MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை எப்போது? என்னென்ன செய்தால் நம் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும் தெரியுமா?

சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை எப்போது? என்னென்ன செய்தால் நம் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும் தெரியுமா?

முன்னோரை வழிபட ஏற்ற நாளாக விளங்கி வருகிறது அமாவாசை திதி. சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை ஏப்.19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

2 Min read
Author : maria pani
| Updated : Apr 18 2023, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

குலதெய்வ வழிபாடு ஒரு குடும்பத்திற்கு ரொம்ப முக்கியமானது. குலதெய்வங்கள் கூட இருந்தால் எந்த சோதனையும் அணுகாது. அதனால் தான் ஆண்டுக்கு 3 முறையாவது குலதெய்வ வழிபாடு முக்கியம் என பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். இன்னொரு வழிபாடு 'பித்ரு வழிபாடு' ஆகும். இவர்கள் தான் நமக்கு குலதெய்வ வழிபாட்டை செய்து காட்டியவர்கள். முன்னோர் வழிபட்டை எப்போதும் மறக்கக் கூடாது. அவர்களை வழிபட அமாவாசை திதி உகந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த சித்திரை மாதம் வரும் அமாவாசை திதியை, வைஷாக அமாவாசை என்பார்கள். இந்த புதிய சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி நாளை (ஏப்ரல் 19) காலை 11:23 மணியில் தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 9.41 மணி வரைக்கும் இருக்கிறது. இந்த நாளில் முன்னோரை வேண்டி வணங்கினால் எல்லா துன்பமும் விலகும் என்பது ஐதீகம். 

35

சிலர் ஒவ்வொரு ஆண்டும் முன்னோர் இறந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதோடு நிறுத்தி கொள்கிறார்கள். ஆனால் ஒரு ஆண்டுக்கு 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதுமட்டுமில்லை ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை திதியிலும் தர்ப்பணம் கொடுத்து முன்னோரை வழிபடலாம். 

45

எப்போதும் அமாவாசை தினங்களில் காலையில் எழுந்து நீராடிவிட்டு, முன்னோர் படங்களுக்கு மாலை அணிவித்து வணங்க வேண்டும். குடும்பமாக முன்னோர் படங்களின் முன்பு நின்று வணங்கி ஆசி பெற வேண்டும். சந்ததி தழைத்தோங்க மனதில் வேண்டிக் கொண்டே ஆசி பெற்று கொள்ளுங்கள். அன்றைய தினம் குறைந்தபட்சம் 1 அல்லது 4 முதல் 5 பேருக்கு ஏதேனும் சாப்பாடு வாங்கி உணவளியுங்கள். இப்படி தானம் செய்வதால் முன்னோர் ஆசி கிடைக்கும். தானம் கொடுக்க கொடுக்க புண்ணியம் சேரும். இதனால் உங்களுடைய வம்சம் வாழையடி வாழையாய் தழைக்கும். 

இதையும் படிங்க: வற்றாத பணவரவை பெற! வீட்டு ஹாலில் இந்த 1 விஷயம் பண்ணுங்க! வாஸ்து தோஷங்கள் விலகி பணம் பெருகும்!!

55

பித்ரு தோஷம் நீங்க!! 

யாரேனும் தங்களுடைய பரம்பரையில் காலமான முன்னோருக்கு முறையாக திதி கொடுக்காமல் விட்டால் அவர்ககுக்கு பித்ரு தோஷம் ஏற்படும். அப்படி ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் ஆகிவிடும். இதை சரிசெய்ய வைஷாக அமாவாசை நாளான ஏப்ரல் 19ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் தலை மூழ்கி நீராட வேண்டும். பின்னர், மறைந்த முன்னோருக்கு திதி கொடுக்க வேண்டும். இந்நாளில் ஏழை எளியோருக்கு இயன்ற தானம் செய்யலாம். இதனால் முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். பித்ரு தோஷங்கள் கூட விலகி வாழ்க்கை வளமாகும். 

இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 4 ராசிகள் தலையெழுத்தே மாறும்! பண மழையில் நனைவார்கள்!!

About the Author

MP
maria pani
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Purattasi Kolam: புரட்டாசி ஸ்பெஷல் கோலம் டிசைன்.. உங்க வீட்டு வாசலில் ட்ரை பண்ணுங்க!
Recommended image2
Perumal Holy Names: "கோவிந்தா..நாராயணா"..புரட்டாசியில் சொல்ல வேண்டிய பெருமாள் திருநாமங்கள்!
Recommended image3
Purattasi: நாளை புரட்டாசி முதல் நாள்.. வீட்டில் இந்த விஷயங்களை மறக்காமல் செய்யுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved