- Home
- Spiritual
- சங்கடஹர சதுர்த்தி 2025 : வேண்டிய வரம் கிடைக்க விநாயகரை இந்த மந்திரம் சொல்லி வழிபடுங்க!!
சங்கடஹர சதுர்த்தி 2025 : வேண்டிய வரம் கிடைக்க விநாயகரை இந்த மந்திரம் சொல்லி வழிபடுங்க!!
இன்று சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை எப்படி வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sankatahara Chaturthi (April 16): Worship Vinayagar in this way to fulfill your wishes! : விநாயகப் பெருமானுக்கு மிகவும் உயர்வான விரதம் எதுவென்றால் அது சதுர்த்தி விரதம் தான். பொதுவாக சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை முழு மனதுடன் வழிபட்டால் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு நன்மைகளை பெறலாம்.
What is Sankatahara Chaturthi?
சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றால் என்ன?
சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பது தமிழ் மாதமான தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்சத்தின் 4வது நாளில் வரும் விரதமாகும். விநாயகரை தேய்பிறை சதுர்த்தியில் வழிபட்டால் அளவில்லா நற்பலன்கள் கிடைக்கும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் ஒழிப்பது. அதாவது சங்கடஹரா என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை என்பதாகும்.
இதையும் படிங்க: விநாயகர் சிற்பத்துக்காக சுதர்சன் பட்நாயக்கிற்கு 'தி ஃப்ரெட் டேரிங்டன் விருது'
Sankatahara Chaturthi 2025?
சங்கடஹர சதுர்த்தி 2025 எப்போது?
இன்று (ஏப்.16) செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்த திதியானது, காலை 11:58 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 17ஆம் தேதி புதன்கிழமை அன்று பகல் 1:24 மணிக்கு முடியும். மாலை வேலையில் தான் சதுர்த்தி வழிபாடு செய்ய வேண்டும் என்பதால் இன்று மாலை விநாயகர் நினைத்து வழிப்படலாம்.
இதையும் படிங்க: மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு விசுவாவசு ராசி பலன்!
Sankatahara Chaturthi 2025 Worship Method
சங்கடஹர சதுர்த்தி 2025: விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தி நாளில் பக்தர்கள் சிலர் சூரியன் சந்திரன் உதயம் வரை விரதம் இருப்பார்கள் இன்னும் சிலரோ முழு நாளும் விரதம் இருப்பார்கள் மேலும் சிலர் பலன்கள் பால் மற்றும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். விரதம் இருப்பவர்கள் விநாயகருக்கு காலையிலே பூஜை செய்து, விநாயகர் படத்தை அலங்கரித்து, விநாயகர் பிடித்த பழங்கள், அருகம்புல், மோதகம், தேங்காய், அர்ச்சதை வைத்து வழிபட வேண்டும். முக்கியமாக, "ஓம் கணபதி போற்றி" இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் 108 முறை சொல்லியபடியே மனதில் உங்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்று நம்புங்கள். பிறகு மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அங்கே நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு, அர்ச்சனை செய்து வழிபட்டு பிறகு, இரவில் உதயமாகும் சந்திரனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.