இன்று பங்குனி வளர்பிறை பிரதோஷம்.. மாலை 6 மணிக்குள் சிவன் கோயில் சென்று வழிபட்டால் இத்தனை பலன்களா!!
Panguni Pradhosham 2023: பங்குனியில் வரும் எல்லா திதி நாள்களும் கடவுள் வழிபாட்டிற்கு ஏற்ற நாள்கள் என்பதால், ஆலயங்களில் விழாக்கள், பல சுப வைபங்கள் இந்த மாதத்தில் தான் அதிகமாக நடைபெறும்.
பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதோஷம் இன்று. மிக சிறப்பான நாள். இன்று பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் சிவன் கோயிலுக்கு சென்று வணங்கினால் நன்மைகள் பல கிடைக்கும்.
நந்தி தேவர், ஐயன் சிவனின் அபிஷேகம் சிறப்பாக நடைபெற பால், பன்னீர், தேன், தயிர் ஆகிய அபிஷேக பொருள்களை காணிக்கையாக கொடுத்தால் நல்லது நடக்கும்.
பங்குனி பிரதோஷ வழிபாடு
பிரதோஷ நேரத்தில் நடைபெறும் ஆலய பூஜையின் போது நந்தி தேவர், சிவன், பார்வதி தேவியை முழுமனதாக பிரார்த்தனை செய்யுங்கள். நவக்கிரக சந்நிதியில் வீற்றிருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, பீட்ரூட் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வணங்கலாம். வழிபாட்டிற்கு பின் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் இனிப்பு வகைகள், பொங்கல், சுண்டல் போன்ற உங்களால் முடிந்தவற்றை வழங்கலாம்.
பிரதோஷ வழிபாடு நன்மைகள்
பங்குனி வளர்பிறை பிரதோஷ நாளில் சிவனை வணங்குவோருக்கு ஜாதகத்தில் உள்ள செவ்வாய் கிரக தோஷ பாதிப்புகள் விலகி நன்மைகள் பெருகும். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லா எதிர்ப்புகளும் தவிடுபொடியாகும்.
இதையும் படிங்க: பேரழகு பெற! முகம் கழுவும்போது இந்த தப்பு பண்ணாதீங்க, இத சரி பண்ணினா எல்லா சரும பிரச்சனையும் 1 வழியில் தீரும்!
பிரதோஷ வழிபாடு நன்மைகள்
உடலில் உள்ள நோய்கள் குணமாகி உடல் வலுவடையும். மனதில் தைரியம் உண்டாகும். திருமண யோகம் கிடைத்து, உடனே முடிவாகலாம். இந்த நன்மைகளை அனுபவிக்க பிரதோஷ வழிபாடு செய்யுங்கள்.
இதையும் படிங்க: செல்லும் வழியில் கிடக்கும் பணத்தை எடுத்து செலவழிக்கலாமா? இதனால் நம் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?