சூரிய கிரகணம் 2023: இதனால் 7 ராசிக்காரர்களுக்கு தோஷம்!! அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ராகு கிரஹஸ்த சூரிய கிரகணத்தில் எந்தெந்த ராசிகளுக்கு தோஷம்? எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
அறிவியல்ரீதியாக பார்த்தால், சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வரும் சமயம், சூரியனை சந்திரன் மறைக்கிறது. இதனையே சூரிய கிரகணம் என சொல்கிறார்கள். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதி நிகழவுள்ளது. இதற்கு முன்பே, ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு சென்றதால் சூரியன், ராகு கூட்டணி உருவானது. அதன் காரணமாக, சூரிய கிரகணத்தின் போது சூரிய-ராகு கிரகண தோஷம் ஏற்படுகிறது, இது மிகவும் அசுபமானது. சூரிய-ராகு கிரகண தோஷம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சூரியனில் கிரகணம் ஏற்பட்டால், பூமியில் இருள்மயமாகிவிடும்.
கிரகண தோஷம் அனைத்து தோஷங்களிலும் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. சூரிய கிரகணத்தால் சூரிய பகவனால் கிடைக்கும் பலன்கள் தடைபடுகிறது. சூரியன் - ராகு கிரகணத்தால், சொந்த வாழ்க்கையிலும், துறை சார்ந்தும் சிரமங்களை சந்திக்க நேரிடும். சில ஜோதிடர்கள் இதை பித்ரு தோஷமாகவும் கருதுகின்றனர். சோம்பல், தடை, வேலையில் தாமதம், மனச்சோர்வு, உணர்ச்சி சமநிலையின்மை ஆகியவை ராகுவால் ஏற்படும் பல விளைவுகள். இதனால் ஏழு ராசிகளுக்கு பாதிப்பு உண்டாகும். அவை, மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மகரம் ஆகியவை ஆகும். சூரிய - ராகு கிரகணம் வாழ்க்கையில் பல தடைகளை கொண்டு வரும் என்று நீங்கள் பயப்பட வேண்டாம். எல்லாவற்றிற்கும் தீர்வு இருப்பது போலவே, சூரிய-ராகு கிரஹண தோஷமும் தீர்க்கப்படக் கூடியது தான்.
சூரிய- ராகு கிரகண தோஷம் நீங்க!!
1). சூரிய ராகு கிரகண தோஷத்திலிருந்து விடுபட, சூரிய ராகு கிரகண தோஷ எந்திரத்தை வீட்டில் வையுங்கள். இது கிரகண தோஷத்தின் எதிர்மறை விளைவை அகற்றும். இந்த எந்திரத்தினால், ராகு அமைதியாகி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த யந்திரம் கிரகண யோக தடைகள், துரதிர்ஷ்ட விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இதன் விளைவாக, ஒரு நபரின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. மூத்த குடும்ப உறுப்பினர்களுடன் உறவு மேம்படும். இந்த எந்திரம் கிரஹணத்தால் ஏற்படும் அமைதியின்மை, கவலைக்கான காரணங்களையும் நீக்குகிறது.
இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!
2). சூரிய ராகு கிரகண தோஷம் நீங்க, ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். சூரிய கிரகணத்திற்குப் பின்னர் சிவப்பு துணி, செம்பு பாத்திரங்கள், பருப்பு, கோதுமை, சிவப்பு பழங்களை தானம் செய்வது மிகவும் நல்லது. கிரகணத்திற்குப் பிறகு இந்த பொருட்களை தானம் செய்வதால் ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி சுப பலன்கள் கிடைக்கும்.
3). சூரிய கிரகணத்தின் போது மனதை ஒருங்கிணைத்து வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இதனுடன் மஹாமிருத்யுஞ்சய மந்திரம், ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம், சிவன் மந்திரம் ஆகியவற்றை கிரகணத்தின் போது உச்சரிக்கலாம். 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரிப்பதும், ஹனுமான் சாலிசாவை உச்சரிப்பதும் கிரஹண தோஷத்திலிருந்து விடுபட உதவுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கிரகணத்தின் அசுப பலன்கள் குடும்பத்தில் இருந்து விலகி இறைவனின் அருளும் நிலைத்திருக்கும்.
4). சூரிய பகவானின் மந்திரம், ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் அல்லது காயத்ரி மந்திரம் ஆகியவற்றை உச்சரிப்பது கிரகண தோஷத்தின் பக்க விளைவுகளை குறைக்கும்.
இதையும் படிங்க: சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை எப்போது? என்னென்ன செய்தால் நம் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும் தெரியுமா?