MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spititual: மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கும் வழிகள்! இனி நீங்கள் குபேரன்தான்.! கடன்களே இருக்காது.!

Spititual: மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கும் வழிகள்! இனி நீங்கள் குபேரன்தான்.! கடன்களே இருக்காது.!

செல்வம், சுபிட்சம், சந்தோஷம் வேண்டுவோர் மகாலட்சுமியை வணங்க வேண்டும். பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயம் ஆகியவை லட்சுமியின் அடையாளங்கள். தினசரி தீப வழிபாடு, மந்திர ஜபம், அன்னதானம் ஆகியவை வாழ்வில் செல்வத்தை வளர்க்கும்.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Sep 16 2025, 06:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வீட்டிற்கு வரும் மகாலட்சுமி .!
Image Credit : AI Generated

வீட்டிற்கு வரும் மகாலட்சுமி .!

மகாலட்சுமி என்பது செல்வ வளமும் சுபிட்சமும் தரும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயம் ஆகிய ஐந்தும் திருமகளின் அடையாளங்களாக பழமையான ஞான நூல்கள் கூறுகின்றன. இந்த ஐந்தும் எங்கிருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி தங்கி வாழ்வார் என்று நம்பப்படுகிறது. இதனால் அந்த இல்லத்தில் பொருளாதார வளமும், மன நிம்மதியும் எப்போதும் நிலைத்து நிற்கும். இனிப்பான உணவு வகைகள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தவை. அதனால் திருமணம், யாகம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் இனிப்புகளை வழங்கும் பழக்கம் உருவாகியுள்ளது. இது திருமகளை மகிழ்விக்கும் வழிபாடாக கருதப்படுகிறது. வாழ்க்கை இனிமையாய் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்தச் சடங்கு இன்றும் தொடர்கிறது. செல்வ வளமும், சுபிட்சமும், சந்தோஷமும் வேண்டுமென்றால் திருமகளை வணங்க வேண்டும் என்று அனைத்து சாஸ்திரங்களும் கூறுகின்றன. மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய, சில எளிய பரிகாரங்கள், தினசரி நடைமுறைகள் முக்கியமானவை.

26
அருள் நிறைந்த பொருட்கள்.!
Image Credit : Asianet News

அருள் நிறைந்த பொருட்கள்.!

மகாலட்சுமி கடலிலிருந்து தோன்றிய தெய்வமாகக் கருதப்படுவதால், உப்பும் லட்சுமியின் அருள் நிறைந்த பொருளாக போற்றப்படுகிறது. அதேபோல், பசுக்கள், யானைகள், வில்வம் ஆகியனவும் திருமகளின் அருள் சார்ந்தவையாக கருதப்படுகின்றன. வீட்டில் தினமும் விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்கினால் குடும்பத்தில் செல்வம், ஆரோக்கியம், அமைதி அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகாலட்சுமி தலங்களை தரிசிக்கச் செல்லுதல் வறுமையை அகற்றி வாழ்வில் வளம் சேர்க்கும். எங்கு அவள் அருள் நிலைக்கிறதோ, அங்கு அல்லல்கள் அகன்று சுபிட்சமும் சந்தோஷமும் பெருகும். ஆகவே, வீட்டில் அவளின் அடையாளங்களைக் கொண்டு வழிபடுதல், தினசரி தீபாராதனை செய்தல், ஸ்தோத்திரம் கூறுதல் ஆகியவை நம் வாழ்வை வளமாக்கும் ஆன்மீக வழிகள் எனலாம்.

Related Articles

Related image1
Astrology: அதிர்ஷ்டத்தை நம்பாத 3 ராசிகள்.! சொந்த திறமையால் கோடிகளை குவிப்பார்களாம்.!
Related image2
Astrology: சனி எதிரில் பாயும் குரு.! இனி 12 ராசிகளுக்கும் இதெல்லாம் நடக்கும்.! பரிகாரம் இதுதான்.!
36
மகாலட்சுமியை அழைத்து வரும் சிறப்பு மந்திரங்கள்.!
Image Credit : AI Generated

மகாலட்சுமியை அழைத்து வரும் சிறப்பு மந்திரங்கள்.!

மகாலட்சுமியை வணங்க சிறப்பு மந்திரங்களும் உள்ளன. “கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம”, “கிருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோநம” என்று தொடங்கும் ஸ்தோத்திரம் திருமகளைப் போற்றுவதற்கான மிகச் சிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால், உள்ளம் தெளிவடைந்து செல்வம் பெருகும். சிவாலயங்களில் வடமேற்குப் பகுதியில் பெரும்பாலும் மகாலட்சுமி சந்நிதி அமைந்திருக்கும். 

திருவையாற்றில் உள்ள ஐயாறப்பர் ஆலயத்தில் மகாலட்சுமிக்குத் தனித்த சிற்றாலயம் உள்ளது. மூன்று கலசங்களுடன் கூடிய விமானத்தில், பெரிய திருவுருவில் தரிசனம் தரும் மகாலட்சுமி அருகில் சரஸ்வதி தேவியுடனும் அமைந்திருப்பதால், முப்பெருந்தேவியரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.

46
இதெல்லாம் செய்தால் போதும்.!
Image Credit : X/airnews_hyd

இதெல்லாம் செய்தால் போதும்.!

திருமகளின் அடையாளங்கள்

பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயங்கள் – இந்த ஐந்து பொருட்களும் லட்சுமி அருளின் அடையாளங்கள். இவை இருக்கும் வீட்டில் பொருளாதார வளம் நிலைத்து நிற்கும். வீட்டில் தாமரை மலரை வைக்க முடியாவிட்டால், தாமரை படமோ அல்லது தாமரை சின்னமோ வைத்தாலும் அதே பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தினசரி தீப வழிபாடு

மாலை நேரத்தில், வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் நெய் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வணங்க வேண்டும். சாத்தியமில்லையெனில் எண்ணெய் விளக்கேற்றியும் வழிபடலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு தீபங்கள் ஏற்றி, திருமகளின் புகழ் பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவசதி இரண்டும் வளரும்.

56
மகாலட்சுமியை வரவேற்க எளிய வழிகள்.!
Image Credit : Asianet News

மகாலட்சுமியை வரவேற்க எளிய வழிகள்.!

பரிகாரங்கள்

வீட்டின் வாசலில் கோலம்: தினமும் வெள்ளை அரிசி மாவால் கோலம் போடுவது திருமகளுக்கு பிரியமானது.

அன்னதானம்: ஏழைகளுக்கு உணவளிப்பது திருமகளை மகிழ்விக்கும் சிறந்த பரிகாரம்.

தானம்: பெண்களுக்கு சீர்திருத்தப்பட்ட உடை, தங்கம், வெள்ளி போன்றவற்றை வழங்கினால் லட்சுமியின் அருள் அதிகரிக்கும்.

சிறப்பு வழிபாடு

“ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்ம்யை நம:”, “கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம” போன்ற மந்திரங்களை தினமும் 108 முறை ஜபிக்கலாம். இவை மனதில் அமைதியையும், வாழ்வில் வளத்தையும் தரும்.

66
சிறப்பு நாட்கள், தரிசன பலன்.!
Image Credit : Asianet News

சிறப்பு நாட்கள், தரிசன பலன்.!

சிறப்பு நாட்கள்

வெள்ளிக்கிழமை – மகாலட்சுமிக்கு மிகுந்த உகந்த நாள். அன்றைய தினம் பால், இனிப்பு, தாமரைப் பூ வைத்து வழிபட்டால் சுபபலன் அதிகம்.

தீபாவளி – மகாலட்சுமி பூஜை செய்யும் நாள். அன்று வீட்டில் தீபம் ஏற்றி அவளை வணங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும்.

வரலட்சுமி விரதம் – பெண்கள் பெரிதும் கடைப்பிடிக்கும் விரதம். இந்த நாளில் சீரும், சிறப்பும் குடும்பத்தில் நிலைக்கும்.

தரிசன பலன்

மகாலட்சுமி சந்நிதி அமைந்த தலங்களைச் சென்று தரிசிப்பதும் வறுமையை அகற்றும். குறிப்பாக திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் உள்ள மகாலட்சுமி சிற்றாலயம், பக்தர்களுக்கு பேரருளை வழங்குகிறது. அங்கு சரஸ்வதி, துர்கை தேவியரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம் என்பது சிறப்பாகும். மகாலட்சுமி அருளைப் பெற, வீட்டில் சுத்தம், ஒழுங்கு, கருணை ஆகியவை நிலைத்திருக்க வேண்டும். தினசரி தீப வழிபாடு, மந்திர ஜபம், அன்னதானம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதால், வாழ்வில் செல்வம், ஆரோக்கியம், ஆனந்தம் அனைத்தும் வளரும். திருமகள் தங்கி வாழும் வீடு எப்போதும் மகிழ்ச்சியாலும் வளமாலும் நிறைந்திருக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்
ஜோதிடம்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved