- Home
- Spiritual
- Camphor Astro Tips: பணப் பிரச்சனையை பனி போல நீக்கும் கற்பூர பரிகாரம்! எப்படி செய்யனும்?
Camphor Astro Tips: பணப் பிரச்சனையை பனி போல நீக்கும் கற்பூர பரிகாரம்! எப்படி செய்யனும்?
வீட்டில் பணப்பிரச்சனை இருந்தால் கற்பூரத்தை கொண்டு இந்த பரிகாரங்களை செய்யுங்கள். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

Camphor Astro Tips
கற்பூரம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருள். இந்து மதத்தில் இதற்கு தனி சிறப்பு உண்டு. பெரும்பாலும் இது பூஜை மற்றும் வழிபாடுகளில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பூஜையின் முடிவில் கற்பூரத்தை கொண்டு ஆரத்தி எடுப்பார்கள். இப்படி செய்வது தெய்வங்களை மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது. கற்பூரம் ஆர்த்தி எடுப்பதற்கு மட்டுமல்ல, தீய சக்திகளை அழிக்கவும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது கற்பூரம் தெய்வீகத்துடன் வலுவான தொடர்பை கொண்டிருப்பதால் தீய சக்திகளை விரட்டி, நேர்மறையை ஈர்க்க பூஜை சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு புனிதமான பொருளாக கருதப்படுகிறது. சரி இப்போது ஜோதிட நன்மைகளை பெற கற்பூரத்தை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்மறை சக்தி மற்றும் கெட்ட சகுனங்கள் நீங்கும் :
கற்பூரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு புனிதமான பொருள் இது எதிர்மறை ஆற்றல், தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவற்றை நீக்கும் திறனை கொண்டுள்ளன. இதற்கு பூஜை சடங்குகளுக்கு பிறகு கற்பூரத்துடன் 2-3 கிராம்புகளை போட்டு விளக்கேற்ற வேண்டும். அதிலிருந்து வரும் வலுவான நறுமணம் எதிர்மறை சக்தியை நீக்குகிறது.
கிரக தோஷம் நீங்க :
கிரக தோஷத்தை எதிர்த்து போராடும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு. பொதுவாக ராகு, கேது, சுக்கிரன், சனி போன்ற கிரகங்களின் ஆசிகளைப் பெற கற்பூரத்தை தினமும் பயன்படுத்துகிறார்கள். இப்போது கிரகங்களின் தோஷத்தை போக்க பசுவின் சாணத்தில் 4-5 கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை மாலை வேலை அல்லது சனி, வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டம் பெற :
கற்பூரம் அதிர்ஷ்டத்தின் சின்னம் என்பதால் உங்களது பணப்பையில் கற்பூரத்தை வைத்தால் பெரிய மாற்றத்தை காண்பீர்கள். நீங்கள் ஒரு நேர் கானலுக்கு சென்றாலோ அல்லது வேலைக்கு முதல் நாள் செல்கிறீர்கள் என்றாலோ கற்பூரத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் காரியம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
செல்வம் மற்றும் செழிப்பை ஈர்க்க ;
கற்பூரம் லட்சுமி தேவியின் சின்னமாக கருதப்படுவதால் அது உங்களது வாழ்க்கையில் செல்வம், செழிப்பு மற்றும் நிதி வளர்ச்சியை ஈர்க்க பெரிதும் உதவுகிறது. செல்வம் செழிப்பை ஈர்க்க, லட்சுமி தேவியின் அருளை பெற லாக்கரில் அல்லது வீட்டில் பணத்தை வைக்கும் இடத்தில் கற்பூரத்தை வையுங்கள். நிதி நிலைமை மேம்படும்.
வீட்டின் சூழலை இனிமையாக்க :
கற்பூரம் வீட்டின் சூழ்நிலை இனிமையாக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் தூங்கும் அறையில் கற்பூரத்தை வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருகும். வீட்டின் தென்மேற்கு திசையில் கற்பூரத்தை வைத்தால் வாழ்க்கையில் செழிப்பு கொண்டு வரும்.