MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • உங்களுக்கு பணக்கஷ்டம் ஜென்மத்துக்கும் வராது.. துளசி வேரை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்களுக்கு பணக்கஷ்டம் ஜென்மத்துக்கும் வராது.. துளசி வேரை இப்படி யூஸ் பண்ணுங்க!!

நிதி நெருக்கடி பிரச்சனைகள் முழுவதும் நீங்கி பணம் பெருக துளசி வேரை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என வாஸ்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

2 Min read
Author : maria pani
| Updated : Jun 08 2023, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்து மதத்தில் துளசி செடி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. அதனால் தான் பெரும்பாலான இந்துக்களின் வீட்டில் துளசி செடி இருக்கும். வாஸ்துபடி துளசி செடியை வைத்து வளர்ப்பது நிதி மேம்பாட்டை தரும். மத நம்பிக்கைகளின்படி, துளசி செடியில் லட்சுமி தேவி குடியிருக்கிறாள். இதை வீட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றல் தங்கும். முறையாக வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

துளசியின் வேரும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. நிதி நெருக்கடி பிரச்சனைகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் துளசி வேருக்கு பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைச் செய்வதன் மூலம் ஒரு நபரின் அனைத்து கஷ்டங்களும் விலகிவிடும். 

பணம் சேர பரிகாரம்: 

பணப்பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்பட்டால், தினமும் காலையில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள்.  மாலையில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். இதனால், பணம் பெறுவதற்கான அனைத்து வழிகளும் தடையின்றி காணப்படும். துளசி வேரை எடுத்து வெள்ளி தாயத்தில் போட்டு கழுத்தில் அணியவும். இதை செய்வதன் மூலம், விரைவில் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய பொருளாதார நிலையும் மேம்படும். மகாலட்சுமியும் இந்த பரிகாரத்தை செய்வதால் மனங்குளிர்வாள். 

35

கிரக அமைதிக்கு பரிகாரம்:  

ஜாதகத்தில் கிரகங்களின் நிலை அசுபமாக இருந்தால், துளசியை வழிபட்ட பின், அதில் இருந்து சிறிது வேரை எடுத்துக் கொள்ளவும். இதற்குப் பிறகு, அதை ஒரு சிவப்பு நிற துணியில் அதைக் கட்டி அல்லது ஒரு வெள்ளி தாயத்தில் வைத்து அதை உங்கள் கையில் கட்டவும். இதன் மூலம் கிரக தோஷங்களில் இருந்து விடுதலை கொடுக்கும். 

45

வேலையில் வெற்றி பெற பரிகாரம்: 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையில் தோல்வி கிடைத்தால் அல்லது உங்கள் வேலை தடைபட்டால், சிறிது துளசி வேரை எடுத்து கங்கை நீரில் கழுவி வழிபட வேண்டும். அதன் பிறகு, துளசி வேரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி, உங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம், நீங்கள் உடனடியாக பலன்களை பெறுவீர்கள், மேலும் உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

இதையும் படிங்க: கழிப்பறையும் குளியலறையும் இணைந்திருந்தால் பிரச்சனையா? குளியலறை வாஸ்து பிரச்சனையை தடுக்க எளிய பரிகாரம்!!

55

எதிர்மறை சக்தியை நீங்க பரிகாரம்: 

துளசி நேர்மறை ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது.  நீங்கள் வீட்டில் துளசி செடியை நட்டு வளர்த்தால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவுகிறது. துளசி வேர் மாலையை அணிவதால் எதிர்மறை சக்திகள் விலகும். 

இதையும் படிங்க: லட்சுமி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!! சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும்!!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Aadi Amavasai: முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க இந்த விஷயங்களை செய்யுங்க..! பலரும் அறியாத ரகசியம்
Recommended image2
Lamp Lighting Rituals: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? இதன் பின்னால் இருக்கும் அறிவியல்!
Recommended image3
Spiritual: சுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியா, தவறா? சாஸ்திரம் சொல்வது என்ன? சுமங்கலிப் பெண்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved