எக்காரணம் கொண்டும் வீட்டின் இந்த திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.. மீறி வைத்தால் என்னாகும் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைப்பது நல்லது, எந்த திசையில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
வாஸ்துப் படி, நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுமே வீட்டில் தாக்கம் உண்டாக்கும். அவை வைக்கப்படும் திசை பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும். ஒருவரது வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் வாஸ்து சொல்லும் திசையில் இல்லாமல், தவறான திசையில் வைக்கப்பட்டால், வீட்டிற்கு கெட்டது நடக்கும். செருப்பு, கடிகாரம் என ஒவ்வொரு பொருள்களுக்கும் ஒரு திசையை வாஸ்து சொல்கிறது. அதில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டிய திசையை குறித்து இங்கு காணலாம். வாஸ்துவை பின்பற்றாமல் குப்பை தொட்டியை வைத்தால், வீட்டில் இருப்பவர்களுக்கு எதிர்மறை தாக்கம் உண்டாகும்.
வடக்கு, வடகிழக்கு திசையில் வைக்கலாமா?
நமது வீட்டின் வடக்கு திசையில் நேர்மறை ஆற்றல் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த திசையை குபேர திசை எனவும் சொல்கிறார்கள். ஆனாலும், வடகிழக்கு திசையில் சிவன் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக வடக்கு, வடகிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டாம். மீறி வைத்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவி நிதி நெருக்கடியை ஏற்படுமாம். உடல்ரீதியான பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
கிழக்கு, தென்கிழக்கு திசை எப்படி?
மறந்தும் கிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது. அப்படி வைப்பதால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். தனிமையை உணர்வு தலைவிரித்தாடும். கிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். தென்கிழக்கு திசை நெருப்புடன் தொடர்புடையது. மங்களகரமானதும் கூட. இங்கு குப்பை தொட்டியை வைத்தால், வீட்டு வருமானம் குறைந்து செலவுகள் அதிகமாகும்.
தெற்கு, தென்மேற்கு திசை நல்லதா?
தெற்கு திசையானது எமனுக்கு சாதகமான திசை. இங்கு குப்பை தொட்டியை மறந்தும் வைக்க வேண்டாம். மீறி வைத்தால் வீட்டில் வறுமையை அதிகமாகும். வீட்டில் உள்ளோரின் மனதில் எதிர்மறை எண்ணங்களும் பரவலாக காணப்படும். சுய தொழிலில் சிக்கல் வரும்.
எங்கே தான் வைக்கணும்?
தெற்மேற்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் குப்பைத்தொட்டியை வைக்க வாஸ்து பரிந்துரைக்கிறது. குடும்பத்தில் பிரச்சனைகள் இன்றி நிதி நிலை மேம்பட நினைத்தால் இந்த இரண்டு திசைகளில் குப்பை தொட்டியை வைத்தால் போதும்.
இதையும் படிங்க: வாழ்வில் ஒருமுறையாவது இப்படி ஒரு தானத்தை செய்ய வேண்டும்... ஏன் தெரியுமா?
கவனம்...
- குப்பை தொட்டியை மூடி வையுங்கள். தினமும் குப்பை தொட்டிகளை தினமும் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம்.
- வீட்டின் நுழைவாயிலில் குப்பையை சேமித்து வைக்கக்கூடாது. அப்படி செய்தால் வீட்டினுள் நுழையும் நேர்மறை ஆற்றல் ஓட்டமானது எதிர்மறையாகும் என நம்பப்படுகிறது.
- பூஜை அறைக்கு அருகே வைக்கக் கூடாது.
- தூங்கும் அறையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டாம். உடைந்த. குப்பை தொட்டியை பயன்படுத்தக் கூடாது.
அன்பான வாசகர்களே, இந்த கருத்துக்கள் அனைத்தும் புராணங்கள் அடிப்படையிலும், ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலும் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: தங்க நகைகளை இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் கட்டாயம் கெட்டது நடக்கும்... தங்கத்தை தொலைத்தால்..?