MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்செந்தூர் போற பிளான் இருக்கா..? 31ம் தேதி வரை இலவசமா தரிசனம் செய்யலாம்! கோவில் நிர்வாகம் அதிரடி

திருச்செந்தூர் போற பிளான் இருக்கா..? 31ம் தேதி வரை இலவசமா தரிசனம் செய்யலாம்! கோவில் நிர்வாகம் அதிரடி

வைகாசி விசாக வசந்தத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : May 28 2026, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வைகாசி விசாகம் வசந்த திருவிழா
Image Credit : stockPhoto

வைகாசி விசாகம் - வசந்த திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செல்ல திட்டமா..? பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, மே 28 முதல் மே 31 வரை 4 நாட்களுக்கு ரூ.100 கட்டண சிறப்பு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்களில் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசன முறையிலேயே சாமி தரிசனம் செய்ய முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
10 நாள் வசந்த திருவிழா
Image Credit : Asianet News

10 நாள் வசந்த திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள் வசந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த மே 21ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். முக்கியமாக மே 30ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவுக்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
தைப்பூசம்.. திருச்செந்தூர் போறீங்களா? சென்னை டூ நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்!
Related image2
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
34
ரூ.100 கட்டண தரிசனம் ரத்து
Image Credit : Asianet News

ரூ.100 கட்டண தரிசனம் ரத்து

இதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அனைத்து பக்தர்களுக்கும் சமமான தரிசன வாய்ப்பு வழங்கவும் கோவில் நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக ரூ.100 செலுத்தி விரைவு தரிசனம் மேற்கொள்ளும் வசதி இந்த 4 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுத் தரிசன வரிசை மட்டுமே செயல்படும்.

44
கோவில் நடை திறப்பு
Image Credit : Google

கோவில் நடை திறப்பு

வைகாசி விசாக தினமான மே 30 அன்று அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்படும் என்றும், விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளல், தங்க ரத வீதி உலா மற்றும் “முனி குமாரர்களுக்கு சாப விமோசனம்” போன்ற முக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக கூடுதல் குடிநீர், பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் கூட்டநெரிசல் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்கள் மற்றும் விழா காரணமாக நீண்ட நேர காத்திருப்பு இருக்க வாய்ப்புள்ளதால், அதிகாலை நேரத்திலேயே கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
திமுக தோற்ற பிறகும் மக்கள் விரோத செயல்களை தான் செய்கிறது ! நிர்மல்குமார் பேட்டி அதிரடி பேட்டி
Recommended image2
Now Playing
CM Vijay : பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்.! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Recommended image3
TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்!
Related Stories
Recommended image1
தைப்பூசம்.. திருச்செந்தூர் போறீங்களா? சென்னை டூ நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்!
Recommended image2
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved