- Home
- Gallery
- கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து! பிரபல நடிகரின் கால் எலும்பு முறிந்தால் பரபரப்பு!
கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து! பிரபல நடிகரின் கால் எலும்பு முறிந்தால் பரபரப்பு!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thug Life
'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக த்ரிஷா நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில்.. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
STR 48
கமல்ஹாசன் நாயகன் படத்திற்கு பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே ராஜஸ்தான், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
கமல்ஹாசன், வில்லன்களுடன் மோதும் அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுவையில் ல் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது, ஜோஜு ஜார்ஜ் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்படவே, உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள், கண்டிப்பாக ஜோஜூ ஜார்ஜ் ஓய்வில் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர் அவர் கொச்சிக்கு அனுப்பப்பட்டார். ரசிகர்கள் பலர் விரைவில் ஜோஜூ ஜார்ஜ் உடல்நிலை குணமாக வேண்டும் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஜோஜூ ஜார்ஜ் காலில் கட்டுடன் நடந்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் ஐரோப்பாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.