துடைப்பம் வீட்டில் வைப்பதற்கான வாஸ்து; படுக்கையறையில் வைக்கலாமா?
வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்க, வீடு தொடர்பான ஒவ்வொரு பொருளின் வாஸ்து மீதும் கவனம் செலுத்த வேண்டும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்று எங்கு பார்த்தாலும் துடைப்பம் வைத்து இருப்பார்கள்.
நகரங்களில் கூட துடைப்பம் தேய்ந்தாலும் அவ்வளவு எளிதில் தூக்கி வெளியே போட மாட்டார்கள். ஆனால், இவ்வாறு வீட்டைச் சுற்றி மூலையில் வைக்கப்பட்டிருக்கும் துடைப்பம் வாஸ்துவில் முக்கிய இடம் பெறுகிறது. துடைப்பம் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய அனைத்து விதிகளும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி துடைப்பம் வாங்குவதற்கும், அதற்கான நாட்களும், வீட்டில் எங்கு வைப்பது என்பதற்கும் சில விதிகள் உள்ளன. துடைப்பம் லட்சுமியாக கருதப்படுகிறது. தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் புதிய துடைப்பம் வாங்கி, பழையதை தூக்கி எறிவதுண்டு. இவ்வாறு செய்தால், வறுமை வீட்டை விட்டு வெளியேறும் என்றும் எதிர்மறை ஆற்றல் வீட்டில் தங்காது என்றும் நம்பப்படுகிறது. துடைப்பம் லட்சுமியாக கருதப்படுவதால், காலில் மிதிக்கக் கூடாது.
துடைப்பம் எப்போது வாங்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தில், சனிக்கிழமை துடைப்பம் வாங்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் வீட்டிற்கு துடைப்பம் வாங்குவது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. கிருஷ்ண பக்ஷத்தில் எப்போதும் புதிய துடைப்பம் வாங்க வேண்டும். சுக்லா பக்ஷ நாட்களில் துடைப்பம் வாங்குவது துரதிருஷ்டமாக கருதப்படுகிறது.
ஃப்ரீசரில் வைக்கக்கூடாத முக்கியமான 5 பொருட்கள் இதோ..!!
துடைப்பம் வைக்க சரியான இடம்
மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக, துடைப்பம் எப்போதும் வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். வடகிழக்கில் துடைப்பம் வைப்பதை தவிர்க்கவும். துடைப்பம் எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். துடைப்பத்தை மக்கள் பார்க்கும் இடத்தில் வைப்பதை தவிர்க்கவும். சமையலறையில், படுக்கையறையில் வைக்கக் கூடாது. துடைப்பத்தை நிற்க வைக்கவும் கூடாது. படுத்தவாறு வைக்க வேண்டும். வீட்டை பெருக்கும்போது, துடைப்பம் விழக்கூடாது.
ஒரு பழைய துடைப்பம் வாஸ்து
உடைந்த அல்லது பழைய துடைப்பத்தை வீட்டில் வைக்கக்கூடாது. ஏனெனில் பழைய துடைப்பம் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகிறது. உடைந்த துடைப்பம் வீட்டிற்கு துன்பத்தை வரவழைக்கும் என்று நம்பப்படுகிறது. புதிய துடைப்பம் வாங்கினாலும், பழைய துடைப்பத்தை சிலர் தூக்கி எறிவதில்லை. இவ்வாறு செய்யக்கூடாது. ஏனென்றால் பழைய துடைப்பத்தை வைத்திருப்பது வீட்டிற்கு வறுமையைத் தரும்.
Immunity: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் யோகா முத்திரை இதுதான்!
அமாவாசை நாளில்...
சனிக்கிழமை அல்லது அமாவாசை பழைய துடைப்பத்தை தூக்கி எறிய நல்ல நாள். அமாவாசை அன்று வீட்டில் இருந்து துடைப்பத்தை வீசுவதால் தோஷம் ஏற்படாது. பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குச் செல்லும்போதும் அல்லது வீடு மாறும்போது எக்காரணம் கொண்டும் பழைய துடைப்பத்தை எடுத்துச் செல்லாதீர்கள். புதிய துடைப்பம் கொண்டு புதிய வீட்டை பெருக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் நேர்மறை சூழல் ஏற்படும்.
இந்த நேரத்தை தவிர்க்கவும்
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை பெருக்குவதை தவிர்க்கவும். வீட்டு துடைப்பத்தை வேறு ஒருவருக்கு கொடுப்பதையும் தவிர்க்கவும். உங்களது வீட்டை முடிந்த வரைக்கும் நீங்களே பெருக்க வேண்டும் .