MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • 14 இயக்குனர்கள் இணைந்து ஒரே நாளில் எடுத்து முடித்து... கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம் பற்றி தெரியுமா?

14 இயக்குனர்கள் இணைந்து ஒரே நாளில் எடுத்து முடித்து... கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம் பற்றி தெரியுமா?

இன்றைய கால கட்டத்தில் ஒரு படம் எடுத்து முடிக்க வருடக்கணக்கில் ஆகும் நிலையில், தமிழ் சினிமாவில் ஒரே நாளில் எடுத்து முடிக்கப்பட்ட படம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 13 2024, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
suyamvaram

suyamvaram

சினிமா தற்போது பல்வேறு வளர்ச்சியை கண்டுவிட்டாலும் இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து பின்னணி பணிகள் உள்பட ஒட்டுமொத்த பணிகளையும் நிறைவு செய்ய கிட்டத்தட்டா ஆறு மாதமாவது ஆகிவிடும். அப்படி இருக்கையில் 1999ம் ஆண்டே தமிழில் ஒரு படம் ஒரே நாளில் எடுத்து முடிக்கப்பட்டு, அதன் இசையமைப்பு, படத்தொகுப்பு என அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. அந்த படத்தின் பெயர் தான் ‘சுயம் வரம்’.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
suyamvaram movie

suyamvaram movie

இந்தியாவிலேயே ஒரே நாளில் படமாக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு முழு பணிகளும் நிறைவு செய்யப்பட்ட முதல் திரைப்படம் சுயம் வரம் தான். குறித்த நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் பல இயக்குனர்கள் திண்டாடிய கதையை கேட்டிருப்போம், ஆனால் 14 திறமைவாய்ந்த இயக்குனர்கள் இணைந்து ஐந்து திருமண காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகளுடன் கூடிய ஒரு முழுநீள படத்தை ஒரே நாளில் எடுத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... Rashmika Mandanna : பெங்களூருவில் ரூ.8 கோடியில் பங்களா.. மும்பையில் ஆடம்பர வீடு.. ராஜ வாழ்க்கை வாழும் நடிகை..

34
Tamil Movie suyamvaram

Tamil Movie suyamvaram

அதிக நட்சத்திரங்களை வைத்து அதிவேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது சுயம்வரம் திரைப்படம். 14 இயக்குனர்கள், 45 உதவி இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 4 படத்தொகுப்பாளர்கள், 4 இசையமைப்பாளர்கள், 25 அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என இத்தனை பேரின் கூட்டு முயற்சியால் தான் தமிழ் சினிமா இத்தகைய மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.

சுயம்வரம் படத்தை சுந்தர் சி, கே.எஸ்.ரவிக்குமார், பி வாசு, செல்வா, சுந்தர்ராஜன் உள்பட 14 இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். மேலும் இதில் அப்பாஸ், அர்ஜுன், பிரபுதேவா, பிரபு, கார்த்திக், சத்யராஜ், பாக்கியராஜ், ஊர்வசி, ரம்பா, விஜயகுமார், நெப்போலியன், பார்த்திபன், பாண்டியராஜன், சுவலட்சுமி உள்பட 25க்கும் மேற்பட்ட பிரபலங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

44
suyamvaram Movie Guinness Record

suyamvaram Movie Guinness Record

இந்த படத்தின் கதை என்னவென்றால், 60வயது முதியவரான விஜயகுமார் 60வது பிறந்தநாளை கொண்டாடும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அப்போது தனது 9 மகன்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய கடைசி ஆசையை சொல்கிறார். அவர் உயிருடன் இருக்கும்போதே திருமணம் செய்துவிட வேண்டும் என முடிவெடுத்து அந்த 9 பசங்களுக்கும் மணப்பெண்ணை தேடுகின்றனர். அவர்களுக்கு பெண் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தின் சாதனையை இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து! பிரபல நடிகரின் கால் எலும்பு முறிந்தால் பரபரப்பு!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
லாரி பின்னால் இருக்கும் ‘OK’... உண்மையில் இதுதான் அர்த்தமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய ரகசியம்!
Recommended image2
Samosa History: சமோசா இந்திய உணவா? ஈரானில் தொடங்கி இந்தியா வரை வந்த சுவையான பயணம்!
Recommended image3
Ocean Salinity: கடல் நீர் ஏன் உப்பா இருக்கு? ஆற்று நீர் ஏன் அப்படி இல்லை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved