MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இரவு ஜம்முனு தூங்கனுமா? உங்களுக்காக சில வாஸ்து டிப்ஸ்கள்!!

இரவு ஜம்முனு தூங்கனுமா? உங்களுக்காக சில வாஸ்து டிப்ஸ்கள்!!

Vastu Shastra Sleep : இரவு படுத்தவுடனே ஆழ்ந்த தூக்கம் வர வாஸ்து சாஸ்திரம் சொல்லும் சில குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 17 2025, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
vastu tips for good sleep in tamil

vastu tips for good sleep in tamil

ஒரு மனிதன் பகல் முழுவதும் ஓயாமல் உழைத்து இரவில் நிம்மதியாக தூங்கினால் தான் அவன் ஆரோக்கியமாக இருக்க முடியும். சொல்லப்போனால், ஒருவர் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள். இதனால் உடலுக்கும் மனதுக்கும் போதிய ஓய்வு கிடைத்து, புத்துணர்ச்சியாக இருக்கும். எனவே தூங்கும் அறை எப்போதும் அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் தற்போது பலர் பணி சுமை, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் இரவு ஆழ்ந்த தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். எனவே, இரவு நிம்மதியாக தூங்குவது எப்படி என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது தெரியுமா? 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
vastu tips for good sleep in tamil

vastu tips for good sleep in tamil

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கையாகும். இதில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இந்து மக்களின் வாழ்க்கை வழிகாட்டியாக இது செயல்படுகிறது. ஒருவர் எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? எந்த நிலையில் தூங்க வேண்டும் என்பதை பொறுத்து அவருக்கு இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அந்த வகையில், இப்போது இரவு ஆழ்ந்த தூக்கம் கிடைக்க வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்லுகிறது என்பதை பற்றி நீங்க பார்க்கலாம்.

இதையும் படிங்க:  உங்க வீட்டு வாட்டர் டேங்க் இந்த திசையில் இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு பணக்கஷ்டம் வரும்!

35
vastu tips for good sleep in tamil

vastu tips for good sleep in tamil

1. பூஜை அறையை போலவே இரவு தூங்கும் அறையும் சுத்தமாக இருந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் ஒருவேளை உங்களது பெட்ரூம் சுத்தமாக இல்லாவிட்டால் தொற்று நோய், பண இழப்பு ஏற்படும் மற்றும் இரவு உங்களால் நிம்மதியாக தூங்க முடியாமல் போகும்.

2. அதுபோல உங்கள் வீட்டின் பெட்ரூம் கதவை வடக்கு அல்லது கிழக்கு பகுதி ஒட்டி வைக்கலாம் ஆனால் நடுப்பகுதியில் மட்டும் வைக்க வேண்டாம். அப்போதான் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

3. வாஸ்துபடி நீங்கள் தூங்கும் பெட்ரூமில் மான், மாடு, புலி, சிங்கம் போன்றவற்றின் படங்கள் இருக்கவே கூடாது. அதற்கு பதிலாக அன்பை தூண்டும் ஓவியங்களை வைக்கலாம். இதனால் இரவு நிம்மதியாக தூங்க முடியும்.

இதையும் படிங்க:  இந்த '5' பொருட்கள் உங்க வீட்ல இருக்கா? பணம் கையில் சேராது!!

45
vastu tips for good sleep in tamil

vastu tips for good sleep in tamil

4. வாஸ்துபடி, உங்கள் பெட்ரூம் சுவற்றின் வண்ணங்கள் நீளம், பிங்க், மஞ்சள் போன்ற நிறத்தில் தான் இருக்க வேண்டும். அதுபோல பெட்ரூமில் சீலிங் வெள்ளை நிறத்திலும், பெட்ரூமில் இரவு நேர விளக்கு சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தான் இருக்க வேண்டும் அப்போது தான் உங்களால் இரவு நன்றாக தூங்க முடியும்.

5. தூங்கும் போது தவறான திசையில் தலை வைத்து தூங்கினால் உங்களது தூக்கம் பாதிக்கப்படும் மற்றும் உடல்நல பிரச்சனையும் ஏற்படும் என்று வாஸ்து சொல்கிறது. எனவே தெற்கு திசை, கிழக்கு திசை, மேற்கு திசை ஆகிய திசைகளில் தான் தூங்குவது நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. மேலும் இந்த திசையில் தூங்கினால் தான் இரவு ஆழ்ந்த தூக்கமும் வரும்.

6. கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், நேர்மறை ஆற்றல் வரும் மற்றும் இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். 

 

55
vastu tips for good sleep in tamil

vastu tips for good sleep in tamil

7. தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால் நீட்டி தூங்கினால் வெற்றி, செல்வம், புகழ் உங்களைத் தேடி வரும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.

8. மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் புகழ் கிடைக்கும் பணக்காரர்கள் ஆவீர்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் மட்டும் கால் நீட்டி தூங்க வேண்டாம். இதனால் பல வித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

9. இரவு நிம்மதியாக தூங்க வாஸ்து படி நீங்கள் தூங்கும் அறையில் புத்தகத்தை படிக்க வேண்டாம்.
 அதுமட்டுமின்றி செல்போன், லேப்டாப் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் படுக்கைக்கு அருகில் வைக்க வேண்டாம்.

10. முக்கியமாக, தம்பதியர் பெட்ரூமில் வடகிழக்கு பகுதியில் தூங்க வேண்டாம். இல்லையெனில் பல உடல்நல பிரச்சனை ஏற்படும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rama Ekadashi : ரமா ஏகாதசி 2026.. பெருமாள் வழிபாடு, விரத நேரம், பாரணை செய்யும் முறை!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved