வாஸ்துபடி வீட்டுல வன்னி மரம் வெச்சா என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா? யாருக்கும் சொல்லாதீங்க..!
சனிதோஷம் நீங்க வன்னி மரம் எப்படி உதவுகிறது என்பதை வாஸ்து சாஸ்திரம் நமக்கு சொல்கிறது.
நமது வாழ்வில் நேர்மறை, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன என்பதை வாஸ்து சாஸ்திரம் நமக்கு கூறுகிறது. பசுமையான செடிகள் நம் வாழ்வில் நம்பிக்கையையும் வசீகரத்தையும் தருகின்றன. சில தாவரங்கள் உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வரும்.
வீடுகளில் பூச்செடிகளை நடுவதை வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. முக்கியமாக உங்கள் வீட்டில் மரங்களை நடும் போது, அவற்றின் வாஸ்துசத்திரத்தைப் பார்ப்பது அவசியம். வாஸ்துசாஸ்திரத்தின்படி மரங்களை நடுவது வீட்டின் ஆற்றலை பாதிக்கிறது. வன்னி மரம் அப்படியான மரங்களில் ஒன்றாகும். இது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது.
வன்னி மரத்தை குறித்து வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?
பெரும்பாலான வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, உங்களுடைய ஜாதகத்தில் சனிதோஷம் அல்லது சனியின் தாக்கம் இருந்தால், உங்கள் வீட்டில் வன்னி மரத்தை நட வேண்டும். இது ஒரு நல்ல வாஸ்து தீர்வு. இது உங்கள் சனி தோஷத்தை முற்றிலும் நீக்கும்.
வன்னிமரத்தின் நன்மைகள்
1). மாலையில் வன்னி மரத்திற்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை பலப்படும்.
2). மொத்தமாக 45 நாட்கள், நாள்தோறும், மாலை வேளையில் வன்னி செடிக்கு/மரத்திற்கு அருகில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்.
3). வீட்டின் வடகிழக்கு மூலையில் மரம் வளர்ப்பது நல்லது. அப்படி செய்தால் வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது.
4). வீட்டில் வன்னி மரம் நடுவது தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை அளிக்கும்.
5). சுப காரியங்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் வன்னி மரத்தை தரிசித்து வெளியே போகவும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் எல்லா செயலிலும் வெற்றி பெறுவீர்கள்.
வன்னி மரத்தை எங்கு நட வேண்டும்?
தெற்கு திசையே வன்னி மரத்தை நடவேண்டிய சரியான திசையாகும். இதற்கு போதுமான நேரடி சூரிய ஒளி கிடைக்காது எனில், அதை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையிலும் வைக்கலாம். சனிக்கிழமையன்று வன்னி மரத்தை நட்டு வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த மரத்தை எப்போதும் வீட்டின் பிரதான கதவின் இடது பக்கத்தில் வைக்க வேண்டும். இது எப்போதும் வீட்டில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. இது நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: உங்கள் கண் துடித்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?
கவனம்.. கவனம்..!
வன்னி செடி தெய்வீகமானது, மிகவும் புனிதமானது. ஆகவே நடவு செய்யும் போது சுத்தமான மண்ணை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக நடும்போது திசையைக் கவனியுங்கள். தெற்கு நோக்கிய திசையில் வன்னி செடியை வைக்கவும். சூரிய ஒளி கிடைக்காதபட்சத்தில் கிழக்கு திசையிலும் நடலாம். வீட்டின் பிரதான கதவுக்கு அருகிலும் அதை நடலாம். நீங்கள் இந்த செடியை ஒரு தொட்டியில் அல்லது நேரடியாக தரையில் நடலாம்.
இதையும் படிங்க: கடவுளுக்கு படைக்கும் நைவேத்தியம்.. மனதார வேண்டி நாம் படைத்ததை கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது?