இந்த '5' பொருட்கள் உங்க வீட்ல இருக்கா? பணம் கையில் சேராது!!
Home Vastu Tips : உங்கள் வீட்டில் துரோகதிஷ்டம், பணக்கஷ்டத்தை கொண்டு வரும் சில பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
vastu tips for house in tamil
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எந்த விஷயம் செய்தாலும், அதை வாஸ்து படி தான் செய்வார்கள். அதாவது வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, புது கடை வாங்குவது என எதுவாக இருந்தாலும் வாஸ்து பார்ப்பார்கள். வாஸ்து படி, எந்த விஷயம் செய்தாலும் அது நல்லதாக நடக்கும். குறிப்பாக அதிர்ஷ்டம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, வீட்டில் எப்போதும் அதிர்ஷ்டம் நிலைத்திருக்க, பணம் வந்து கொண்டே இருக்க, வீட்டில் கண் திருஷ்டி நீங்க சில பொருட்களை தேடி தேடி வாங்கி வைப்பார்கள்.
vastu tips for house in tamil
அதுபோல வாஸ்து படி, வீட்டில் வைக்கக் கூடாத சில பொருட்களும் உள்ளன. ஏனெனில் அவை வீட்டிற்கு துரதிஷ்டத்தை தருவது மட்டுமின்றி, வீட்டிற்கு வரும் அதிர்ஷ்டத்தை தடுக்கும். இதனால் வீட்டில் பணம் தங்கவே தங்காது. அப்படி எந்தெந்த பொருட்களை வீட்டில் வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவு பார்க்கலாம்.
இதையும் படிங்க: துடைப்பத்தை எந்தக் கிழமை வாங்கனும்? இந்த விஷயம் தெரியாம வாங்காதீங்க!!
vastu tips for house in tamil
பழைய காலண்டர்:
வாஸ்துபடி, வீட்டில் பழைய காலண்டர் இருந்தால் துரதிஷ்டத்தை ஈர்க்கும். அதுபோல வீட்டில் நீண்ட நாட்களாக கலண்டரில் கிழிக்கப்படாமல் இருக்கவும் கூடாது. தினமும் காலண்டரில் அன்றைய தேதியை மாற்றிக் கொண்டே இருந்தால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம் பெருகிக்கொண்டே இருக்கும். நிதி அடிப்படையில் வெற்றியை காண்பீர்கள்.
ஓடாத கடிகாரம்:
உங்கள் வீட்டில் ஓடாத அல்லது உடைந்த கடிகாரம் இருந்தால் அதை உடனே தூக்கிப் போடுங்கள். ஏனெனில் வாஸ்து படி, அவை உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டத்தையும், துன்பங்களையும் கொண்டு வரும். எனவே உங்கள் வீட்டிற்கு அதிஷ்டம் வர, பணம் குவிய உடைந்த மற்றும் ஊடாக கடிகாரத்தை குப்பையில்
போட்டு விடுங்கள்.
இதையும் படிங்க: உங்க வீட்டு வாட்டர் டேங்க் இந்த திசையில் இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு பணக்கஷ்டம் வரும்!
vastu tips for house in tamil
உடைந்த நாற்காலி:
உடைந்த நாற்காலி வீட்டில் இருந்தால் நெகடிவ் எனர்ஜியை ஈர்க்கும் என்று வாஸ்து சொல்லுகின்றது. இதனால் வீட்டில் நிதி பற்றாக்குறை பண இழப்பு தேவையற்ற செலவுகள் ஏற்படும். எனவே இவற்றை தவிர்க்க உடைந்த நாற்காலியை வீட்டிலிருந்து தூக்கி போடுங்கள்.
காய்ந்த செடிகள்:
உங்கள் வீட்டின் உள் அல்லது வெளியே காய்ந்த அல்லது பட்டு போல செடிகள் இருக்கக் கூடாது. ஏனெனில் இவை உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டம், பணம் கஷ்டத்தை கொண்டு வரும். எனவே இவற்றை வீட்டிலிருந்து உடனடியாக அகற்றி, புதிய செடிகளை வைக்கவும். இதனால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும், சந்தோஷம் நிலைத்திருக்கும், பணம் குவியும்.
பெட்ரூமில் இருக்கும் பொருட்கள்:
உங்கள் படுக்கைக்கு அருகில் செருப்பு, துணிகள், புத்தகம், நகைகள், பணம் போன்ற எதையும் வைக்கக்கூடாது. இவை துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் படிக்கைக்கு அருகில் இதுபோன்ற எந்த ஒரு பொருட்களையும் வைக்க வேண்டாம்.