இன்று செவ்வாய்க்கிழமை! செய்ய கூடியதும் ,செய்யக் கூடாததும்.. பார்க்கலாம் வாங்க!
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய செவ்வாய் கிழமையான இன்று என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
செவ்வாய் கிழமையானது செய்வாய் பகவானுக்கு உரிய சிறப்பான நாளாகும்.மேலும் மங்களகாரகன் என்று போற்றப்படக்கூடியது செவ்வாய் கிரகம். முருகப் பெருமானுக்கும், அம்மனுக்கும் மிகச் சிறந்த நாள் என்றால் அது செவ்வாய்க் கிழமை தான்.
பொதுவாக செவ்வாய்க்கிழமை அன்று எந்த நல்ல காரியங்களை செய்வதற்கோ அல்லது ஆரம்பிப்பதற்கோ உகந்தநாள் இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால் தெய்வத்திற்கு மிகவும் உகந்த இந்நாளில் செய்யப்படுகின்ற அனைத்து நல்ல காரியங்களும் ஜெயமளிக்கும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்திற்கு மங்களன், பூமிகாரகன் என்ற சிறப்பு பெயர்கள் உள்ளன.அதன் பெயரிலேயே மங்களம் உள்ளதால் அந்நாளில் ஆரம்பிக்கும் செயல்கள் சுபமாக நிறைவேறும்.
மேலும் ஒருவருக்கு சொந்த வீடு அமையும் பாக்கியம் வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருத்தல் அவசியம் ஆகிறது.
முருகப்பெருமானையும், செவ்வாயையும் வழிபாடு செய்து செவ்வாயில் மங்களப் பொருட்கள் வாங்கினால் பல மடங்கு பெருகும் .மேலும் அனைத்துச் சிறப்புகளும் நம் வீட்டைத் தேடி வரும் என்று நம்பப்படுகிறது.
இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய செவ்வாய் கிழமையான இன்று என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
செவ்வாய் கிழமை அன்று என்னென்ன செய்யலாம்:
மங்கள விஷயங்கள்:
ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிரகத்தை மங்களகாரகன் என்று போற்றுவார்கள். ஆகையால் செவ்வாய் கிழமையன்று மங்கள காரியங்களை ஆற்றுவதற்கு மிகச் சிறந்த நாளாக உள்ளது. கேரளாவில் இன்றும் செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்கிறார்கள்.
மௌன விரதம்:
செவ்வாய் கிழமைகளில் எவர் ஒருவர் மௌன விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு செவ்வாய் பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
புதிய வீடு:
புதிய வீடு கட்ட நினைப்பவர்கள் அதற்கான திட்டத்தை இந்த செவ்வாய் கிழமைகளில் மேற்கொள்ளலாம். ஜோதிடத்தில் ஒருவர் வீடு கட்ட வேண்டுமெனில் அவருக்கு செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருப்பின் மட்டுமே அது சாத்தியம் என்று கூறுவார்கள்.
கடன் திருப்பி செலுத்தல்:
கடன் வாங்கியவர்கள் அந்த கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை அன்று தந்தால் விரைவில் கடன் தீரும் என்பார்கள். மேலும் கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகாது என்று கூறுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை அன்று செய்யக் கூடாதவை:
அசைவ உணவை தவிர்த்தல்:
நமது உடம்பில் இருக்கும் சிவப்பு நிற இரத்தமே செவ்வாய் பகவானின் நிறமென்பதால் இரத்த சம்பந்தமான எந்த விஷயங்களையும் செய்யக் கூடாது.
ஆகையால் செவ்வாய் கிழமைகளில் அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். இல்லயெனில் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடி திருத்தம் செய்யக் கூடாது:
நமது உடம்பில் இருக்கும் முடிகளை திருத்தம் செய்தல், நகம் வெட்டுதல், ஷேவிங் செய்தல் போன்றவையை அறவே தவிர்த்திட வேண்டும்.
செலவுகளை செய்யக்கூடாது:
செல்வத்தின் அதிபதியான லட்சுமி அம்பாளுக்கு விசேஷமான நாளாக செவ்வாய் கிழமை உள்ளதால் இன்றைய தினத்தில் செலவு செய்யக்கூடாது அதாவது இந்நாளில் லட்சுமி கடாட்சம் நம்மை தேடி வருவதால் வீண் மற்றும் தேவையற்ற செலவுகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் இந்த நாளில் வீட்டில் உள்ள பொருட்களை வெளியில் தூக்கி எறியக் கூடாது இப்படி செய்வதால் லட்சுமி வீட்டில் இருந்து வெளியேறிவிடும் என்றும் நம்பப்படுகிறது.
செவ்வாய்க் கிழமையான இன்று முருகப் பெருமானையும்,அம்மனையும் வழிபட்டு உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்.