கணவன் மனைவிக்கு இடையே இனி சண்டையே வராது! நெருக்கத்தை அதிகரிக்கும் ரகசிய பரிகாரம்.!
திருமண வாழ்வில் சண்டை சச்சரவுகளால் பிரியும் தம்பதியர் மீண்டும் இணைவதற்கான எளிய ஆன்மிக பரிகாரம் இது. செவ்வாய்க்கிழமையன்று, செய்யப்படும் இந்த பரிகாரம், இருவருக்குள்ளும் அன்பையும் இணக்கத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

அன்பை தரும் ஆன்மிக பரிகாரம்
திருமண வாழ்க்கையில் சிறு கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் அவை அடிக்கடி சண்டை, மனக்கசப்பு, பேசாமை என மாறும்போது தம்பதியரின் உறவுக்கே சோதனையாகி விடுகிறது. இப்படியான சூழ்நிலையில், தம்பதிக்குள் மீண்டும் அன்பும் இணக்கமும் மலர எளிய ஆன்மிக பரிகாரம் ஒன்று நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.
நூலால் கட்டப்பட்டும் விரலி மஞ்சள்
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையன்று செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அன்று கொம்புள்ள இரண்டு விரலி மஞ்சளை வாங்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கணவன் மற்றும் மனைவியின் உடைகளிலிருந்து தலா ஒரு சிறிய நூல் அல்லது துணி துண்டை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இருவரின் சக்தியும் இந்த பரிகாரத்தில் இணைக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.
மஞ்சளும் துணியும் ஆசிர்வதிக்கும்
முதலில் ஒரு விரலி மஞ்சளில் கணவனின் துணியை சுற்ற வேண்டும். அதேபோல் இன்னொரு விரலி மஞ்சளில் மனைவியின் துணியை சுற்ற வேண்டும். பாதி சுற்றியதும், அந்த இரண்டு விரலி மஞ்சள்களையும் ஒன்றாக சேர்த்து, இருவரின் துணிகளையும் இணைத்து முழுமையாக சுற்ற வேண்டும். இது தம்பதியரின் மனமும் வாழ்க்கையும் ஒன்றாக இணைவதை குறிக்கும் என பார்க்கப்படுகிறது.
உறவில் அமைதி நிலவும்
இவ்வாறு தயார் செய்த விரலி மஞ்சள்களை பூஜையறையில் வைத்து தீபம் ஏற்றி, தம்பதிக்குள் உள்ள சண்டை, சச்சரவுகள், மனவெறுப்பு அனைத்தும் நீங்கி, அன்பும் புரிதலும் அதிகரிக்க வேண்டும் என்று மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து சில வாரங்கள் இதை நம்பிக்கையுடன் செய்தால், கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரித்து, உறவில் அமைதி நிலவும் என்று பலர் அனுபவத்தில் கூறுகிறார்கள்.
இதுதான் முக்கியம் மக்களே
முக்கியமாக, இந்த பரிகாரம் செய்யும் போது சந்தேகம் இல்லாமல், நேர்மையான மனதுடன் செய்வதே அதன் பலனை முழுமையாக பெற உதவும்.

