70, 80 ஆண்டுகளாக திதி, தர்ப்பணம் கொடுக்காத பாவம் நீங்க மகாளய அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!
Mahalaya Amavasya 2024: புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையான மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. இந்த நாளில் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க வருவதாகவும், அவர்களை மறந்தால் சாபத்திற்கு ஆளாவோம் என்றும் நம்பப்படுகிறது.
Mahalaya Amavasya 2024
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய (மஹாளய) அமாவாசை. பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், இந்த மகாளய அமாவாசை நாட்களில் தாய்வழி, தந்தை வழி முன்னோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், அங்காளி பங்காளி என்று அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே சிறப்பு.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் இறந்த நம் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வந்து அவர்களுக்காக நம் என்ன செய்கிறோம் என்றும், நாம் படைக்கும் படையலை ஏற்றுக் கொண்டும் நம்மை மட்டுமின்றி நம் சந்ததியினரையும் ஆசிர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களை முறையாக வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். தீர்க்க ஆயுள் கிடைக்கப் பெறும். அனைத்து இன்பங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
Mahalaya Amavasya, Thithi, Tharpanam,
இதுவே நம் முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் எதுவுமே செய்யவில்லை என்றாலும் சரி, அவர்களை மறந்துவிட்டாலும் சரி அவர்களது கோபத்திற்கு ஆளாக்கப்படுவீர்கள். ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் முன்னோர்கள் வீடு தேடி வருவார்கள். நம்மை நினைக்கிறார்கள் என்று சோதித்து பார்ப்பார்கள். அப்படி வீடு தேடி வரும் நம் முன்னோர்கள் மனம் குளிர வேண்டும். இல்லையென்றால் அவர்களது சாபத்திற்கு ஆளாக்கபடுவீர்கள்.
இதன் மூலமாக எல்லாவிதமான பிரச்சனைகளும் குடும்பத்தில் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை ஏற்படும். குழந்தை பாக்கியம் தடைபடும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். குடும்பமே நிர்கதியாக நிற்கும் அவல நிலை உண்டாகும். மகாளயம் என்பது மொத்தமாக வருவதை குறிக்கும். நம் முன்னோர்கள் ஒன்றாக மொத்தமாக கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்களை குறிக்கும். மறைந்த முன்னோர்கள் 15 நாட்கள் - சில சமயங்களில் 16 ஆக மாறுபடும், நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
Amavasya Devasam 2024
ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி அமாவாசையை விட அதிக சிறப்பு வாய்ந்தது. அப்படியென்றால் நம் பெற்றோர்கள், முன்னோர்களுக்கு ஒரு முறை கூட 70, 80, 100 ஆண்டுகள் கூட திதி, தர்ப்பணம் கொடுக்காதவர்கள் கூட இந்த மகாளய அமாவாசை நாட்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுக்கு ஆத்மசாந்தி கிட்டும். இந்த அமாவாசை நாட்களில் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
Mahalaya Amavasya 2024
மகாளய பட்ச நாளில் வரும் 15 நாட்களின் பலன்கள்:
1ஆம் நாள் – பிரதமை திதி – பணம் வந்து சேரும்.
2ஆம் நாள் – துவிதியை திதி – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்.
3ஆம் நாள் – திரிதியை திதி – நினைத்தது நிறைவேறும்.
4ஆம் நாள் – சதுர்த்தி திதி – எதிரிகளிடமிருந்து தப்பிக்கலாம்
5ஆம் நாள் – பஞ்சமி திதி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
6ஆம் நாள் – சஷ்டி திதி – புகழ் கிடைக்கும்.
7ஆம் நாள் – சப்தமி திதி – சிறந்த பதவிகள் கிடைக்கும்.
8ஆம் நாள் – அஷ்டமி திதி – கூர்மையான புத்தி, அறிவாற்றல் கிடைக்கும்.
9ஆம் நாள் நவமி திதி – சிறந்த வாழ்க்கைத் துணை, குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் கிடைக்கப் பெறலாம்.
10ஆம் நாள் – தசமி திதி – நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
11ஆம் நாள் – ஏகாதசி திதி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி ஏற்படும்.
12ஆம் நாள் – துவாதசி திதி – ஆடை, ஆபரணம் சேரும்.
13ஆம் நாள் – திரயோதசி திதி – விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம் மேம்படும்.
14ஆம் நாள் – சதுர்த்தசி திதி – பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை உண்டாகும்.
15ஆம் நாள் – மகாளய அமாவாசை – மேலே குறிப்பிட்ட எல்லா பலன்களும் கிடைக்கப் பெறலாம்.
Mahalaya Amavasya 2024
மகாளய அமாவாசை நாட்களில் செய்யக் கூடாதவை:
1. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
2. தலைமுடி வெட்டுதல் கூடாது.
3. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4. வாசலில் கோலம் போடுதல் கூடாது.
5. பூஜை செய்ய கூடாது.
6. காலையில் எழுந்த உடன் குளித்து முடித்து சுத்தமான உடை அணிந்து கொள்ள வேண்டும்.
7. காகம் சாப்பிட்ட பிறகு தான் விரதமிட வேண்டும். காலையில் உணவருந்த கூடாது. பிற்பகல் மட்டுமே விரத படையல் போட வேண்டும். அப்படி பிற்பகலில் யாரேனும் முதியவர், வயதானவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு சாப்பாடு போட வேண்டும்.
Amavasya 2024
அமாவாசை திதி தொடங்கும் நேரம்:
01 அக்டோபர் - இரவு 10.35 மணிக்கு
அமாவாசை திதி முடியும் நேரம்:
03 அக்டோபர் - மதியம் 12.34 மணிக்கு
தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம்:
02 அக்டோபர் - காலை 06.04 மணி முதல் 07.25 மணி வரை. அதுபோல, காலை 09.05 மணி முதல் 11.55 மணி வர