- Home
- Spiritual
- Spiritual: வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுனமா?! நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?
Spiritual: வெள்ளிக்கிழமை வீட்டில் கண்ணாடி உடைந்தால் அபசகுனமா?! நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?
வீட்டில் கண்ணாடி உடைந்தால் அது அபசகுனம் என்று பலரும் அஞ்சுகின்றனர். ஆனால், அது பழைய சக்தி வெளியேறி புதிய சக்தி வரப்போவதன் அறிகுறி என்றும், இதற்குப் பெரிய பரிகாரங்கள் தேவையில்லை என்றும் இக்கட்டுரை விளக்குகிறது.

கண்ணாடி உடைந்தால் என்ன சகுனம்
வீட்டில் கண்ணாடி என்பது சும்மா ஒரு பொருள் மட்டுமல்ல. மனிதனின் முகத்தை, வீட்டின் சக்தியை, இடத்தின் அதிர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு மங்கலப் பொருளாகவே கருதப்படுகிறது. குறிப்பாக முகம் பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தால் பலருக்கும் பயமும் சந்தேகமும் ஊடுருவி விடும். “அபசகுனமா? தீங்கு வரப் போகிறதா?” என்ற எண்ணங்கள் மனத்தில் கிளறும்.
பழைய சக்தி வெளியேறுவதற்கான குறியீடு
அஸ்திகர்களின் நம்பிக்கையில் கண்ணாடி உடைதல் என்பது ஒரு இடத்தில் குவிந்திருந்த பழைய சக்தி வெளியேறுவதற்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. ஃபெங் ஷூயி, வாஸ்து போன்றவற்றிலும் இது ஒரு சாதாரண விடயமாகச் சொல்லப்படுகிறது. பழைய கண்ணாடி உடைந்தால் புதிய சக்தி உருவாகவிருக்கிறது என்றே அதைப் பார்க்கிறார்கள். அதனால் கவலை படவேண்டாம். வீட்டின் சக்திக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்றால் அது உங்கள் எண்ணத்திலேயே தொடங்குகிறது. மனம் சஞ்சலமடைந்தால் தான் துன்பம் ஏற்படுகிறது; பொருள்களால் அல்ல.
பரிகாரம் இதுதான் மக்களே.!
ஜோதிடக் வாக்கியமும் இதையே கூறுகிறது. மனம் நிம்மதியாகவும் தெளிவாகவும் இருந்தால் எந்தச் சகுனமும் தீங்காகாது. உடைந்த கண்ணாடியை உடனே வெளியே போட்டுவிடுங்கள். புதிய கண்ணாடி ஒன்றை வீட்டில் வைத்து விடுங்கள். அதற்கு மேல் பரிகாரம் எதுவும் தேவையில்லை. சிறிய சுத்தம் செய்து, ஓரளவு குங்குமம்–சந்தனம் தடவி வைத்தால் போதும். சிலர் விரும்பினால் வீட்டில் உள்ள தெய்வத்தின் முன் ஒரு தீபம் ஏற்றி வைக்கலாம். இதுவும் ஒரு ஆன்மிக சுத்திகரிப்பாகவே கருதப்படுகிறது.
கண்ணாடி உடைந்தது ஒரு முடிவல்ல
வாழ்க்கையில் நடக்கும் சிறு தவறுகளையே பெரிய சகுனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பக்தி, மனதில் நம்பிக்கை, உள்ளத்திலான தெளிவு — இதுவே மிகப்பெரிய பரிகாரம். கண்ணாடி உடைந்தது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனம் சஞ்சலமில்லாமல், நம்பிக்கையுடனும், நல்ல எண்ணங்களுடனும் முன்னேறுங்கள்.

