MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • திருவனந்தரம் பத்மநாப சுவாமி கோயிலில் இவர் மட்டுமே நமஸ்காரம் செய்ய முடியும்.. வேறு யாராவது செய்தால்..

திருவனந்தரம் பத்மநாப சுவாமி கோயிலில் இவர் மட்டுமே நமஸ்காரம் செய்ய முடியும்.. வேறு யாராவது செய்தால்..

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் ஒரே ஒருவர் மட்டும் தான் சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

2 Min read
Author : Ramya s
Published : Aug 12 2024, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் ஒரே ஒருவர் மட்டும் தான் சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி யாராவது நமஸ்காரம் செய்தால் அவர்களின் சொத்துக்கள் பத்மநாப சுவாமிக்கே சென்றுவிடும் என்றும் கூறுகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

குவோராவில் ரத்தினம் சேகர் என்பவர் இதுகுறித்து பேசிய போது “ கேரள மாநிலத்தில் பத்மநாபசுவாமி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். அவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இந்திய பேரரசில் அசோகர், சந்திரகுப்த மௌரியர், ஹர்ஷவர்த்தனர் என பல புகழ்பெற்ற மன்னர்கள் தமது சொத்துக்களை பல கோயில்களுக்கு தானமாக வழங்கி உள்ளனர். எதிரிகள் மற்றும் திருடர்களிடம் இருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகத்தினர் அந்த சொத்துக்களை சுரங்கம் வெட்டி அவற்றை பாதுகாத்து வந்தனர். 

37

அந்த வகையில் தமிழ்நாட்டில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் என பல கோயில்களில் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டன. பத்மநாப கோயிலும் பல பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள ஏழு பரசுராம சேஷத்திரங்களில் சித்தர்களாலும், முனிவர்களாலும் போற்றப்படுவது பத்மநாப கோயில்.

47

இந்த கோயிலில் 3 வாயில்கள் உள்ளது. இலுப்பை மரத்தடியில் யோக நித்திரை செய்யும் பத்மநாப சுவாமி கோயில் முதல் வாயிலில் அவரின் சிரத்தையும், சிவபெருமானுக்கு அருள் பாலிக்கும் பாவனையில் இருக்கும் வலது கரத்தையும் தரிசிக்கலாம். 

57

2-வது வாயிலில் பூமா தேவியும் திருமகளும் கூடிய பத்மநாபர், 3-வது வாயிலில் திருவடி தரிசனம் செய்யலாம். இந்த கோயிலுக்கு முன் ஒற்றைக்கால் மண்டபம் உள்ளது. இங்கு ஒருவருக்கு மட்டுமே சாஷ்டங்கமாக நமஸ்காரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

67

அதன்படி மன்னர் மார்த்தாண்ட வர்மா மட்டுமே இங்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய முடியும். அவரை தவிர வேறு யாரேனும் நமஸ்காரம் செய்தால் அவரின் சொத்துக்ககள் அனைத்து பத்மநாப சுவாமிக்கே சேர்ந்துவிடுமாம்

 

77
padmanabha swami temple

padmanabha swami temple

இதன் காரணமாகவே மன்னரின் சொத்து முழுவதும் பத்மநாப சுவாமி சொத்தாகவே இருக்கிறது. கோயில் கருவறையில் பத்மநாப சுவாமி நேர் கீழாக ஒரு சுரங்கம் உள்ளது. அதில் கிடைத்த பொக்கிஷமே பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. மூலவரின் தலைக்கு நேர் அடியில் அதை விட அதிகமான தங்க நகைகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
Rasi palan May 2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved