Spiritual: இந்த ஒரு பரிகாரம் போதும்.! இனி கடன் பிரச்சினை காணாமல் போகும்.!
ஆன்மிகப் பரிகாரமான பசு பூஜை, கடன் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும். தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பசுவை வணங்கி, உணவளிப்பதன் மூலம் செளபாக்கியம், மன அமைதி, மற்றும் கொடுத்த கடன் திரும்பக் கிடைத்தல் போன்ற நன்மைகளைப் பெறலாம்.

கடன்களை காணாமல் போக்கும்
கடன் பிரச்சனைகள் நீங்க வேண்டும் என நினைக்கும் போது ஆன்மிகப் பரிகாரங்களும் மன அமைதியையும் தரக்கூடிய வழிபாடுகளும் பலருக்கு துணையாக இருக்கும். அவற்றில் முக்கியமானது பசு பூஜை. பசு தெய்வமாகக் கருதப்படும் பரம்பரையில், தினமும் பசுவை பூஜிப்பது மிகச் சிறந்த பரிகாரம் என சொல்லப்படுகிறது. காலையிலோ மாலையிலோ பசுவை சுற்றி வருவது, சிறிதளவு உணவளிப்பது, கைமலர்ந்து வணங்குவது கடன்களை காணாமல் போக்கும்.
பசு பூஜை செய்தாலே வீட்டில் செளபாக்கியம் கூடும்
தினமும் முடியாவிட்டாலும், வெள்ளிக்கிழமை பசு பூஜை செய்தாலே வீட்டில் செளபாக்கியமும் அமைதியும் கூடுகின்றன. பொருளாதார முன்னேற்றம், குடும்ப நல்லிணக்கம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வசதியுள்ளவர்கள் 108 பசுக்களுடன் கோபூஜை செய்யலாம். இது தனிப்பட்ட நன்மை மட்டுமல்லாமல், உலக நலனுக்கும் வழிவகுக்கும் மிகப் பெரிய யாகமாக கருதப்படுகிறது.
பயம், கவலை ஆகியன குறையும்
கெட்ட கனவுகள் தொடர்ந்து வந்து மன அழுத்தம் அடைவோர்கள், காலையில் பசுவின் தொழுவத்துக்குச் சென்று வாழைப்பழம் கொடுத்து வணங்கினால் மன அமைதி அதிகரித்து, பயம், கவலை ஆகியன குறையும். பசுவின் சக்தி நம் மனதை அமைதிப்படுத்தும் ஆன்மிக அன்னைபோல் செயல்படுகிறது என நம்பப்படுகிறது.
கொடுத்த கடன் எளிதாக திரும்பக் கிடைக்கும்
கன்று ஈன்ற பசுக்களுக்கு புல், பிண்ணாக்கு, தானியம் போன்றவற்றை தொடர்ந்து அளித்து வருவது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. இத்தகைய பசுக்களை தினமும் காலை வணங்கிவந்தால், கொடுத்த கடன் எளிதாக திரும்பக் கிடைக்கும் என வேதங்கள் விளக்குகின்றன. கடன் தாமதம், தடங்கல், சங்கடம் ஆகியவை தணிந்து, வாழ்க்கையில் சரியான ஓட்டம் திரும்பும்.
நிதி பிரச்சினைகளை சமாளிக்கும் அற்றலை பெறலாம்
இந்த பரிகாரங்கள் நம்பிக்கையையும் மன பலத்தையும் அதிகரிக்கின்றன. ஆன்மிக வழிபாடுகள் மனதை நேர்மையாக வைத்திருக்க உதவுவதால், நிதி பிரச்சினைகளை சமாளிக்கும் அற்றலை பெறலாம்.

