- Home
- Spiritual
- ஒரே இடத்தில் மூன்று கோலங்களில் முருகன்! யாரும் அறியாத ஆண்டார்குப்பம் முருகப் பெருமானின் ரகசியங்கள்!
ஒரே இடத்தில் மூன்று கோலங்களில் முருகன்! யாரும் அறியாத ஆண்டார்குப்பம் முருகப் பெருமானின் ரகசியங்கள்!
Andarkuppam Sri Balasubramanya Swamy Temple History in Tamil : முருகப்பெருமான் மூன்று வெவ்வேறு நிலைகளில் காட்சி தரும் ஒரு அதிசய திருக்கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்த ரகசியத் தலத்தின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள் இதோ

Andarkuppam Balasubramanya Swamy Temple
மூன்று வெவ்வேறு கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த கோயில் எங்கே இருக்கிறது, மூன்று கோலங்கள் என்னென்ன கோயிலின் சிறப்பு என்ன வேண்டுதலின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்று ஒவ்வொன்றையும் தெளிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொன்னேரி அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில். இங்கு முருகன் அதிகார தோரணையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கதை: Famous Murugan Temples near Chennai
பிரம்மாவுக்கே பொருள் தெரியவில்லை: அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மன் பொருள் விளக்கம் தெரியாமல் முருகனிடம் மாட்டிக்கொண்டார். பிரம்மதேவன் ஈசனை வணங்க திருக்கலாகிய மலைக்குச் சென்றார். அங்கே சிவன் பார்வதி தேவியை தரிசித்து விட்டு பிரம்மன் எதிரே வந்த முருகனை மதிக்காமல் சென்றார். பிரம்மனை அழைத்த முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் விளக்கம் கேட்டார்.
பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை தன் வேல்களால் சிறை பிடித்தார் முருகன். பிரம்மனிடம் முருகப்பெருமான் விளக்கம் கேட்கும் போது தம் இரண்டு கைகளையும் இடுப்பின் மீது வைத்தவாறு அதிகாரத தோரணையோடு கேள்வி கேட்பது போன்று முருகன் ஆண்டார்குப்பம் கோயிலில் காட்சியளிக்கின்றார். அதிகமா கேள்வி கேட்பதனால் இவருக்கு அதிகார முருகன் என்றும் பேருண்டு. மேலும் அதிகாரம் முருகனுக்கு யானைகள் வாகனம் கொண்டது போல் காட்சி அளிக்கப்படுகிறது.
Andarkuppam Balasubramanya Swamy Temple History
மூன்று கோலங்கள்: முருகப்பெருமான் இங்கு அதிகாரத் தோரணையில் அருள்பாலிக்கிறார். அதிகார முருகன் ஆயுதங்கள் இன்றி, அருள் பாலிப்பார்; காலையில் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞர் வடிவிலும், மாலையில் முதியவர் வடிவிலும் தோற்றமளிப்பார் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த தன்மையை கொண்டவர் இந்த அதிகார் முருகன். குழந்தை வடிவில் உள்ள முருகனை பார்ப்பது மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது.
கோயில் அமைப்புகள்:
விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானை, நடராஜர். வெளிப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மன், துர்கை, சம்வர்த்த முனிவர் சன்னதிகள் அதிகார முருகன் கோயிலில் உள்ளன. மூலவராக ஸ்ரீ பால சுப்பிரமணியசுவாமி அருள் பாலிக்கிறார்.
Andarkuppam Murugan Temple
கோயிலின் தீர்த்தம்: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தீர்த்ததின் பெயர் வேலாயுத தீர்த்தம் முருகன் தனது வேலால் பூமியைக் குத்தி உருவாக்கிய தீர்த்தம் என்று கூறப்படுகிறது. இந்த வேலாயுத தீர்த்தத்தில் நீராடினால் நம் மீது இருந்த பாவம் கஷ்டம், முன்னோர்கள் செய்த கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து நோய் நொடிகளும் தீர்ந்து, மன நிம்மதியும், அறிவும், செல்வம் பெற்று விளங்கும் என்று கூறப்படுகிறது.
Murugan in 3 different forms
சிறப்பு விழாக்கள்: முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் மிகச் சிறப்பாக விழாக்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாகம் தைப்பூசம் கார்த்திகை தீபம் போன்ற விழாக்களில் மிகச் சிறப்பாக இருக்கும். குறிப்பாக சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.