MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: இந்த இறைச்சியை சாப்பிட்டால் 7 தலைமுறைக்கு சாபம் உண்டாகும்.! மொத்த பரம்பரையே அழிந்து போகுமாம்.!

Spiritual: இந்த இறைச்சியை சாப்பிட்டால் 7 தலைமுறைக்கு சாபம் உண்டாகும்.! மொத்த பரம்பரையே அழிந்து போகுமாம்.!

Eating Snake Meat and the Curse of Seven Generations: இந்து மத மரபுகளின் படி ஒரு விலங்கின் இறைச்சியை சாப்பிடுவது என்பது ஏழு தலைமுறைக்கு சாபத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : May 29 2026, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Eating Snake Meat and the Curse of Seven Generations
Image Credit : Gemini AI

Eating Snake Meat and the Curse of Seven Generations

இந்து மத மரபுகளின் படி மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உறவு என்பது பிரிக்க முடியாதவை. அதை அங்கீகரிக்கும் வகையில் சில உயிரினங்கள் தெய்வத்தின் வடிவங்களாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆன்மீகம் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களின்படி பாம்புகள் தெய்வீகத் தன்மை கொண்டவையாகவும், வழிபாட்டிற்குரியவையாகவும் கருதப்படுகின்றன. பாம்புகளுக்கு தீங்கு விளைவிப்பது அல்லது அவற்றின் இறைச்சியை உட்கொள்வது என்பது கடுமையான தோஷம் அல்லது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:Navpancham Yog: சுக்கிரன்-சனி கூட்டணியால் நவபஞ்சம யோகம்.! 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.! வெற்றி மேல் வெற்றி குவியும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ஏழு தலைமுறைகளுக்கு பாதிப்பு
Image Credit : Asianet News

ஏழு தலைமுறைகளுக்கு பாதிப்பு

சில காலமாக நவீன வாழ்க்கை முறை போக்குகள் மற்றும் அயல் நாட்டு கலாச்சாரங்கள் மீது சிலருக்கு கண்மூடித்தனமான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் அறியாமையின் காரணமாக அல்லது வேண்டுமென்றே மன்னிக்க முடியாத சில தவறுகளை இழைக்கின்றனர். இத்தகைய தவறுகளின் விளைவுகள் அவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த வம்சாவளியையும் பாதிக்கிறது. இப்படி தவறிழைப்பவர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் அடுத்த ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையும் பல ஆண்டுகளுக்கு இருளில் மூழ்கும் சூழல் ஏற்படுகின்றது. குறிப்பாக பாம்பின் இறைச்சியை உண்பவர்களுக்கு ஏழேழு தலைமுறைக்கும் கடுமையான தோஷம் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:Rahu Transit: ராகுவின் கொடூர பார்வை இந்த 4 ராசிகள் மேல் விழப்போகிறது.! கஷ்ட காலம் ஆரம்பம்.! மன அழுத்தம், பண நஷ்டம் வரலாம்.!

38
நாக தோஷத்தால் ஏற்படும் விளைவுகள்
Image Credit : Asianet News

நாக தோஷத்தால் ஏற்படும் விளைவுகள்

ஜோதிட நம்பிக்கைகளின் படி ஒரு பாம்பைக் கொல்வது அல்லது அதன் மாமிசத்தை சாப்பிடுவது ஒருவருக்கு நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்கிற கடுமையான சாபத்தை ஏற்படுத்துகிறது. இந்த சாபத்தின் தாக்கம் தவறு செய்த அந்த நபரோடு நின்று விடாமல் அவரை அடுத்த ஏழு தலைமுறைகளுக்கும் தொடரும் என்று நம்பப்படுகிறது. இந்த தோஷத்தின் காரணமாக குடும்பத்தில் தொடர்ந்து பல இன்னல்கள், புத்திர பாக்கியமின்மை, திருமணத் தடைகள், தீராத உடல் நலக் குறைபாடுகள், கடுமையான நிதி நெருக்கடிகள், மன அமைதியின்மை போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்ததியினர் அனுபவிக்கக் கூடும்.

இதையும் படியுங்கள்:Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!

48
வம்சமே அற்றுப்போகும்
Image Credit : Asianet News

வம்சமே அற்றுப்போகும்

பாம்பை கொல்வது அல்லது பாம்பு இறைச்சியை உண்பதன் காரணமாக ஏற்படும் தோஷத்தால் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அல்லது வம்சமே அழிந்து போகும் அளவிற்கு சாபம் உண்டாகும். நாகதோஷம் உள்ள குடும்பங்களில் அடுத்த தலைமுறை சேர்ந்த இளைஞர்களுக்கு திருமணம் என்பது எட்டாக் கனியாக மாறும். பல்வேறு முயற்சிகள் மற்றும் பரிகாரங்களுக்குப் பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் கூட குடும்பத்திற்கு சந்ததிகள் ஏதுமில்லாமல் வம்சமே அற்றுப்போகும் அபாயமும் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!

58
குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும்
Image Credit : Asianet News

குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும்

அனைத்தையும் மீறி குழந்தைகள் பிறந்தாலும் அக்குழந்தைகளுக்கு மனரீதியான குறைபாடுகள் தோன்றலாம். சாபத்திற்கு ஆளான குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளு பேரக் குழந்தைகள் ஆகியோருக்கு பிறப்பிலிருந்தே மன வளர்ச்சி குன்றுதல் அல்லது உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படலாம். மேலும் கண் பார்வையின்மை, நடக்கும் திறனின்மை போன்ற கடுமையான உடல் நலக் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்: Budhan Peyarchi 2026: ராசியை மாற்றும் புதன் பகவான்.! 4 ராசிகள் தொழிலில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போறீங்க.!

68
பரம்பரை நோய்கள் & வறுமை வாட்டும்
Image Credit : Asianet News

பரம்பரை நோய்கள் & வறுமை வாட்டும்

மேலும் நாகங்களின் சாபத்திற்கு ஆளானவர்களுக்கு நாள்பட்ட நோய்கள், பரம்பரை நோய்கள், தோல் நோய்கள், ரத்தம் மற்றும் நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய்களும் உண்டாகின்றன. எவ்வளவு நவீன மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டாலும் இந்நோய்களை முழுமையாக குணப்படுத்துவது இயலாத காரியமாக மாறும். 

நாகங்களின் சாபத்திற்கு ஆளானவர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியும் வறுமையும் சேர்ந்து கொள்ளும். அவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், உழைத்துச் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் இழப்பார்கள். திருப்பி செலுத்தவே முடியாத கடன் சூழலில் சிக்கிக் கொள்வார்கள். அடுத்த தலைமுறையினர், ஒரு நாளைக்கு, ஒரு வேலைக்கான உணவுக்கூட இன்றி மிகக் கடுமையான வறுமை நிலையை அடைவார்கள்.

78
பாம்புகளை துன்புறுத்துவது கொடிய பாவம்
Image Credit : Gemini AI

பாம்புகளை துன்புறுத்துவது கொடிய பாவம்

இந்து தர்மத்தில் பாம்புகள் ராகு மற்றும் கேது கிரகங்களின் வடிவமாகவும் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவின் வழிபாட்டுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகின்றன. பாம்புகளுக்கு தீங்கு செய்வது இயற்கையையும், ஆன்மீக விதிகளையும் மீறுவதாகும். பாம்பு இறைச்சியை உண்பது என்பது இந்து மதத்தில் இழிவான செயலாக கருதப்படுகிறது. மேலும் பாம்புகளை துன்புறுத்துவது, இரக்கமின்றி கொல்வது ஆகியவை மனிதன் இழைக்கக் கூடிய பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

88
உரிய வழிபாடுகளை செய்யுங்கள்
Image Credit : Pinterest

உரிய வழிபாடுகளை செய்யுங்கள்

தற்காலத்தில் மருத்துவ குணங்கள் என்ற போர்வையிலும், மேற்கத்திய உணவு மோகத்தினாலும் பாம்பு இறைச்சியை உட்கொள்கின்றனர். ஆனால் ஜோதிடர்களின் எச்சரிக்கை படி பாம்புகளைக் கொன்று அதன் மாமிசத்தை சாப்பிடுவது ஒருவருக்கு மிகக் கொடிய நாக தோஷத்தை தேடித் தரும். 

இந்த தோஷமானது பாவம் செய்த நபரோடு முடிந்து விடுவதில்லை. ஏழு தலைமுறைகளை தொடர்ந்து தாக்கும் வல்லமை கொண்டது. தெரிந்தோ, தெரியாமலோ செய்த இந்த தவறுகளுக்கு உரிய ஆன்மீக ஆலோசனை பெற்று வழிபாடுகளை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக எந்த ஒரு உயிரினத்தையும், குறிப்பாக பாம்புகளை துன்புறுத்தாமல் இருப்பது இத்தகைய சாபங்களில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழியாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : உங்களை கோடீஸ்வரராக மாற்றும் ரகசிய மந்திரங்களும், பரிகாரங்களும்!
Recommended image2
Astrology : கனவுகளும் பலன்களும்: எந்த நேரத்தில் காணும் கனவு நிஜமாகும்? ஜோதிட ரகசியங்கள்!
Recommended image3
Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved