- Home
- Spiritual
- Astrology: செவ்வாயின் வீட்டிற்குள் குடியேறும் புதன்.! 4 ராசிகளுக்கு பொன், பொருள் குவியும்.! தலைவிதியே மாறப் போகுது.!
Astrology: செவ்வாயின் வீட்டிற்குள் குடியேறும் புதன்.! 4 ராசிகளுக்கு பொன், பொருள் குவியும்.! தலைவிதியே மாறப் போகுது.!
Budhan Peyarchi rasi palangal: புதன் பகவான் சில தினங்களில் துலாம் ராசியில் இருந்து வெளியேறி, விருச்சிக ராசிக்கு செல்ல இருக்கிறார். அவரின் இந்த பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. இருப்பினும் கிரகங்களின் இளவரசனாக விளங்கும் புதன் பகவான் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவர் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் பொறுப்பான கிரகமாக விளங்குகிறார். இவரின் ராசி மாற்றம் என்பது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி அவர் துலாம் ராசியில் இருந்து வெளியேறி, விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
- ஏனெனில் இது புதன் பகவான் உங்கள் ராசியில் இருந்து முதல் வீடான லக்ன வீட்டில் பெயர்ச்சி அடைவார்.
- எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் திறமையாக செயல்படுவீர்கள்.
- உங்கள் வேலையில் நல்ல மாற்றம் கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
- இந்த நேரத்தில் திருமணம் ஆனவர்களின் துணைவருக்கும் முன்னேற்றம் கிடைக்கும்.
- திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்பு கிடைக்கலாம்.
- குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த தகராறுகள் தீர்க்கப்படும். உறவுகளில் இனிமை, நம்பிக்கை அதிகரிக்கும்.
- உங்கள் புத்திசாலித்தனம், பகுப்பாய்வுத் திறன், ஆளுமை அதிகரிக்கும்.
- புதிய திட்டங்களில் வெற்றியைப் பெறுவீர்கள்.
துலாம்
- துலாம் ராசிக்கு புதன் பகவான் இரண்டாம் வீடானதன ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
- இதன் காரணமாக நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சுத் திறன் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள்.
- புதிய தொழில்களை தொடங்குவீர்கள்.
- வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பு ஏற்படும். இது உங்கள் செல்வாக்கை அதிகரிக்கும்.
- வாடிக்கையாளர்களின் அதிகரிப்பால் வருமானமும் உயரும்.
- மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
- புதிய மற்றும் விரும்பத்தக்க மாற்றங்களைப் பெறுவீர்கள்.
- வெளிநாட்டில் வேலை செய்யவோ அல்லது படிக்கவோ முயற்சிப்பவர்களுக்கு கனவு நனவாகும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார்.
- எனவே இந்த காலத்தில் நீங்கள் பொன், பொருள், வசதிகள், ஆடம்பரங்களை அனுபவிப்பீர்கள்.
- புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிலவும்.
- அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
- ரியல் எஸ்டேட், நிலம், மனை ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள்.
- முதலீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க லாபத்தை பெறுவீர்கள்.
- தொழில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளும் உள்ளது.
- அரசு வேலைகள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் 11வது வீடான லாப ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
- எனவே வருமானத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
- நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும்.
- சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
- வேலை மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறுவீர்கள்.
- வேலையில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளையும், சம்பள உயர்வுகளையும் பெறுவீர்கள்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பழைய திட்டங்கள் வேகம் எடுக்கும். நின்று போன திட்டங்களை முடித்துக் காட்டுவீர்கள்.
- வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தந்தையுடன் உறவு வலுப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)