MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pillow Cleaning: உங்க தலையணை மஞ்சளாகிடுச்சா? 10 ரூபாயில் புதுசு மாதிரி ஆக்கலாம்!

Pillow Cleaning: உங்க தலையணை மஞ்சளாகிடுச்சா? 10 ரூபாயில் புதுசு மாதிரி ஆக்கலாம்!

பழைய தலையணைகள் நாளடைவில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதை எப்படி சுத்தம் செய்வது எனத் தெரியாமல் பலர் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். ஆனால், சில எளிய வீட்டுக்குறிப்புகளைப் பயன்படுத்தி, உங்கள் பழைய தலையணைகளை மீண்டும் புதிதுபோல மாற்றலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 24 2026, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தலையணை சுத்தம்.! சுகம் தரும் இக்கணம்
Image Credit : AI Image

தலையணை சுத்தம்.! சுகம் தரும் இக்கணம்

நாம் ஆரோக்கியமாக இருக்க, நம்மைச் சுற்றியுள்ள பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால், பலரும் தங்கள் வீட்டில் பெட்ஷீட், தலையணைகளை reguler-ஆக சுத்தம் செய்வார்கள். ஆனாலும், தலையணை உறையை கழற்றிப் பார்த்தால், உள்ளே இருக்கும் தலையணை மஞ்சள் அல்லது பிரவுன் நிறத்தில் அசிங்கமாக மாறியிருக்கும். இந்த தலையணைகளை தூக்கி எறியாமல், வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எப்படிப் புதிதாக மாற்றுவது என்று பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
தலையணைகள் ஏன் மஞ்சள் நிறமாக மாறுகின்றன?
Image Credit : Asianet News

தலையணைகள் ஏன் மஞ்சள் நிறமாக மாறுகின்றன?

நாம் தூங்கும்போது, உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, சருமம் மற்றும் முடியில் உள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை தலையணை உறைக்குள் ஊடுருவி பஞ்சில் சேர்ந்துவிடும். இதுமட்டுமல்லாமல், இரவில் முகத்தில் தடவும் கிரீம்கள், லோஷன்கள், ஈரமான முடி மற்றும் எச்சில் போன்றவற்றால் நாளடைவில் மஞ்சள் கறைகள் உருவாகின்றன. இந்த ஈரப்பதம் காரணமாக, தலையணையில் தூசி மற்றும் பாக்டீரியா சேர்ந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும்.

Related Articles

Related image1
shower before bed: நைட் தூங்குவதற்கு முன்பு குளித்தால் இவ்வளவு நடக்குமா?
Related image2
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
33
இந்த மஞ்சள் கறைகளை நீக்க 2 எளிய வழிகள்
Image Credit : AI

இந்த மஞ்சள் கறைகளை நீக்க 2 எளிய வழிகள்

1. பேக்கிங் சோடா + வினிகர் டிப்ஸ்:

பேக்கிங் சோடாவையும் தண்ணீரையும் சம அளவில் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மஞ்சள் கறை உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பிறகு, அதன் மீது கொஞ்சம் வெள்ளை வினிகரைத் தெளித்து, வாஷிங் மெஷினில் துவைத்தால் கறைகள் மாயமாகிவிடும். (குறிப்பு: உங்களுடையது மெமரி ஃபோம் அல்லது லேட்டக்ஸ் தலையணையாக இருந்தால், துவைக்காமல் ஈரத்துணியால் மெதுவாகத் துடைத்து வெயிலில் உலர்த்த வேண்டும்).

2. எலுமிச்சை சாறு + வெயில்:

ஒரு பங்கு எலுமிச்சை சாற்றுடன் இரண்டு பங்கு வெதுவெதுப்பான நீர் (அல்லது வெள்ளை வினிகர்) கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்புங்கள். இந்த கலவையை தலையணை மீது ஸ்ப்ரே செய்து, சில மணி நேரம் நல்ல வெயிலில் காய வையுங்கள். சூரிய ஒளியில் உள்ள UV கதிர்கள் இயற்கையான ப்ளீச் போலச் செயல்பட்டு, கறைகளையும் துர்நாற்றத்தையும் நீக்கிவிடும். தலையணை மஞ்சளாகாமல் தடுக்க: தலையணை உறை போடுவதற்கு முன், 'வாட்டர்ப்ரூஃப் பில்லோ புரொட்டக்டர்' பயன்படுத்தினால் வியர்வை உள்ளே செல்லாது. தலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறையும், தலையணைகளை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும். சுகாதாரத்திற்காக, ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் ஒருமுறை பழைய தலையணைகளை மாற்றுவது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
சுத்தம் குறிப்புகள்
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Stove: இனி உங்க கேஸ் ஸ்டவ் ரிப்பேரே ஆகாது.! சீக்டெட் டிப்ஸ்.!
Recommended image2
Funeral Rituals : இறுதிச் சடங்குல மண்பானையை ஏன் உடைக்கிறாங்க? இதுக்குப் பின்னாடி இவ்வளவு அர்த்தமா?
Recommended image3
Curry Leaves: கறிவேப்பிலை செடி வீட்டிலேயே வளர்க்கலாம் ஈசியா.!
Related Stories
Recommended image1
shower before bed: நைட் தூங்குவதற்கு முன்பு குளித்தால் இவ்வளவு நடக்குமா?
Recommended image2
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved