துடைப்பத்தை எந்தக் கிழமை வாங்கனும்? இந்த விஷயம் தெரியாம வாங்காதீங்க!!
Broom Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி எந்த நாளில் துடைப்பம் வாங்கலாம்.. வாங்க கூடாது? என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் அமைப்பை மட்டுமின்றி, நாம் வாங்கக்கூடிய சில பொருட்களையும் எந்த நாளில் வாங்க வேண்டும், எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். அப்போதுதான் வாஸ்து தோஷங்கள் ஏதும் ஏற்படாமல், நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பா துடைப்பம் இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் துடைப்பதற்கு என முக்கிய இடம் உள்ளது. துடைப்பம் தொடர்பாக சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி துடுப்பத்தை வாங்குவதற்கும் அதை வீட்டில் எங்கு வைப்பது என்பதற்கான சில விதிகள் உள்ளது. ஏனெனில் துடைப்பம் லட்சுமி தேவியாக கருதப்படுகிறது. மேலும் துடைப்பத்தை காலால் மிதிக்க கூடாது என்று சொல்வதற்கு காரணம் இதுதான். இதனால்தான் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா.. தீபாவளி நாளில் கூட லட்சுமி தேவிக்கு பூஜை செய்யும்போது புதிய துடைப்பத்தை வாங்கி பழையதை தூக்கி எறிவார்கள். காரணம் வீட்டில் இருக்கும் வறுமை வெளியேற வேண்டும் என்று நம்பப்படுகிறது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி துடைப்பத்தை வீட்டில் சரியான இடத்தில் வைப்பது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு துடைப்பம் எந்த நாளில் வாங்கலாம்... எந்த நாளில் வாங்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரம் படி எந்த நாளில் துடைப்பம் வாங்கலாம்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் தீபாவளி நாளில் துடைப்பம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுபோல வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையிலும் புதிய துடைப்பம் வாங்கி பயன்படுத்தலாம். மேலும் கிருஷ்ண பசத்தின் போதும் துடைப்பம் வாங்குவது மங்களகரமானது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. இது எல்லாவற்றையும் விட வாஸ்துபடி சனிக்கிழமை துடைப்பம் வாங்குவது சிறந்த நாளாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் துடைப்பம் வாங்கினால் வீட்டிற்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: துடைப்பம் வீட்டில் வைப்பதற்கான வாஸ்து; படுக்கையறையில் வைக்கலாமா?
வாஸ்துபடி எந்த நாளில் துடைப்பம் வாங்க கூடாது:
சுக்லா பஷா நாட்களில் துடைப்பம் வாங்க கூடாது ஏனெனில் அது துரதிஷ்டமாக கருதப்படுகிறது. அதுபோல வாரத்தின் திங்கள் கிழமை அன்றும் துடைப்பம் வாங்குவது நல்லதல்ல. மீறி வாங்கினால் கடன் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று வாஸ்து சொல்லுகின்றது.
இதையும் படிங்க: ஒருபோதும் வீட்டில் துடைப்பம் வைக்கும்போது.. இந்த தவறுகளை செய்யாதீங்க! தீராத பணக்கஷ்டம் வரலாம்..
வாஸ்துபடி துடைப்பம் வைக்க சரியான திசை எது?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் தான் துடைப்பம் வைக்க வேண்டும். இந்த திசையில் வைத்தால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிலைத்து இருக்கும். மேலும் வட மேற்கு அல்லது மேற்கு திசையிலும் துடைப்பத்தை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
வாஸ்துபடி எந்த திசையில் துடைப்பம் வைக்கக் கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி வடகிழக்கு திசையில் துடைப்பம் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோல துடைப்பத்தை சமையலறை அல்லது படுக்கையறையில் ஒருபோதும் வைக்க கூடாது. மேலும் துடைப்பத்தை நிற்க வைக்க கூடாது. அதற்கு பதிலாக படுத்தவாரு தான் வைக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
- வீட்டில் உடைந்த அல்லது பழைய துடைப்பத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உடைந்த துடைப்போம் வீட்டில் இருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் வரும். அதுபோல புதிய துடைப்பம் வீட்டில் இருக்கும் போது பழையதை வீட்டிற்குள் வைப்பது வறுமையை கொண்டு வரும்.
- சூரிய அஸ்தமனத்திற்கு பின் வீட்டை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.