வீட்டில் கஷ்டமே வராமல் இருக்க , காலை எழுந்த பின்பு முதலில் இதை செய்தாலே போதும் ! வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்
வீட்டில் வறுமை நீங்கி, செல்வ வளம் நிலைத்து நிற்க காலை எழுத்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.
காலை தூங்கி எழுந்தவுடன் சமையல் அறைக்கு சென்று இந்த வேலையை செய்து விட்டு பின் சமையல் செய்ய ஆர்மபியுங்கள். நமது வீட்டின் பூஜை அறை எவ்ளவாவு முக்கியமோ அதே அளவிற்கு சமையல் அறையும் மிகவும் முக்கியம். பூஜை அறையை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறமோ அதே போன்று சமையல் அறையையும் சுத்தமாக மிக அவசியம்.
வீட்டின் சமையல் அறை சுத்தமாக வைப்பதன் மூலம் அன்னை மஹாலக்ஷ்மியின் கடாட்சமும் , அன்னபூரணியின் அருளும் ஒரு சேர கிடைக்கும். வீட்டில் வறுமை நீங்கி, செல்வ வளம் நிலைத்து நிற்க காலை எழுத்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.
முன்பெல்லாம் இரவு நேர உணவுக்கு பின், அனைத்து பாத்திரங்களையும் மறுநாள் காலை தான் சுத்தம் செய்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவசரம் அவசரமாக இரவு நேர உணவிற்கு பின் அனைத்தையும் கிளீன் செய்து விட்டு தூங்க செல்கிறோம்.
சமைத்த பாத்திரங்கள் மற்றும் சாப்பிட்ட தட்டுகளை நாம் ஒரு காய வைத்தல் கூடாது. குறைந்த பட்சம் தண்ணீர் தெளித்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சமைத்த பொருட்களை காயவிடாமல் செய்வதால் நம் வீட்டில் உணவிற்கு பஞ்சம் மில்லாமல் இருக்கும்.
இரவில் பாத்திரத்தை சுத்தம் செய்ய இயலாதவர்கள் அடுத்த நாள் காலை முதலில் பாத்திரங்களை அலசி க்ளீன் செய்த பிறகு தான் அன்றைக்கான சமையல் வேலையை துவக்க வேண்டும். அதிலும் குளித்து விட்டு தான் சமையல் வேலையே துவக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். அவ்வாறு குளித்து சமையல் செய்ய இயலாதவர்கள் குறைந்த பட்சம் கழுவி விட்டு தான் சமையல் அறைக்கே செல்ல வேண்டும்.
சமையல் வேலைகள் முடிந்த பிறகு , முதலில் அடுப்பினை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மிக அவசியமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, சமையல் வேலை ஆரம்பிக்கும் முன்பு, அடுப்பினை சுத்தம் செய்து விட்டு,அன்னபூரணி அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு எப்போதும் உங்களது அருள் வேண்டும், கஷ்டமே தெரியாமல் இருக்க வேண்டும். வறுமை எதுவும் நெருங்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து விட்டு , உங்களது சமையல் பணிகளை துவக்க வேண்டும்.
இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் சமையல் அறைக்கு எவ்வளவு மதிப்பு தருகிறோம் என்பதனையம் சமையல் அறையில் வசிக்கும் அன்னபூரணி தாயையும் தலை வணங்குவதற்கு சமம். இப்படி செய்வதால் அந்த வீட்டில் அன்னபூரணியின் அருளால் கஷ்டமும்,வறுமையும் நெருங்காது என்பது ஐதீகம் ஐதீகம்.
ஆக சமையல் செய்ய ஆரம்பிக்கும் முன்பு, அடுப்பை சுத்தம் செய்து விட்டு அன்னபூரணியை மனதில் நினைத்து ஒரு முறை பிராத்தனை செய்து விட்டு சமையலை துவக்குங்கள். இவ்வாறு செய்வதால் பல்வேறு விதங்களில் நமக்கு நன்மை உண்டாகும். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இதனை கடைபிடித்து வாழ்வில் முன்னேறுங்கள்.