட துர்வாச முனிவர்

சிவபெருமான் அளித்த பிரசாதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கருதிய துர்வாச முனிவர் மிகுந்த கோபமடைந்து மகாவிஷ்ணுவுக்கு சாபமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சாபத்தின் விளைவாக மகாலட்சுமியைப் பிரிந்து வாழ வேண்டிய நிலை மகாவிஷ்ணுவுக்கு ஏற்பட்டதாக புராண மரபில் சொல்லப்படுகிறது.

79
சாப விமோசனத்திற்கான வழி
Image Credit : Gemini Ai

சாப விமோசனத்திற்கான வழி

தனது தவறை உணர்ந்த மகாவிஷ்ணு, சாபத்திலிருந்து விடுபடுவதற்கான கௌதம முனிவரை அணுகி சாப விமோசனத்திற்கான வழியைக் கேட்டார். அதற்கு கௌதம முனிவர், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் ஒன்றாக நினைத்து உமா மகேஸ்வர விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்து உமா மகேஸ்வர விரதத்தை முறையாக அனுஷ்டித்து, சிவன் - பார்வதியை மனமுருகி வழிபட்டார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமானும் பார்வதி தேவியும் உமா மகேஸ்வரராகக் காட்சியளித்து அருள்புரிந்தனர். இதன் பயனாக துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து மகாவிஷ்ணு விடுபட்டு, மகாலட்சுமியுடன் மீண்டும் இணைந்ததாக இந்த விரதத்துடன் தொடர்புடைய புராணக் கதை கூறுகிறது.

இதன் காரணமாகவே உமா மகேஸ்வர விரதம் தம்பதியரின் ஒற்றுமை, குடும்ப நல்லிணக்கம் மற்றும் பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கடைப்பிடிக்கப்படும் விரதமாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது.

89
மா மகேஸ்வர விரதம் எப்படி இருக்க வேண்டும்?
Image Credit : Pinterest

மா மகேஸ்வர விரதம் எப்படி இருக்க வேண்டும்?

விரத நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டைச் சுத்தம் செய்து சிவன் - பார்வதி படமோ அல்லது உமா மகேஸ்வரர் திருவுருவமோ வைத்து வழிபடலாம். மலர்கள், வில்வ இலை, பழங்கள் மற்றும் நைவேத்தியம் சமர்ப்பித்து சிவன் - பார்வதியை வணங்கலாம். கோவிலுக்குச் சென்று பார்வதி பரமேஸ்வரரை தரிசித்து அபிஷேக, அர்ச்சனைகளில் பங்கேற்கலாம்.

99
உமா மகேஸ்வர விரதத்தின் பலன்கள் என்ன?
Image Credit : Pinterest

உமா மகேஸ்வர விரதத்தின் பலன்கள் என்ன?

மத நம்பிக்கையின்படி இந்த விரதம் கணவன் - மனைவி ஒற்றுமை, குடும்ப அமைதி, திருமண வாழ்வில் மகிழ்ச்சி, விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படுகிறது. ஆண்கள், பெண்கள் இருவரும் தங்கள் குடும்பத்திற்காக இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்

குறிப்பு: மேலே கூறப்பட்ட பலன்கள் புராணங்கள் மற்றும் இந்து சமய மரபுகளில் கூறப்படும் ஆன்மிக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. விரத நாள் மற்றும் அனுஷ்டான முறைகளில் குடும்பம், பிராந்தியம், கோவில் சம்பிரதாயத்திற்கு ஏற்ப வேறுபாடுகள் இருக்கலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆன்மீகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Temple Bell: கோயிலுக்கு போனதும் ஏன் மணி அடிக்கிறோம்? 99% பேருக்கு இந்த உண்மை தெரியாது!
Recommended image2
Anantha Viratham: அனந்த விரதம் எப்போது? 14 முடிச்சு கயிற்றின் ரகசியம் என்ன? புராணக் கதை முதல் பலன்கள் வரை!
Recommended image3
Astrology: சிம்மத்தில் நுழையும் குரு! அற்புத அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசிகள்! இனி வேற லெவல் வாழ்க்கை இவர்களுக்கு!
Related Stories
Recommended image1
Purattasi fasting: புரட்டாசி விரதம் தொடங்கியாச்சா? தினமும் சாப்பிட ஏற்ற காய்கறிகள், கீரைகள் இதோ!
Recommended image2
Anantha Viratham: அனந்த விரதம் எப்போது? 14 முடிச்சு கயிற்றின் ரகசியம் என்ன? புராணக் கதை முதல் பலன்கள் வரை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved