உங்க வீட்டுல பணமழை பொழியணுமா? இந்த ஒரு அதிசய மரத்தை மட்டும் நட்டு வெச்சு பாருங்க!
பணக்கஷ்டம் இல்லாத நிம்மதியான வாழ்க்கைக்கு வாஸ்துபடி என்ன மரம் நட வேண்டும்? என்னென்ன பூஜை என்பதை இங்கு காணலாம்.
பணக்கஷ்டம் இல்லாத வாழ்க்கைக்கு கடின உழைப்பும், புத்திசாலித்தனமும் முக்கியம். அதைப் போலவே வீட்டில் வாஸ்துவும் சரியாக பொருந்தியிருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றினால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். இதற்காக வீட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.
சாஸ்திரத்தின்படி, மகாவிஷ்ணு நெல்லிக்காய் மரத்தில் தான் வீற்றிருக்கிறார். வீட்டில் நெல்லிக்காய் மரத்தை நடவு செய்து தினமும் தண்ணீர் விடுவது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வைக்கும் முன் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை குறித்து தெரிந்து கொள்வது முக்கியம்.
நெல்லி மரம் வைப்பதன் நன்மைகள்
மகாவிஷ்ணுவை வழிபடும்போது நெல்லிக்காய் மரத்தையும் வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் தங்கும். அதனுடன் எல்லாம் இன்னல்களையும் சமாளிக்க வழிகள் பிறக்கும் என்பது ஐதீகம். உங்களுடைய வீட்டில் ஒரு நெல்லிக்காய் மரத்தை வைத்து வளர்ப்பது உங்களுடைய தலையெழுத்தையே மாற்றிவிடும்.
இதையும் படிங்க: தங்க நகை வாங்கும் யோகம் வரணுமா? இந்த இடத்தில் கண்ணாடி வைங்க! பணம் உங்களை தேடி வரும் என்பது நிச்சயம்!
வாஸ்து சாஸ்திரத்தின்படி, நெல்லிக்காய் மரம் புனிதமானது. மங்களகரமான இந்த மரத்தை வீட்டில் நடுவதால் எதிர்மறையாற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பரவும். வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலை கொண்டிருந்தால் செல்வமும் செழிப்பும் அதிகமாகும். நெல்லிக்காய் மரத்தை நடும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வைக்க வேண்டிய திசை
இந்த நெல்லி மரத்தை வியாழன், வெள்ளி, அட்சய நவமி, அமிர்த ஏகாதசி ஆகிய நாள்களில் நடுவது நல்லது. உங்களுடைய வீட்டில் நெல்லிக்காய் மரத்தை வைப்பதற்கு வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு ஆகிய திசைகள் ஏற்றவை. சரியான திசையில் நெல்லி மரத்தை வைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும்.
இதையும் படிங்க: வாஸ்துபடி சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யக் கூடாத காரியங்கள்!!