- Home
- Spiritual
- Akshaya Tritiya 2025 : அட்சய திருதியை அன்று எந்த நேரத்துல தங்கம் வாங்குனா பல மடங்கு பெருகும்!
Akshaya Tritiya 2025 : அட்சய திருதியை அன்று எந்த நேரத்துல தங்கம் வாங்குனா பல மடங்கு பெருகும்!
அட்சய திருதியை எப்போது? எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பல மடங்கு பெருங்கும் என்று இங்கு பார்க்கலாம்.

Akshaya Tritiya 2025 Date Significance and Best Time To Purchase Gold
அட்சய திருதியை இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திருதியை தினத்தை தான் அட்சய திருத்தியை தினமாக கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை என்றால், அல்ல அல்ல குறையாமல் பெருகுவது என்று பொருள். இந்நாளில் தானங்கள் செய்தாலோ, மங்கல பொருட்கள் வாங்கினாலோ அதற்குரிய பலன்கள் பல மடங்கு பெருகும் என்று நம்பப்படுகிறது. இதனால்தான் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட மணி நேரத்தில் தங்கம் வாங்கி, லட்சுமி தேவி முன் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.
அட்சய திருதியை 2025 எப்போது?
இந்த 2025 ஆம் ஆண்டில் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை அன்றுதான் ரோகிணி நட்சத்திரம் வருகிறது. இதனால் இந்த ஆண்டு அட்சய திருப்தியை ரொம்பவே சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. திரிதியை திதியானது, ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 8.49 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 6.41 மணிக்கு முடிவடைகிறது. பூஜை செய்வதற்கான நல்ல நேரம் ஏப்ரல் 30ஆம் தேதி, காலை 5.41 மணி முதல் 11.55 மணி வரையாகும்.
இதையும் படிங்க: அட்சய திருதியை 2025 நாளில் கூடும் 10 சுப யோகங்கள்; செல்வ, செழிப்பு இரட்டிப்பாகுமா?
தங்கம் வாங்க உகந்த நேரம்:
ஏப்ரல் 30ஆம் காலை 5.41 மணி முதல் மதியம் 2.12 மணி வரை தங்கம் வாங்க நல்ல நேரமாக கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும், செல்வம் பெருகும் மற்றும் அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லப்படுகின்றது. மேலும் இந்த நேரத்தில் லட்சுமிதேவி மற்றும் குபேரருக்கு வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் தேவியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, இந்நாளில் செய்யும் யாகம், வழிபாடு, தர்மம், தானம் போன்றவற்றிற்குரிய பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் கோடீஸ்வரனாக போகும் 7 ராசி; உங்க ராசி இருக்கா பாருங்க?
அக்ஷய திருத்திய நாளில் என்னென்ன செய்யலாம்?
1. லட்சுமி மற்றும் குபேரருக்கு பூஜை செய்யலாம்.
2. ஏழை, எளிய மக்களுக்கு தானம் செய்யலாம்.
3. புதிய வீடு அல்லது மனை வாங்கலாம்.
4. புதிய தொழில் தொடங்க நல்ல நாள்.
5. வீட்டில் செல்வம் பெருக தங்கம் வாங்கலாம்.
அட்சய திருதியை தங்கமாக மட்டுமல்ல பல நல்ல செயல்களையும் செய்து அதற்குரிய பலனை பெறும் நாள். எனவே அந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.

