MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தீராத கஷ்டங்களை தீர்க்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்! நினைத்தாலே முக்தி தரும் தலம்!

தீராத கஷ்டங்களை தீர்க்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்! நினைத்தாலே முக்தி தரும் தலம்!

Annamalaiyar Temple History Mukthi Sthalam benefits in Tamil : திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் என்று சொல்லப்படும் அண்ணாமலையார் கோயில் பற்றிய வரலாறு, சிறப்புகள், கோவில் அமைவிடம், பலன்கள் குறித்த முழுமையான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Jan 31 2026, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை
Image Credit : annamalaiyar temple instagram

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

Annamalaiyar Temple History Mukthi Sthalam benefits in Tamil : உலகிலேயே சிவன் கோயில் தான் மிகப்பெரிய அளவில் உள்ளது அதற்கும் முக்கியமாக அதிசயம் நிறைந்த கோயில்தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். நம் வாழ்வில் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்று வந்தால்தான் நம் வாழ்வில் எவ்வளவு புண்ணியங்களை சேர்த்து இருக்கும் என்று அர்த்தத்துக்கு இந்த கோயில் சிறப்பாக விளங்குகிறது. கோயில் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ளதாகவே விளங்குகிறது இதன் சிறப்பு அம்சங்களையும் வரலாறுகளையும் இந்த தொகுப்பில் காணலாம்.

26
அண்ணாமலையார் கோயில் வரலாறு; அக்னி தலம் திருவண்ணாமலை
Image Credit : Google

அண்ணாமலையார் கோயில் வரலாறு; அக்னி தலம் திருவண்ணாமலை

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியைக் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.சிவனின் அடிமுடியை காண்பதற்காக, விஷ்ணு வராக அதாவது பன்றி உருவில் அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். 

பக்தனுக்காக நந்தி பகவானை வழிபட செய்த சிவன் – 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேகம்!

36
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாறு:
Image Credit : our own

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாறு:

அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்குபூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

46
சிவராத்திரி திருவண்ணாமலையில் தான் உருவானதா?
Image Credit : our own

சிவராத்திரி திருவண்ணாமலையில் தான் உருவானதா?

பிருங்கி முனிவர் அன்னை பராசக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி முனிவர் உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.

56
கோவிலின் சிறப்புகள்: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்
Image Credit : our own

கோவிலின் சிறப்புகள்: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்

சிவனின் அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும் பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். விநாயகருக்கு அறுபடை வீடுகள் இருக்கின்றது அதில் முதல் படை வீடு திருவண்ணாமலை கோவிலில் அல்லல் போக்கும்விநாயகர் உள்ளார்.

66
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள்
Image Credit : our own

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள்

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்பரம்பொருளன சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார்என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். 

ஸ்ரீ ஜலநாராயணன் சுவாமி வரலாறு – 44 சன்னதி கொண்ட கோயில்!

மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. தீபத்திருவிழாவில் தீபம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ அதே அளவுக்கு மலை மீது கிரிவலம் வருவதும் சிறப்பு தான். கிரிவலம் என்றாலே அது அண்ணாமலையாரின் திருக்கோயில் இன்றே கொள்ளலாம் அங்கு லிங்கங்கள் எட்டு திசைக்கு எட்டு லிங்கங்கள் உள்ளன. இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானலிங்கம் என எட்டு லிங்கங்களை சுற்றி வந்து நம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் உடம்பில் தீராத நோய்கள் மன அமைதியின்மை மற்றும் குழந்தையின்மை திருமண வாழ்க்கையில் தடை பல காரணங்களுக்காகவும் மக்கள் இங்கு கிரிவலம் வந்து திருவண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர்.

Vadapalani Andavar Temple : சகல தோஷங்களையும் நீக்கும் வட ஆண்டவர் வழிபாடு: திருமணம் நடக்க 6 வார வழிபாடு!

பலன்கள்: 

நம் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். ஏனென்றால் இங்கு சிவன் சுயமாக உருவாகியுள்ளார். இங்கு இருக்கும் லிங்கங்கள் அனைத்தையும் தரிசித்து விட்டு சென்றால் நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் மனப்பிரச்சினைகள் குழந்தை பாக்கியம் திருமண வாழ்க்கையில் தடை என்று அனைத்திலும் தீர்வு கிடைக்கும் ஒரு கோயிலாக விளங்குகிறது. அண்ணாமலையாரே தீபம் மூலம் காட்சியளிக்கிறார். இன்று அனைத்து பெருமைகளையும் கொண்ட கோயில் தான் இந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.

ஆன்மீக செய்திகள்

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கோவில்
கோவில் நிகழ்வுகள்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vadapalani Andavar Temple : சகல தோஷங்களையும் நீக்கும் வட ஆண்டவர் வழிபாடு: திருமணம் நடக்க 6 வார வழிபாடு!
Recommended image2
வடபழனி முருகன் கோயில் வரலாறு: ஓலைக் குடிசையில் தொடங்கி கோபுரமாய் உயர்ந்த கதை!
Recommended image3
ஸ்ரீ ஜலநாராயணன் சுவாமி வரலாறு – 44 சன்னதி கொண்ட கோயில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved