- Home
- Spiritual
- Aadi Special: ஆடி செய்வாய் வழிபாடு! உடனே கிடைக்கும் திருமண வரம்! கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காணாமல் போகும்!
Aadi Special: ஆடி செய்வாய் வழிபாடு! உடனே கிடைக்கும் திருமண வரம்! கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காணாமல் போகும்!
ஆடி செவ்வாய் விரதம், பெண்களின் ஆன்மிக வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணத் தடைகள் நீங்கவும், நல்ல மணமகன் அமையவும், மாங்கல்ய பலம் பெறவும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி செவ்வாயில் முருக வழிபாடு செய்வதும் சிறப்பு.

ஆடி மாதம் எனும் ஆன்மிக மாதம்
ஆடி மாதம் என்பது ஆன்மிக மாதம் என்றால் அது மிகையல்ல.அத்தகைய ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமை இருக்கும் விரதம் மிகப்பெரிய நன்மைகளும் தரும் என்கின்றனர் ஆன்மிக மகான்கள்.ஆடிச்செவ்வாய் என்பது தமிழ்ப் பெண்களின் ஆன்மிக வாழ்வின் அடையாளமாக விளங்கும் ஒரு பக்தி வழிபாடு. வருடம் முழுவதும் வரும் செவ்வாய்கிழமைகள் போல் இல்லாமல், ஆடி மாதத்தில் மட்டும் வரும் செவ்வாய்கள் தெய்வீக ஆற்றல் அதிகமாகக் காணப்படும் நாட்களாகக் கருதப்படுகின்றன. இந்த நாளில் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் "ஔவையார் நோன்பு" என்று அழைக்கப்படுகிறது.பல்வேறு சிறப்பு உடைய ஆடி செய்வாய் கிழமைகளில் விரதம் இருந்தால் அம்மன் அருளும், முருகன் அருளும் கிடைக்கும்.
ஔவையார் நோன்பு எனும் சிறப்பு நோன்பு
ஔவையார் நோன்பு என்பது, திருமண வயதில் இருந்தும் திருமணம் நடக்காமல் தங்கியிருந்த அங்கவை மற்றும் சங்கவை என்ற சகோதரிகளுக்காக ஔவையார் மேற்கொண்ட வழிபாடாக துவங்கி, தமிழ்ப் பெண்கள் அனைவரும் அனுசரிக்கும் ஒரு மகா விரதமாக வளர்ந்தது. திருமணத் தடைகள் நீங்கவும், நல்ல மணமகன் கிடைக்கவும், மாங்கல்யம் உறுதியாகவும் இதனை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது.இது வெறும் ஆன்மிகம் மட்டுமல்ல. சமூக நீதியின் அடையாளமாகவும் இது விளங்குகிறது. ஏனெனில், பெண்களின் வாழ்வில் முக்கியப் பகுதியாக கருதப்படும் திருமண வாழ்வை நம்பிக்கையோடும், அன்போடும் அமைதியோடும் நடத்துவதற்கான ஒரு வழிகாட்டியாகவும் இது செயல்படுகிறது.
விரதம் மேற்கொள்ளும் முறைகள்
- அதிகாலையில் குளித்து தூய உடையில் நேர்த்தியாக இருந்தல்.
- நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் இட்டல்.
- மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, வீட்டின் பூஜை அறையில் அம்மன் படத்தின் முன் வீற்றிருத்தல்.
- சந்தனம், குங்குமம் பூசிய எலுமிச்சை கனி வைத்து, சக்தி கவசம், துர்கா சகஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்தல்.
- பாயசம், மாவு கொழுக்கட்டை, சிற்றுண்டிகள் போன்ற நைவேத்தியம் படைத்து வழிபடுதல்.
- விரதம் கொண்ட பெண்கள், அதே நாளில் பிறருக்கும் சிறு காணிக்கை அல்லது பச்சை புடவை, குங்குமம் கொடுத்து அன்பு செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
முருக வழிபாட்டின் சிறப்பு
திருமணத்தில் தாமதம், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு, குடும்ப ஒற்றுமை குறைபாடு போன்ற பிரச்சனைகளை தீர்க்க, ஆடிச்செவ்வாயன்று முருகனை வழிபடுவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து அல்லது செண்பகப்பூ ஆகிய பூக்களை வாழைநாளில் கட்டி வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும்.காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் பூஜை செய்ய வேண்டும்.எட்டு நெய்விளக்குகள் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு விளக்கிலும் நான்கு டைமண்ட் கற்கண்டு, சிறிது குங்குமப்பூ இட வேண்டும்.பூஜையின் முடிவில் முருகனை ஆறு முறை வலம் வந்து மனக்குறை கூறி வேண்டுதல் செலுத்த வேண்டும்.
மருத்துவ நன்மைகள்
ஆடி மாத வழிபாடுகளில் வேப்பிலை, எலுமிச்சை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை தடுக்க இவை இயற்கையான மருந்தாக செயல்படுகின்றன. அதனால், பண்டைய காலத்தில் பெண்கள் விரத நாட்களில் இந்த மூலிகைகளை அடங்கிய நைவேத்தியம் செய்வதும், உட்கொள்வதும் வழக்கமாக இருந்தது.
திருத்தல வழிபாடுகள்
ஔவையார் அம்மன் கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலம். இங்கு ஆடிச்செவ்வாயன்று திருமணத் தடையை நீக்கும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.மீனாட்சி அம்மன் கோவில், மதுரையில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் நடைபெறும்.கருடாழ்வார் பிறந்த நாளாகக் கருதப்படும் ஆடி சுவாதி தினத்தில் கருட தரிசனம், சுந்தர மூர்த்தி சுவாமி புறப்பாடு போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
கனகப்பொடி – ஊட்டச்சத்து நிறைந்த நைவேத்தியம்
முன்னோர் கூறும் பழக்கப்படி, ஆடி வெள்ளிக்கிழமைகளில் உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் கலைத்து, தோசை போல் பரப்பி சுட்டெடுத்து செய்யும் உணவு – கனகப்பொடி. இது வைட்டமின் B, இரும்புச்சத்து நிறைந்ததாக இருப்பதால், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
கேட்டதை கொடுக்கும் ஆடி செய்வாய்
ஆடிச்செவ்வாய் என்பது வெறும் விரத நாள் அல்ல; நம் பாரம்பரியத்தின் ஆன்மிக அடையாளம். பெண்களின் நம்பிக்கைக்கும், நற்செல்வ வாழ்க்கைக்கும் பாலமாக நிற்கும் இந்த வழிபாடுகள், தலைமுறைகளை கடந்தும் தொடரும். இதை அனுசரிப்பதன் மூலம் பெண்கள் வாழ்வில் துன்பம் விலகி, சந்தோஷமும், மங்கலமும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கையே நமக்குக் கலாச்சாரமாக மாறியுள்ளது.