- Home
- Spiritual
- Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Vastu Tips: இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் ஒரே ஒரு பிரியாணி இலையை வைத்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என தெரியுமா? வாங்க இந்த செய்தியில் பார்க்கலாம்.

தலையணைக்கு அடியில் பிரியாணி இலை வைங்க
சமையலறையில் நாம் பயன்படுத்தும் பிரியாணி இலை அல்லது புலாவ் இலை வெறும் சுவைக்காக மட்டும் கிடையாது. வாஸ்து மற்றும் ஜோதிட சாஸ்திரப்படி, பாசிட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு. சரியாக 5 பிரியாணி இலைகளை பயன்படுத்தினால் பணப் பிரச்சனை, கணவன்-மனைவி சண்டை, வீட்டில் இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி எல்லாவற்றையும் விரட்டலாம். அதற்கான மேஜிக்கல் டிப்ஸ் பார்க்கலாம்.
பிரியாணி இலையின் 5 வாஸ்து பரிகாரங்கள்
தலையணைக்கு அடியில் 1 இலை (நல்ல தூக்கம் & வழிகாட்டுதல்)
தினமும் ராத்திரி தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் 1 பிரியாணி இலையை வைத்துவிட்டு தூங்குங்கள். இது மனசில் இருக்கிற கவலையைப் போக்கி நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்ற மாதிரி கனவுகள் மூலமாக சில அறிகுறிகள் கிடைக்கும்.
கணவன்-மனைவி பிரச்சனைக்கு 2 இலைகள் (அன்யோன்யம் வளர)
கணவன்-மனைவி அல்லது காதலர்கள் நடுவுல அன்பு அதிகரிக்க 2 பிரியாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு இலையில் உங்கள் பெயரையும், இன்னொரு இலையில் உங்கள் பார்ட்னர் பெயரையும் எழுதுங்கள். உங்கள் பார்ட்னர் பெயர் எழுதிய இலையை உங்கள் தலையணைக்கு அடியிலும், உங்கள் பெயர் எழுதிய இலையை அவர்கள் தலையணைக்கு அடியிலும் வையுங்கள். இதனால் உறவில் அன்பும் நம்பிக்கையும் அதிகமாகும்.
லாக்கரில் 3 இலைகள் (பண வரவு மற்றும் பொருளாதார வளர்ச்சி)
பணக்கஷ்டம் தீர 3 பிரியாணி இலைகளை ஒண்ணா சேர்த்து பச்சை நிற நூலால கட்டுங்கள். இதை உங்கள் லாக்கர், பீரோ அல்லது கேஷ் பாக்ஸில் வையுங்கள். இது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகமாக்கி, வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
நினைத்தது நடக்க 1 இலை (ஆசைகள் நிறைவேற)
ரொம்ப நாளாக உங்களுக்கு இருக்கிற ஒரு முக்கியமான ஆசையை ஒரு பிரியாணி இலையில் பேனாவால் எழுதுங்கள். அப்புறம் அந்த இலையை எரித்துவிடுங்கள். இலை உடனே எரிஞ்சு சாம்பலானால், உங்கள் ஆசை சீக்கிரமே நிறைவேறப் போகுதுன்னு அர்த்தம். ஒருவேளை இலை சீக்கிரம் எரியலைன்னா, உங்கள் ஆசை நிறைவேற நீங்கள் இன்னும் கொஞ்சம் உழைக்கணும்னு அர்த்தம்.
வீட்டின் நெகட்டிவ் எனர்ஜியை விரட்ட (கண் திருஷ்டிக்கு)
வீட்டில் எப்பவும் சண்டை, நிம்மதியின்மை அல்லது கண் திருஷ்டி இருந்தால், 1 பிரியாணி இலையைக் கற்பூரம் மற்றும் கிராம்போடு சேர்த்துச் சாயங்கால நேரத்தில் தூபம் போடுங்கள். இது வீட்டின் மூலை முடுக்குல இருக்கிற நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி, பாசிட்டிவான அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.
பர்ஸில் வைத்தால் வீண் செலவு குறையும்
கையில் காசு நிக்கல, வந்த பணமெல்லாம் தண்ணியா செலவாகுதுன்னு ஃபீல் பண்றவங்க, ஒரு சுத்தமான பிரியாணி இலையில் சந்தனம் அல்லது சிவப்பு பேனாவால் ‘ஸ்ரீம்’ (லட்சுமி பீஜாட்சரம்) அப்படின்னு எழுதி பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் தேவையில்லாத செலவுகள் குறைஞ்சு பணம் மிச்சமாகும்.
இந்த பரிகாரங்களை செய்ய சரியான நாள் எது?
பண வரவு மற்றும் அன்பை அதிகரிக்கும் பரிகாரங்களை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்னைக்குச் செய்தால் ரொம்ப சீக்கிரம் பலன் கிடைக்கும். அதே மாதிரி கண் திருஷ்டி விலக அமாவாசை அல்லது செவ்வாய்க்கிழமை சாயங்காலம் தூபம் போடுவது ரொம்ப நல்லது.
மிக முக்கியமான விதி
வாஸ்து பரிகாரத்துக்குப் பயன்படுத்துற பிரியாணி இலைகள் எங்கேயும் உடைஞ்சிருக்கவோ அல்லது ஓட்டை விழுந்தோ இருக்கக் கூடாது. முழுமையான, எந்த குறையும் இல்லாத பச்சை அல்லது காய்ந்த சுத்தமான இலையை மட்டும்தான் பயன்படுத்தணும். உடைந்த இலைகள் நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வரும்.




