- Home
- Spiritual
- Today Rasipalan 19th Mar 2023: எந்த திட்டமாக இருந்தாலும் இன்றைக்கு போடுங்க.. வெற்றி உங்களுக்குத்தான்
Today Rasipalan 19th Mar 2023: எந்த திட்டமாக இருந்தாலும் இன்றைக்கு போடுங்க.. வெற்றி உங்களுக்குத்தான்
மார்ச் 19ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.

மேஷம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கியமான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்தவும்.
ரிஷபம்:
எந்தவொரு முக்கியமான முடிவும் எடுப்பதற்கு முன் அதுதொடர்பான சரியான விஷயங்களை தெரிந்துகொண்டு எடுக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம். அதிகமான கவலை உங்கள் வேலையை பாதிக்கும். உங்கள் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
மிதுனம்:
உங்கள் இலக்கை அடைவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். பணிமாற்றத்திற்கு ஏற்ற நேரம் இது. குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்து மகிழ்வீர்கள்.
கடகம்:
அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். வருமானத்திற்கான வழிகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பங்குனி உத்திரம் 2023 எப்போது? விரத முறை.. வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!
சிம்மம்:
இன்று திட்டமிட்டால் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களுடனான சந்திப்பு மேன்மையளிக்கும். மார்க்கெட்டிங் பணிகளில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
கன்னி:
குடும்ப விவகாரங்களை பல சவால்களை கடந்து முடிப்பீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். பட்ஜெட்டை மனதில் வைத்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சிறு பிரச்னை ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கணவன் - மனைவி இடையேயான நெருக்கம் அதிகரிக்கும்.
துலாம்:
கோபத்தை குறைக்கவும். தொழில் வளர்ச்சி குறித்து யோசிக்கவும், முடிவெடுக்கவும் சரியான நேரம். அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்:
இன்றைய தினம் சவால்களுடன் தொடங்கும். மூத்தவர்கள், அனுபவஸ்தர்களின் வழிகாட்டுதலின் படி நடக்கவும். ஈகோவால் நட்பில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். தசைகளில் மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படலாம்.
தனுசு:
தேவையில்லாத செலவுகளை குறைக்கவும். இன்றைய தினம் முழுவதும் பரபரப்பாக இயங்குவதால் உங்கள் தனிப்பட்ட வேலைகளை செய்ய முடியாது. பிரச்னைகளை தீர்ப்பதற்கு குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஆலோசனையை பெறவும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அதீதமான மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மகரம்:
இன்று நீங்கள் போடும் புதிய திட்டம், எதிர்காலத்தில் நன்மை பயக்கும். சக பணியாளர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் சில பிரச்னைகள் ஏற்படலாம். செரிமானம், பசி தொடர்பாக வயிற்றில் சிறிய பிரச்னை ஏற்படலாம்.
கும்பம்:
கவனக்குறைவால் முக்கியமான வேலையை முடிக்க முடியாமல் போகும். சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம். தொழில் விஷயத்தில் கவனம் தேவை. சிறிய பிரச்னைகளை பொருட்டாக கருத வேண்டாம். காய்ச்சல், தலைவலி ஏற்படலாம்.
மீனம்:
குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். சோம்பேறித்தனத்தால் வேலையில் தடை ஏற்படும். திருமண வாழ்வில் வாழ்க்கைத்துணையுடன் பரஸ்பர நம்பிக்கை வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். எனவே நம்பிக்கை வையுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.