MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சனிக்கிழமை இந்த பொருளை வாங்கினால் கூடவே துரதிர்ஷ்டம் வீட்டுக்கு வருமாம்.. ஏன் அப்படி ஆகுது தெரியுமா?

சனிக்கிழமை இந்த பொருளை வாங்கினால் கூடவே துரதிர்ஷ்டம் வீட்டுக்கு வருமாம்.. ஏன் அப்படி ஆகுது தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனிக்கிழமை வாரத்தின் மிகவும் மோசமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சில விஷயங்களை செய்வது துரதிர்ஷ்டம் என்றும் கருதுகிறார்கள். சனியன்று நீங்கள் வாங்கக்கூடாத சில பொருட்களை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
Published : Jan 28 2023, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மண்ணில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் ஒருவித நம்பிக்கை இருக்கும். பல நேரங்களில் அவர்களின் செயல்கள், அவர்கள் கொண்ட நம்பிக்கையின் நேரடி பிரதிநிதித்துவமாகும். சிலருக்கு மதரீதியான நம்பிக்கைகள் வேடிக்கையாகவும், நியாயமற்றதாகவும் தோன்றுகின்றன. மற்றவர்களுக்கு அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின்படி, சனிக்கிழமை வாரத்தின் மிகவும் மோசமான நாளாகக் கருதப்படுகிறது. சனியின் ஆட்சியில், இந்த நாளில் மக்கள் சில விஷயங்களைத் தவிர்க்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதை துரதிர்ஷ்டம் என நினைக்கிறார்கள். 

 

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

சிலர் சனி பகவான் மிகவும் சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவர் என்றும் கருதுகின்றனர். அவரது கோபம் ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் திறன் கொண்டது என்பது ஐதீகம். அவரின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக இந்த நாளில் மக்கள் சில வேலைகளைச் செய்வதையோ அல்லது சில பொருட்களை வாங்குவதையோ மக்கள் தவிர்க்கிறார்கள். எனவே சனிக்கிழமை வாங்கக்கூடாத பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள். 

37

இரும்பு 

சனிக்கிழமையன்று இரும்பை வாங்குவது அசுபமாக கருதப்படுகிறது. இந்த நாளில் இரும்பை வீட்டிற்கு கொண்டு வரக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் குடும்ப உறவுகளை பாதிக்கலாம். ஆனாலும் நீங்கள் சனிக்கிழமையன்று இரும்பு பொருட்களை தானம் செய்யலாம், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர உதவுகிறது. வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் சிரமங்களையும் தடைகளையும் நீக்குகிறது.

47

உப்பு 

சனிக்கிழமை உப்பு வாங்கினால் நஷ்டமும், கடனும் அதிகமாகும். ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைகள் சனிக்கிழமைகளில் வீட்டில் உப்பு கொண்டு வரக்கூடாது. இது உங்கள் வியாபாரத்தை குறைக்கலாம். கடன்களை அதிகரிக்கலாம். பங்குச் சந்தையில் நஷ்டத்தையும் சந்திக்கலாம். 

57

கடுகு எண்ணெய் 

கடுகு எண்ணெய் அல்லது தாவர எண்ணெயை சனியன்று வீட்டிற்கு கொண்டு வருவதைத் தவிர்க்கவும். அதனால் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. சனிக்கிழமையில் இந்த எண்ணெய்களை வாங்குவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: வாழ்வில் ஒருமுறையாவது இப்படி ஒரு தானத்தை செய்ய வேண்டும்... ஏன் தெரியுமா?

67
Planet error to leave shoes!

Planet error to leave shoes!

கருப்பு ஷூ 

கருப்பு ஷூவை சனிக்கிழமையன்று வாங்கினால், அதை அணிந்து கொள்பவருக்கு தோல்விதான் ஏற்படும். இந்த நாளில் கருப்பு காலணிகளை வாங்கவோ, அணியவோக் கூடாது. உங்களுக்கு சனி தோஷம் ஏற்படும். 

இதையும் படிங்க: எக்காரணம் கொண்டும் வீட்டின் இந்த திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.. மீறி வைத்தால் என்னாகும் தெரியுமா?

77

கத்தரிக்கோல் 

சனிக்கிழமை வாங்கக்கூடாத பொருட்களில் கத்திரிக்கோலும் ஒன்று. சனிக்கிழமை கத்தரிக்கோல் வாங்குவது, கொடுப்பது நல்லதல்ல. சனிக்கிழமையன்று, கத்தரிக்கோலைத் தொடுவது கூட நன்றியற்றதாக நம்பப்படுகிறது. இது உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சண்டையிடுவதற்கும், உறவுகளை சிதைப்பதற்கும் கூட வழிவகுக்கும். கவனமாக இருங்கள். 

அன்பான வாசகர்களே, இந்த கருத்துக்கள் அனைத்தும் புராணங்கள் அடிப்படையிலும், ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலும் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

About the Author

MP
maria pani
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
Rasi palan May 2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved