MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Panguni Uthiram2023: இன்று திருமணம் கைகூடவும், கேட்ட வரம் கிடைக்கவும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!

Panguni Uthiram2023: இன்று திருமணம் கைகூடவும், கேட்ட வரம் கிடைக்கவும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!

வெகு சிறப்பான நாளான இன்று முருகனை எப்படி வணங்குவது, கூற வேண்டிய சிறப்பான மந்திரங்கள் என்னென்ன என்பதனை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Web Team
| Updated : Apr 05 2023, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று வெகு சிறப்பாக அறுபடை வீடுகளிலும், அருகில் இருக்கும் முருகன் கோவில்களிலும் திருமண வைபவ பூஜைகள் நடைபெறும். இந்த பங்குனி உத்திரத்தில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டால் பக்தர்களின் பிறவி பிணிகள் நீங்கும் என்ற ஐதீகம் உண்டு.

இந்த நன்னாளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து சுபகாரியங்களும் தடை இல்லாமல் நடைபெறும். அத்தகைய சிறப்பான நாளான இன்று முருகனை எப்படி வணங்குவது, கூற வேண்டிய சிறப்பான மந்திரங்கள் என்னென்ன என்பதனை இந்த பதிவில் காணலாம்.

முருகப்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் அருள் புரியும் பங்குனி உத்திரத்தன்று முருகன் வழிபாடு செய்வது தடை பட்ட திருமணத்தை கை கூட வைக்கும். அந்த நாளில் முறையாக விரதம் இருந்து , வெகு விரைவில் மனதுக்கு பிடித்தவரை கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு ஆராதனைகளும் ,பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். நம்மால் இயன்ற அளவு கோவில்களுக்கு தேவையான அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்தால் வெகு சிறப்பான பலன்களை நாம் பெற முடியும்.

 

23

இன்று கோவிலுக்கு கட்டாயமாக சென்று முருகனை தரிசிப்பதால் வீட்டில் குலா தெய்வ வழிபாட்டு செய்வது முதலியவற்றை செய்வதால் நாம் அனைவருக்கும் பிறவி பிணிகள் அனைத்தும் நீங்கும். அதோடு முன் ஜென்ம கர்மாக்கள் கழிந்து விடுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பல தெய்வங்கள் பங்குனி உத்திரத்தன்று தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆக இந்த நன்னாளில் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்த வரன் அமையும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தவிர பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் இந்த நாளின் வழிபாடு செய்து நலன் பெறலாம்.

இன்று மதியம் 12 மணி வரை உத்திர நட்சத்திரம் ஆனது இருப்பதால் , இறை வழிபாடு செய்ய நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வது மிகவும் நல்ல பலனை அளிக்கும். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானை வழிபாடு செய்வதும், வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும் .

33

ஓம் சரவணா பவ என்ற மந்திரத்தை எத்தனை முறை கூற இயலுமோ அத்தனை முறை கூறி வாருங்கள். பூஜையின் போது இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இப்படி சொல்வதால் தடைபட்ட அனைத்து சுப காரியங்களும் கைகூடி வரும்.

மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவை நீங்கப்பெற்று இன்பமாக வாழலாம்.

படிக்கின்றிலை பழனித் திருநாமம்,
படிப்பவர் தான் முடிக்கின்றிலை முருகா என்கிலை,
முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை பரமானந்தம் மேற்கொள் ,
விம்மி விம்மி நவிக்கின்றிலை ,நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே!


இந்த மந்திரத்தை கூறலாம் அதே போன்று திருமுருகாற்றுப் படை,கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம் போன்றவற்றையும் வாசிக்கலாம் அல்லது ஒலி வடிவில் கேட்கலாம். இதனை கேட்பதால் அல்லது கூறுவதால் நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கூட கூறலாம்.பௌர்ணமி நாளான இன்று இதனை கூறுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இன்றைய தினத்தில் இந்த மந்திரங்களை ஒரு மனதாக கூறி முருகப்பெருமானின் அபீரீதமான ஆசியை பெற்றும், கேட்ட வரங்களையும் பெற்று வாழ்வில் சுபிட்சம் பெறுங்கள் .

பங்குனி உத்திரத்தன்று இந்த 1 பொருளை வீட்டில் வைத்து வழிபட்டால் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்!

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்யுங்கள்.! இல்லையெனில் தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved