spiritual

புனிதமானது

இந்து சாஸ்திரத்தின்படி, துளசி செடி மிகவும் புனிதமானது. இதில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

இறைவழிபாடு

துளசி செடி வைத்துள்ள வீட்டில் செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் அருளை பொழிவார்கள். 

ஞாயிற்றுக்கிழமை

துளசி செடிக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் ஊற்றவோ, அதன் இலைகளை பறிக்கவோ கூடாது. இது அசுபமாக கருதப்படுகிறது. 

இருள்

வீட்டில் துளசி செடி வளர்த்தால், அதை இருட்டில் வைக்கக் கூடாது. மாலையில் கண்டிப்பாக துளசி செடிக்கு அருகில் தீபம் ஏற்றுங்கள். திறந்தவெளியில் வையுங்கள். 

கவனம்

துளசி செடியை தென்கிழக்கு திசையில் வைக்கக் கூடாது. இது நெருப்பின் திசை. 

திசை

பால்கனியில் வைத்தால் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வையுங்கள். வீட்டிற்கு நடுவே வைக்கலாம்.  

தொட்டி

துளசி செடியை ஒருபோதும் தரையில் நடக் கூடாது. அதை தொட்டியில் தான் நட வேண்டும். 

தனித்துவம்

துளசி செடியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். துளசி செடியை முட்செடிகளுடன் வைக்கக்கூடாது. 

கூரையில் துளசி

துளசி செடியை வீட்டின் கூரையில் ஒருபோதும் வைக்க வேண்டாம். இதனால் நேர்மறை ஆற்றல் கிடைக்காது. 

முட்செடிகள்

துளசி செடியை முட்செடிகளுடன் வைத்தால் நேர்மறை ஆற்றலுக்குப் பதிலாக எதிர்மறை ஆற்றலை பரப்ப தொடங்கிவிடும். 

Find Next One