2026 பௌர்ணமி விரதத்தின் ரகசிய பலன்கள்: 12 மாதங்களும் அதன் சிறப்பு நன்மைகளும்!
2026 Month wise Pournami Viratham benefits in Tamil: பொதுவாக பௌர்ணமி விரதம் சந்திர தோஷங்கள் நீக்கி, மன அமைதி, செல்வ வளம் தரும்; மாதங்களுக்கு ஏற்ப சிறப்பு பலன்கள் உண்டு. அதைப் பற்ற பார்க்கலாம்.

பௌர்ணமி விரதம்:
மிகவும் சக்தி வாய்ந்த வழிபாட்டு செய்து விரதம் இருந்தால் பெளர்ணமி வழிபாடும், பெளர்ணமி விரதமும். சிவ பெருமானுக்கு மட்டுமின்றி அம்மன், குலதெய்வம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, அவர்களின் அருளை பெறுவதற்கான நாளாகும்.
சாதாரண நாட்களை விட பெளர்ணமி தினத்தில் தெய்வ தரிசனம் செய்வதும், பூஜைகள் செய்வதும் பல மடங்கு அதிக பலனை தரும். பெளர்ணமியில் பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் வழிபாடு செய்து, சந்திரனை தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதுனால் தெய்வீக அருள் கிடைப்பதுடன், நினைத்த காரியங்கள் நிறைவேறும். சந்திரனின் அருளும் கிடைக்கும்.
2026: மாதவாரியாக பௌர்ணமி விரதப் பலன்கள்
2026 இல் 12 மாத பௌர்ணமி விரதத்தின் பலன்: தமிழ் வருடத்தில் மற்றும் 12 மாதங்கள் உள்ளன ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகளை உடையது இந்த சிறப்புகள் கொண்ட மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் மேலும் சிறப்புகளை பெற்று அந்த சிவனின் அருள் நமக்கு கிடைப்பதற்கு எப்படி விரதம் இருக்க வேண்டும் ஒவ்வொரு மாதமாக பார்க்கலாம்.
சித்திரை : தமிழ் வருடங்களிலும் முதல் மாதமான சித்திரை மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் நமக்கு உணவான தானியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வைகாசி: வைகாசி மாதம் திருமணத்திற்கும் சுப நிகழ்ச்சிக்கும் ஏற்ற மாதமாக கருதப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டியது என்றாலும் வைகாசி மாதமே நடைபெறும். அது மட்டுமல்ல வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த மாதம் என்றும் கூறுவார்கள் ஏனென்றால் இதில் தான் வைகாசி விசாகம் வரும்.வைகாசி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் திருமணம் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆகையால் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் வைகாசி பௌர்ணமிக்கு விரதம் இருக்க வேண்டும்.
Month-wise Pournami benefits 2026
ஆனி: ஆனி மாசம் பௌர்ணமி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது குழந்தை இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஆனி பௌர்ணமி நாளன்று விரதம் கடைபிடித்து வந்தால் நிச்சயமாக குழந்தை வாக்கியம் கிடைக்கும்.
ஆடி: ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த நாளாக கூறப்படுகிறது இந்த நாட்களில் அம்மனின் அருள் கிடைக்கும். ஆணியில் குழந்தை பாக்கியம் பெற்று ஆடியில் வளைகாப்பு போடுவது சிறப்பு .அம்மனுக்கு கூட ஆடி மாதம் முழுவதும் வளைகாப்பு செய்யப்பட்டு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். ஆடி பௌர்ணமி அன்று விரதம் இருந்தால் வளமும் நலமும் செல்வமும் பெற்று நலம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
ஆவணி: ஆவணி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் செல்வம் பெருகி வலியும் என்று கூறப்படுகிறது.
புரட்டாசி: புரட்டாசி என்றாலே அது திருமாலுக்கு உகந்த மாதம் என்று நமக்கு தெரியும். புரட்டாசி முழுவதும் அசைவம் சாப்பிடாமல் இருந்து வருவார்கள் அது மிகவும் சிறப்பு. அறிவியலின் முறைப்படி கூட புரட்டாசி மாதம் அதிகம் வெப்பம் நிகழ்வு கூடிய மாதமாக கருதப்படுகிறது அதனால் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நமது உடலுக்கு நலம் என்றும் அறிஞர்கள் கூறுவார்கள். புரட்டாசி மாதம் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் நம்மிடம் லட்சுமி கடாட்சம் நிகழும்.அது மட்டுமல்லாமல் வீட்டிலும் லட்சுமி தங்கும் என்றும் கூறப்படுகிறது.
2026 Pournami Dates
ஐப்பசி: ஐப்பசி மாதம் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது இந்த மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் தானியம் பெருகி பசி மற்றும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
கார்த்திகை: கார்த்திகை என்றாலே அது முருகனையே குறிக்கும் கார்த்திகை ஒண்ணாம் தேதி அன்று முருகனுக்கு மாலை போடுதல் அது மட்டுமல்லாமல் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுதலும் மங்களகரமான மாதமாக இது கருதப்படுகிறது இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் வரும் அது திருவண்ணாமலை தீபத்தூரில் தீபம் ஏற்றப்படும் இது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக தமிழ் வருடத்தில் கூறப்படும். இந்த மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் புகழும் பேரும் நிலைத்து நிற்கும் என்றும் கூறப்படுகிறது
மார்கழி: மார்கழி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் நமது ஆரோக்கியத்தில் ஏதேனும் நோயில் இருந்தால் அதில் விரைவில் குணமடைந்து ஆரோக்கியத்தில் சிறப்படையும் என்று கருதப்படுகிறது.
தை: தை மாதம் என்பது விவசாயத்துக்குரிய மாதம் என்று கருதப்படும். தை முதல் நாளன்று தைப்பொங்கல் என்று நமக்கு அனைவருக்கும் தெரிந்தது. உடைக்காக காத்துக் கொண்டிருக்கும் நெற்பயிர்கள் அன்று அறுக்கப்பட்டு நமக்கு உணவாக வருகிறது இந்த சிறப்புமிக்க மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் தேவையான அனைத்து நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது
மாசி: மாசி மாசத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் நமது அனைத்து துன்பங்களும் விலகி நன்மைகளை கிடைக்கும்.
பங்குனி: பங்குனி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் நம் மற்றவர்களுக்கு தர்மம் செய்ததற்கு பதில் அந்த பலன் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது