MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சிதறு தேங்காயின் பூரண பலன் கிடைக்க. இப்படி செய்தால் போதும்!

சிதறு தேங்காயின் பூரண பலன் கிடைக்க. இப்படி செய்தால் போதும்!

எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன் முதற்கண் தெய்வமான விநாயகரை வணங்கி தான் தொடங்குவோம். அப்பேற்பட்ட விநாயகர் முன்பு இப்படி சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகத் தொடங்கும் என்ற நம்பிக்கையிடன் இதனை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.  

2 Min read
Author : Dinesh TG
| Updated : Mar 06 2023, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

 

மனித வாழ்வில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் என்று எவரையும் கூற இயலாது. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும்.அதனை எப்படி எதிர்கொள்வது அல்லது சரி செய்வது ?

 ஒரு சிலருக்கு படிப்பில் பிரச்சனை, சிலருக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை ,வேலையில் உள்ளவர்களுக்கு அதிக வேலை பளுவால் பிரச்சனை ,ஊதிய பிரச்சனை அல்லது உயர் அதிகாரிகளால் பிரச்சனை, சிலருக்கு திருமண தடை, திருமணமானவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை, சிலர் உடல் பருமனால் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். மேலும் சிலருக்கு தீராத நோய்களால் அன்றாடம் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்

இப்படி ஒவ்வொரு மனிதனும் பல்வேறு விதங்களில் ஏதோ ஒரு பிரச்சனைகளுடன் தான் அவர்களுடைய வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் பலரும் தவித்து வருகிறார்கள். இந்த பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு முடிவு எப்போது கிடைக்கும் என்று பலரும் ஏங்கி இருப்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

தினம் தினம் கஷ்டத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டடிருப்போருக்கு எளிய பரிகாரம் மூலம் இவைகளை சரி செய்ய முடியும். இப்படி பிரச்சனைகளுடன் வாழ்பவர்கள் இந்த தேங்காய் பரிகாரத்தை செய்தால் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகள் அனைத்துமே தகர்த்து எறியப்படும் என்று சொல்லப்படுகிறது.ன் அப்படிப்பட்ட எளிய பரிகாரத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

எந்த ஒரு பூஜை என்றாலும் தேங்காய் இல்லாமல் அந்த பூஜை முழுமை பெறாது. இத்தேங்காயில் இருக்கும் மூன்று கண்கள் மும்மூர்த்திகளை குறிக்கும் எனவும் அது மட்டுமின்றி முக்கண் மூர்த்தியின் சிவபெருமானின் அம்சமாகவே இந்த தேங்காயை நாம் வைத்து வழிபடுகிறோம். இப்படி தேங்காயை வழிபடுவதற்கு பல்வேறு ஆன்மீக காரணங்கள் உள்ளன.

அப்படிப்பட்ட இந்த தேங்காய் வைத்து தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய போகிறோம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு செவ்வாய் கிழமை காலையில் ஒரு முழுத்தேங்காயை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை பூஜை அறையில் வைத்து விடலாம். செவ்வாய் கிழமை இரவு தூங்கும் போது இந்த தேங்காயை படுப்பதற்கு முன்னர் உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

33
Sankatahara Chaturthi

Sankatahara Chaturthi

 

"ஓம் கம் கணபதயே நமஹ"

ஓம் கம் கணபதயே நமஹ "  என்று குறைந்த பட்சம் 28 முறையும் அதிக பட்சமாக 108 முறை வரை சொல்லலாம். இந்த மந்திரத்தை சொல்லி உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிய பின்,அந்த தேங்காயை உங்கள் அருகிலேயே வைத்து உறங்க சொல்ல வேண்டும்.


அடுத்த நாள் அதாவது புதன் கிழமை காலை தூங்கி எழுந்த பின் , குளித்து முடித்த பிறகு, இந்த தேங்காயை வீட்டிற்கு அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். இந்த தேங்காய் பரிகாரத்தை இத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு கணக்கும் இல்லை. உங்களால் முடியும் போதெல்லாம் இதனை செய்து வாருங்கள். இதனை செய்ய செய்ய வாழ்வில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன் முதற்கண் தெய்வமான விநாயகரை வணங்கி தான் தொடங்குவோம். அப்பேற்பட்ட விநாயகர் முன்பு இப்படி சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகத் தொடங்கும் என்ற நம்பிக்கையிடன் இதனை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த எளிய பரிகாரத்தை செய்து வாழ்க்கையில் வேரடி பெற்று சுபீட்ச்சமாக வாழ்ந்து பலன் அடையுங்கள்

About the Author

DT
Dinesh TG
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: இனி பண கஷ்டமே வராது.! கோடீஸ்வரன் பட்டியலில் உங்க பேரு இருக்கும்.! சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 முக்கிய விதிகள்.!
Recommended image2
Navadurga Goddesses: நவராத்திரி 9 நாட்களும் வழிபட வேண்டிய தேவிகள் யார்? சைலபுத்ரி முதல் சித்திதாத்ரி வரை முழு விவரம்!
Recommended image3
Atrology: ஏழரையில் பொங்கு சனி & ராகு புத்தியில் புதன் திசை.! கோடிகளைக் குவிக்கப் போகும் 4 நட்சத்திரங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved