MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Siddhas : சித்தர்களின் தலைமையிடம் எது தெரியுமா?

Siddhas : சித்தர்களின் தலைமையிடம் எது தெரியுமா?

பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் மனம் முழுக்க அமைதியும், ஆன்மீகமும் நிரம்பும். இத்தகைய சிவமகிமையை எடுத்துரைக்கக்கூடிய திருவண்ணாமலைக்கு இணையான.. அமைதியையும், ஆன்மீக அனுபவத்தையும் தரக்கூடிய இடமாய் இருக்கும் 'சதுரகிரி' மலை தான் சித்தர்களின் தலைமையிடம்.

3 Min read
Dinesh TG
Published : Sep 08 2022, 05:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் மனம் முழுக்க அமைதியும், ஆன்மீகமும் நிரம்பும். இத்தகைய சிவமகிமையை எடுத்துரைக்கக்கூடிய திருவண்ணாமலைக்கு இணையான.. அமைதியையும், ஆன்மீக அனுபவத்தையும் தரக்கூடிய இடமாய் இருக்கும் 'சதுரகிரி' மலை தான் சித்தர்களின் தலைமையிடம். சதுரகிரி என்ற பெயருக்கேற்றபடி சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி என திசைக்கு நான்கு மலைகள் வீதம் பதினாறு மலைகள் சமமாக அமைந்து சதுரமாக காட்சியளிப்பதால் தான் இதற்கு சதுரகிரி மலை எனப்பெயர். இந்த மலையில் அமைந்திருக்கும் கோவிலை தரிசிக்க பக்தர்கள் கூட்டமாக வருகை புரிகின்றனர்.
 

26

சித்தர்கள் ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் என்று எல்லாம் உணர்ந்த ஞானிகளாய் இருந்தவர்கள். இறைவனைக் காண விரும்புவோர் பக்தர்கள் என்றால், இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள் சித்தர்கள். மலைப்பகுதிகளில் மூலிகைகள் நிறைந்த மலைக்குன்று உள்ளது. அதுதான் சஞ்சீவி மலை என அழைப்படுகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி போகும் போது அதன் ஒருபகுதி மட்டும் இங்கே விழுந்தது என்றும், அதனால் தான் இப்பகுதி மூலிகை நிறைந்த வனமாக காட்சியளிக்கிறது எனக் கூறப்படுகிறது.

 

36

சதுரகிரியானது அற்புத சக்திகள் நிறைந்த சித்தர்கள் வாழக்கூடிய பூமியாக திகழ்கிறது. பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சித்தர்கள், ரிஷிகள் இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு, விருதுநகர் வத்திராய்ப்பு பகுதியிலிருந்து செல்வது எளிதாக இருக்கும். தாணிப்பாறை மலை அடிவாரத்தில் தான் சதுரகிரி பயணத்தின் துவக்கம் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ நீண்ட மலைப்பாதையின் துவக்கத்தில் இருக்கும் ஆசீர்வாத விநாயகரிடம் ஆசிர்வாதம் பெற்று பின் பாதையின் ஏற்ற, இறக்கத்தில் நடந்து செல்ல வேண்டும். இந்தப் பயணமானது ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோரக்கர் குகை, இரட்டை சிவலிங்கம், நாவல் ஊத்து, சின்ன பசுகடை, பெரியபசுகடை வழியாக நடந்தால் இறுதியாக பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் பயணம் நிறைவடையும்.

பரிகாரம் செய்ய போறீங்களா.. முதல்ல இத பாருங்க..

இதற்கிடையில் காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்மா தீர்த்தத்தில் நீராடினால் பாவம் அனைத்தும் தொலைந்து போகும் என்பது ஐதீகம். அகத்தியர் தான் சுந்தரமூர்த்தி லிங்கத்தை சதுரகிரியில் முதலில் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்தை பல சித்தர்களும் வணங்கி வழிபட்டதால் தான் இந்த லிங்கத்தின் சக்தி அபரிமிதமானது. இவரை வேண்டி வழிப்பட்டால் எந்தவொரு செயலும் வீனானதில்லை என்று தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

46

இங்கு தினமும் காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை,அர்த்தஜாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. சுந்தர மகாலிங்கத்தை தரிசித்ததை அடுத்து, தரிசிக்க வேண்டியது சந்தன மாகலிங்கம் ஆலயம். இந்த வனப்பகுதியில் நாணல் செடிகள் நிறைந்திருக்கும். தற்போது பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாதைகள் அமைத்து படிக்கட்டுகள் போடப்பட்டுள்ளன. இதே இடத்தில் தான் சட்டநாத சித்தர் தவம் புரிந்த குகை உள்ளது. இங்கு அருகிலேயே ஸ்ரீ சந்தன மாகதேவி அம்மன் சன்னதியும், சரியாக ஒன்றரை கிலோமீட்டர்தூரத்தில் வணக்காளி, பரவைக்காளி என்றழைப்படும் காளிதேவி சிலையும் உள்ளது. இங்கு இயற்கையாகவே அகத்தியர் நிற்பது போன்ற பாவனையில் மரங்கள் அமைந்துள்ளது. தரிசனம் முடிந்ததையடுத்து அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவினில் தவசிப்பாறை வருகிறது. இதற்கு கீழே தவசி குகையும் உள்ளது. இந்த குகையில் தான் சித்தர்கள் கண்ணுக்கே தெரியாமல் சூட்சமமாக வந்து செல்கின்றனர் என்று கூறுகின்றனர்.

56

இந்த குகைக்குள் செல்ல வேண்டுமென்றால் பத்தடி தூரத்திற்கு தவழ்ந்து தான் செல்ல வேண்டுமாம். அதனையடுத்து ஐந்தடி தூரத்திற்கு முழங்காலில் நடந்து போக முடியும். அதன்பின் தான் எழுந்து நடக்க முடியுமாம். அங்கிருந்து கீழிறங்கும் வழியில் பெ ரிய மகாலிங்கம், வெள்ளை விநாயகரை தரிசித்து மீண்டும் சுந்தர மகாலி ங்கம் கோயிலுக்கு வந்தடையலாம். இந்த பெரிய மகாலிங்கம் சுயம்பு லிங்கம். இந்த லிங்கம் அங்கிருக்கும் பெரிய பாறைகளில் இயற்கையாக உருவானது. இதை சுற்றியிருக்கும் மரத்தின் வேர்களும் சடைபோன்று பின்புறமாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும்.

66

இந்த சதுரகிரியில் ஓடும் தீர்த்தங்களும், மூலிகைகளும் உடலில் பல நோய்களைத் தீர்த்து வைக்கும். மலையில் ஏறி,இறங்கும் போது உடலில் உள்ள கெட்டநீர் எல்லாம் வெளியேறி, மூலிகை கலந்த காற்று உடலில் படுகிறது. சித்தர்கள் உலா வரும் சதுரகி ரி மலைப்பகுதியில் பெளர்ணமி தினங்களில் கிரிவலம் செய்து மகாலி ங்கத்திடம் வேண்டியதை பெறுகிறார்கள் பக்தர்கள்.
 

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved