Spiritual: உருட்டினால் அதிசயம் நடக்கும்.! யாரும் அறிந்திராத ஆன்மிக ரகசியம்.!
தற்காலத்தில் 'உருட்டு' என்ற வார்த்தை பொய் சொல்வதைக் குறித்தாலும், கர்நாடகாவின் ஸோதே மடத்தில் இதற்கு ஒரு ஆன்மிக அர்த்தம் உண்டு. அங்கு நடைபெறும் பூதராஜன் பூஜையின் போது, தேங்காயை உருட்டி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

உருட்டு, உருட்டு - மாறிபோன அர்த்தம்
தற்போத உருட்டு என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாறிபோய் விட்டது. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் போது, உருட்டு என்ற கமெண்ட் வந்தால், நாம் சொல்வது பொய் என்பதாக கருதப்படும். இந்த நிலையில், உருட்டினால் அதிசயம் நடக்கும் என்ற ஆன்மிக ரகசியத்தைதான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
ஸோதே மடத்தில் பூதராஜன் வழிபாடு
கர்நாடகத்தின் ஸோதே என்ற ஊரில் அமைந்துள்ள அஷ்டமடங்களில் ஒன்றான ஸோதே மடத்தில், ஶ்ரீவாதிராஜரின் மூல பிருந்தாவனம் இருக்கிறது. மத்வமதத்தை உயர்த்திய ஶ்ரீவாதிராஜர், ஶ்ரீராகவேந்திர சுவாமிகளின் பரம்பரையில் விளங்கிய மகான். இவர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் “பூதராஜன்” வரலாறு.
அருள்பாலிக்கும் பூதராஜன்
ஒரு முறை அகங்காரமுள்ள பூதம் பலரிடம் வாதம் செய்து, பதில் அளிக்க முடியாதவர்களை கொன்றுவந்தது. வாதிராஜரை சந்தித்தபோது, பூதம் அவரிடம் ஆ-கா-மா-வை என்றால் என்ன? என்று கேட்டது. அதற்கு வாதிராஜர், இவை ஆஷாட, கார்த்திகை, மாசி, வைகாசி என்ற நான்கு மாதங்களை குறிக்கும்; இம்மாதங்களில் பௌர்ணமி நாளில் இறை வழிபாடு செய்வது மிகப் பலனளிக்கும் என்று விளக்கமளித்தார். வாதிராஜரின் ஞானமும் தெய்வீக ஒளியையும் கண்டு பூதம் தன்னுடைய ஆணவத்தை விட்டுவிட்டு அவருக்கு அடிநாயகனாகி பூதராஜன் ஆனது.
உருட்டிணால் நினைத்தது நடக்கும
அதன் பின்னர் வாதிராஜர் எங்கே சென்றாலும் பல்லக்கின் முன்பகுதியைத் தாங்கி சென்றது பூதராஜன் என்று கூறப்படுகிறது. இன்று வரை ஸோதே மடத்தில் நடைபெறும் “பூதராஜன் பூஜை” மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த பூஜையின் போது பக்தர்கள் நம்பிக்கையுடன் தங்கள் விருப்பத்தை சொல்லி, தேங்காயை உருட்டிவிட்டால், வேண்டிய காரியம் நிறைவேறும் என ஐதீகம் கூறுகிறது.
ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும்
பூதராஜரின் ஆசீர்வாதத்தைப் பெற ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் திருக்குளத்தில் நீராடி பரிசுத்தமாகச் செல்லுதல் வழக்கம். இங்கு காணப்படும் சிவலிங்கங்கள் பூதராஜரின் வேண்டுதலினால் உருவானவை என நம்பப்படுகிறது. ஸோதே மடம் இன்றும் பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கைக்குப் பிரதான தலமாக விளங்குகிறது.

