Donkey Story in Tamil: குற்றச்சாட்டுகளை வாய்ப்புகளாக மாற்ற உதவும் கழுதை கதை!
Donkey Story in Tamil : பல் குற்றச்சாட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக உதாரணமாக சொல்ல்ப்பட்ட கழுதையின் கதை தான் இது.

Donkey Story in Tamil: குற்றச்சாட்டுகளை வாய்ப்புகளாக மாற்ற உதவும் கழுதை கதை!
வாழ்க்கை புது புது அனுபவங்களை நமக்கு கற்றுத்தரும். சில சந்தர்ப்பங்களில் செய்யாத தவறுக்காக குற்றம் சாட்டப்பட்டிருப்போம். அதனால் சில சூழல்களில் தண்டனையும் அனுபவித்திருப்போம். இதனால் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் கடந்து வந்திருப்போம். ஆனால் நம் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் விழுந்தாலும், அந்தக் குற்றச்சாட்டுகளை ஆயுதமாக மாற்றிக் கொண்டு முன்னேறலாம். இதற்கு சான்றாக இந்த கழுதைக் கதை உள்ளது. அந்தக் கதை என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்…
ஊக்கமளிக்கும் கழுதை கதை
ஒரு கழுதை நடந்து சென்று கொண்டிருக்கும் போது, தண்ணீர் இல்லாத வறண்ட ஒரு ஆழமான கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறது. அந்த கிணற்றிலிருந்து வெளியில் வர எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் மணிக்கணக்கில் அமைதியாக கிணற்றிலேயே இருக்கிறது. அப்போது கிணற்றுக்குள் விழுந்த கழுதையை கண்ட விவசாயி அந்தக் கழுதையை வெளியே எடுக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. இதனால் செய்வதறியாது கழுதையை அங்கேயே விட்டு விடுகிறார்.
கழுதை எப்படியோ வயதானது. அதனால் எந்த பயனும் இல்லை என்று விவசாயி ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார். அதே போன்று தன் கிணறும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால், அந்தக் கிணற்றால் எந்தப் பயனும் இல்லை என்று ஒரு முடிவுக்கு வருகிறார். கழுதையைக் காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததாக நினைத்து, அந்தக் கிணற்றை மண்ணால் மூடி, கழுதையை அதில் புதைக்க முடிவு செய்கிறார். அங்கிருந்த சிலரின் உதவியுடன் கிணற்றில் மண்ணைப் போடத் தொடங்குகிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி
முதலில் கழுதை பயத்தில் கத்துகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் பயப்படுகிறது. ஆனால் சிறிது நேரத்தில் கழுதையின் சத்தம் நின்று விடுகிறது. கழுதை இறந்துவிட்டதாக நினைத்த விவசாயி கிணற்றில் பார்த்து அதிர்ச்சியடைகிறார். கழுதை தன் மீது விழும் மண்ணை சாமர்த்தியமாகக் குலுக்கி, அதன் மேல் நடந்து அழகாக கிணற்றின் மேலே வந்து விடுகிறது. இப்படி மண் போட்டுக் கொண்டே இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறிய கழுதை, கடைசியில் எல்லோர் முன்னிலையிலும் வெளியே வந்து மண்ணைக் களைந்து விட்டு சிரித்துக் கொண்டே சென்று விடுகிறது.
நீதி:
இது என்ன காகம் தண்ணீர் குடிக்கும் கதையை உள்டா பண்ண மாதிரி இருக்கு என்று பார்க்கிறீர்களா? அப்படி கூட வைத்துக் கொள்ளலாம். கதை வேண்டுமென்றால் அப்படி தோன்றலாம். ஆனால், இந்த கதையின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. நம் வாழ்க்கைக்குப் பொருத்திக் கொண்டால், பெரிய பெரிய ஊக்கமூட்டும் பேச்சாளர்கள் கூட தேவையில்லை. அந்தக் கழுதையின் மீது மண் போட்டது போல. வாழ்க்கையில் நம் மீதும் பலர் குற்றம் சாட்டுவார்கள்.
மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
மகிழ்ச்சியாக வாழ பணம் வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் 5 விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும், மகிழ்ச்சி உங்கள் வீட்டு முகவரியாக மாறும். அந்த 5 விஷயங்கள் என்னவென்றால்…
* மன்னிப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவையற்ற உணர்ச்சிகளிலிருந்து மனம் விடுபடும், அமைதியாக இருக்கும்.
* வாழ்க்கையை எளிமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். தேவையில்லாத சுமையை விட்டு விடுங்கள், தேவையானதை மட்டும் மனதில் நிரப்புங்கள்.
* ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதிக ஆசைகள் ஏதோ ஒரு சமயத்தில் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற உண்மையை நினைவில் கொள்ளுங்கள்.
* அமைதியின்மையை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். மனதிற்கு அமைதியைத் தரும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
* அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். எத்தனை பிரச்சினைகள் சூழ்ந்தாலும், தைரியமாகவும், பொறுமையாகவும் எதிர்கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
வெற்றிக்கான அடையாளம்
வாழ்க்கையில் வெற்றி பெறும் நம்மைக் கீழே இழுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல், அவற்றைத் துடைத்தெறிந்து, வாய்ப்புகளாக மாற்றிக் கொண்டு நம் இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே இந்தக் கதையின் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். வாழ்க்கையில் எவ்வளவு ஆழத்திற்குச் சென்றாலும், மேலே வரத் தேவையான சக்தி உங்களிடம் உள்ளது. தைரியமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வாழ்க்கையில் மேலே வரலாம். பயம் ஒன்றை மட்டும் தூக்கி எறிந்து விட்டு முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு வழி காட்டிக் கொண்டே இருக்கும்.