- Home
- Gallery
- Rashmika Mandanna : பெங்களூருவில் ரூ.8 கோடியில் பங்களா.. மும்பையில் ஆடம்பர வீடு.. ராஜ வாழ்க்கை வாழும் நடிகை..
Rashmika Mandanna : பெங்களூருவில் ரூ.8 கோடியில் பங்களா.. மும்பையில் ஆடம்பர வீடு.. ராஜ வாழ்க்கை வாழும் நடிகை..
Rashmika Mandanna Net Worth : நடிகை ராஷ்மிகா மந்தனா பல ஆடம்பர வீடுகள், விலையுயர்ந்த கார்கள் ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரின் விலையுயர்ந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Rashmika Mandanna
நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். வெறும் 7 ஆண்டுகளிலேயே ரசிகர்களின் இதயங்களில் தனக்கென நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார்.
Rashmika Mandanna viral pics
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 பட்டியலில் ராஷ்மிகா இடம்பெற்றார். ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.45 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.. எனவே பல ஆடம்பரமான வீடுகள், விலையுயர்ந்த கார்கள் ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ராஷ்மிகா மந்தனாவின் விலையுயர்ந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Rashmika Mandanna Latest photos
கூர்க், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா, ஆடம்பரமான மற்றும் அழகான சொத்துக்களை வைத்திருக்கிறார். ராஷ்மிகாவுக்கு கூர்கில் ரூ. 8 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பங்களா உள்ளது.
Rashmika Mandanna luxurious lifestyle
இதுதொடர்பான புகைப்படங்களை ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த பிரம்மாண்ட வீடு ஒரு பெரிய தோட்டப் பகுதியைக் கொண்டுள்ளது, இது அழகாக செதுக்கப்பட்ட மர தளபாடங்களுடன் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. செழிப்பான பசுமையால் சூழப்பட்ட இந்த வீடு பழுப்பு நிற சாயல்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
Rashmika Mandanna house
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் பிரபலமான விடுமுறை இடமான கோவாவில் ஒரு பங்களாவை வாங்கினார் ராஷ்மிகா.
Rashmika Mandanna home
குட் பை (2022) படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், மும்பையில் ஒரு விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். மும்பையில் புதிய வீட்டை வாங்கிய அவர் இதுகுறித்து பேசிய போது “ நான் வீட்டைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் செல்லப் பிராணியான ஆராவுக்கும் அந்த இடம் பிடிக்கும். இப்போது நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம்.
Rashmika Mandanna with pets
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் வேலை செய்யத் தொடங்கியபோது, புதிய வீடுகளுக்கு சென்றேன். இப்போது நான் இங்கே இருக்கிறேன், இங்கேயும் எனக்கென்று ஒரு புதிய இடம் இருக்கிறது” என்று கூறியிருந்தார்
தனது விரிவான ரியல் எஸ்டேட் முதலீடுகள் தவிர, ராஷ்மிகா மந்தனா பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். ரூ.1.84 கோடி மதிப்புள்ள Range Rover Sport சொகுசு காருடம் அவரிடம் உள்ளது.
Rashmika Mandanna Photos
மேலும் ரூ.60 லட்சம் மதிப்பு Audi Q3 ஆடம்பர கார், 50 லட்சம் மதிப்புள்ள Mercedes Benz C-Class கார் மற்றும் Toyota Innova, and Hyundai Creta ஆகிய கார்களையும் ராஷ்மிகா வைத்திருக்கிறார்.
Rashmika Mandanna New Photos
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ள புஷ்பா 2 படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரெயின்போ, கேர்ள் ஃபிரண்டு என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர் தனுஷின் குபேரா படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.