- Home
- Spiritual
- திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பரில் இந்த '1' நாள் மூடப்படும்! பக்தர்கள் கவனத்திற்கு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பரில் இந்த '1' நாள் மூடப்படும்! பக்தர்கள் கவனத்திற்கு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாதம் 7ம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

Tirumala Temple To Close On Sep 7 For Lunar Eclipse
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி ஒரு நாள் மட்டும் திருப்பதி கோயில் மூட்டப்பட்டு இருக்கும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி திருப்பதி கோயில் மூடல்
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானதாக திருப்பதி ஏழுமலையான கோயில் உள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக உண்டியலில் தங்கம் மற்றும் பணம் காணிக்கையை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் 7ம் தேதி ஏற்படவுள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
எத்தனை மணி நேரம் நடை அடைக்கப்பட்டு இருக்கும்?
செப்டம்பர் 7ஆம் தேதி காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். கிரகண காலம் முடிந்த பின்னர், பரிகார பூஜைகள் மற்றும் தூய்மைப்படுத்தும் சடங்குகள் நடத்தப்படும். அதன் பிறகு, இரவு 7:00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தில் கோயில்கள் மூடப்படுவது ஏன்?
சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வு. ஆன்மிக மரபுகளின்படி, கிரகண காலத்தில் கோயில்களில் சில சடங்குகளைச் செய்யக்கூடாது என்பதால், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இதனால் தான் திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தின்போது தற்காலிகமாக மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பதி கோயில் மூடப்படும் தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆகவே பக்தர்கள் இந்த நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.