உங்க வீட்டு வாட்டர் டேங்க் இந்த திசையில் இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு பணக்கஷ்டம் வரும்!
Water Tank Vastu Tips : வாஸ்து படி, தண்ணீர் தொட்டியை சரியான திசையில் வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை தவறான திசையில் வைத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, காற்று, நீர் மற்றும் நெருப்பு ஆகியவற்றிற்கு என திசைகள் சொல்லப்பட்டுள்ளன. எனவே, வாஸ்துபடி இவை தொடர்பான விஷயங்களை வீட்டில் சரியான திசையில் வைப்பது மிகவும் அவசியம். இல்லையெனில், அவை வாஸ்து தோஷங்களை ஏற்படுத்தி வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் வாட்டர் டேங்கை வாஸ்துபடி சரியான திசையில் வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை உங்கள் வீட்டில் இருக்கும் வாட்டர் டேங்க் தவறான திசையில் இருந்தால் அதனால் உங்களுக்கு பண இழப்பு மற்றும் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே வீட்டில் இருக்கும் வாட்டர் டேங்க் வாஸ்துபடி எந்த திசையில் வைக்க வேண்டும் என்றும், எந்த திசையில் வைக்க கூடாது என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீட்டு முன்பு பப்பாளி மரம் வளர்க்கலாமா? வளர்த்தால் வாஸ்துபடி என்ன நடக்கும்?
வாஸ்துபடி இந்த திசையில் தண்ணீர் தொட்டி வைக்கவும்:
- வாஸ்து படி, வடகிழக்கு திசையில் வாட்டர் டேங்க் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் வாட்டர் டேங்க் வைத்தால் மகிழ்ச்சி செழிப்பை தருகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க செய்யும்.
- வாஸ்துபடி, வடக்கு திசையிலும் தண்ணீர் தொட்டியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் வாட்டர் டேங்க் வைத்தால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி நிலை நிற்கும். முக்கியமாக வீட்டில் சண்டை, சச்சரவுகள் போன்ற பிரச்சனைகள் விலகி ஓடும்.
- உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை வாஸ்துபடி வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கின் நடுப்பகுதியை தவிர வேறு எந்த திசையிலும் வைக்கலாம். இப்படி நீங்கள் வைப்பது மூலம் அதகுரிய நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
- வாஸ்துபடி மேற்கு திசையிலும் வாட்டர் டேங்க் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் தண்ணீர் தொட்டியை வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
- அதுபோல நீங்கள் நிலத்தடி தொட்டியை உங்கள் வீட்டில் வைக்க விரும்பினால் அதை வடக்கு திசை, அதாவது வடகிழக்கு மூலையில் வைக்கவும். வாஸ்துபடி அந்த திசை தான் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த '3' நாணங்களை பர்ஸ்ல வைத்தால்.. வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராது!!
வாஸ்துபடி இந்த திசையில் வாட்டர் டேங்க் வைக்க வேண்டாம்:
- வாஸ்துப்படி உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை தென்மேற்கு திசை அதாவது தென்மேற்கு மூலையில் ஒருபோதும் வைக்க வேண்டாம். ஏனெனில் இந்த திசையில் வாட்டர் டேங்க் வைத்தால் வீட்டில் அமைதியின்மை மற்றும் நோய்கள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கடன் பிரச்சனை கூடும்.
- அதுபோல தென்கிழக்கு திசையிலும் வாட்டர் டேங்க் வைக்க வேண்டாம். ஏனெனில் இந்த திசை நெருப்பு திசை என்பதால் நெருப்பும் நீரும் இணைந்தால் வாஸ்து தோஷங்கள் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை ஒருபோதும் இந்த திசையில் வைக்காதீர்கள்.
- வாஸ்து படி வீட்டில் இருக்கும் வாட்டர் டேங்கை தெற்கு திசையில் வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் ஏற்படும். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் நிலத்தடி தொட்டியையும் இந்த திசையில் வைக்க வேண்டாம்.